• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-10 09:29:22    
ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சீன சுதேசி மருத்துவர் fei long

cri
வடக்கு சீனாவின் சான் சி மாநிலத்தின் tai yuan நகரிலுள்ள சான் சி மூளைக்கடுத்த திமிர்வாதம் சிகிச்சை மருத்துவமனையில் ஒரு கேமரூண் நாட்டு மருத்துவர் உள்ளார். பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் கடந்து சீனாவுக்கு வந்த அவர் சீன சுதேசி மருத்துவம் கற்றுக்கொண்டார்.

எமது செய்தியாளர் இந்த மருத்துவமனைக்கு சென்றிருந்த போது, ஒரு சிகிச்சை அறையில், அவர் சீனாவின் பாரம்பரிய மருத்துவ வழிமுறை மூலம் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் ஈடுபட்டிருந்தார். இந்த அறையில்

சில குழந்தைகளின் பெற்றோர்களும் உள்ளனர். ஒரு குழந்தை fei longவைப் பார்த்தவுடனே அழத் தொடங்கியது

ஊசி குத்தக் கூடும் என்று எண்ணி குழந்தை பயங்துவிட்டது. குழந்தைகள் மருத்துவரை விரும்புவதில்லை. ஹாஹா என்றார் fei long.

பல குழைந்தைகள் fei longவை கறுப்பு மாமா என்று அழைக்கின்றனர். 4 ஆண்டுகளுக்கு முன், சீனச் சுதேசி மருத்துவத்தைக் கற்றுக்கொள்ள கேமருண் அரசு அவரை சீனாவுக்கு அனுப்பியது. சான் சி மாநிலத்தின் சீன சுதேசி மருத்துவ கல்லூரியில் அவர், குழந்தை நரம்பியல் சிகிச்சை பற்றிய முதுகலை பட்டம் பெற்றார். பிறகு, சான் சி மூளைக்கடுத்த திமிர்வாதம் சிகிச்சை மருத்துவமனையில், மூளைக்கடுத்த திமிர்வாத நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்குச் சிகிச்சை அளித்து வருகின்றார். கேமரூணில் இருந்த போது தான், சீன சுதேசி மருத்துவத்தைக் கற்றுக்கொண்டதாக அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது

கேமரூணில் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயின்ற போது, சில இயற்கை சிகிச்சை வழிமுறைகளில் கவனம் செலுத்தத் துவங்கினேன். இந்த துறையில், சீன சுதேசி மருத்துவம் மிகச் சிறப்பாக வளர்ச்சி அடைந்தது. சீனச் சுதேசி மருத்துவத்தில் அக்குபங்ச்சர் , மிகவும் சிறப்பான பயன் கொண்டது. ஆனால், வெளிநாட்டவரைப் பொறுத்த வரை, சீன மருத்துவத்தின் தத்துவத்தையும் கோட்பாட்டையும் கற்றுக்கொள்வதற்கு கடினமானது. புரிவதற்கு அதிக நேரம் தேவைப்படும் என்றார் அவர்.

சீனாவுக்கு முதன் முதலாக வந்த போது கண்டவை இதுவரை அவரின் நினைவில் உள்ளது. விமானத்திலிருந்து இறங்கி காரில் ஏறி, நேரில் கண்டது அவரை வியப்படையச் செய்தது. அவர் கூறியதாவது,

பெய்ஜிங் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, காரில் ஒரு மணி நேர பயணம் மூலம் ஹோட்டல் சென்றடைந்தேன். வழியில் ஒரே வியப்பு. பெய்ஜிங் ஒரு பெரிய நகரம். சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளது. இது எனது முதலாவது உணர்வு. சீனாவுக்கு முதன்முதலாக வருகை தரும் 95 விழுக்காட்டினருக்கு இத்தகைய உணர்வு உண்டு. ஆச்சரியமான உணர்வு. wow என்றார் அவர்.

பெய்ஜிங்கில் சில நாட்கள் தங்கிய பின், அவர் சான் சி மாநிலத்திலுள்ள சீன சுதேசி மருத்துவ கல்லூரியில் கல்வி பயிலத் துவங்கினார். அதேவேளையில், சான் சி மூளைக்கடுத்த திமிர்வாத சிகிச்சை மருத்துவமனையில், அவர் குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளித்தார். இந்த மருத்துவமனையின் இயக்குநர் guo zhi xin அம்மையார் கூறியதாவது  

துவக்கத்தில், பல நோயாளிகளுக்கு அவரைப் புரியவில்லை. கறுப்பு மாமாவிடமிருந்து சிகிச்சை பெற குழந்தைகள் விரும்பவில்லை என்றார் அவர்.

ஆனால் நிலைமை விரைவில் மாறியது

அவர் மிகவும் பதமாக சிகிச்சை அளிப்பதாக, குழந்தைகள் உணர்ந்தனர். அவர் அளித்த மசாஜ் சிகிச்சை நலமானது என்று கருதினர். பிறகு, கறுப்பு மாமாவின் சேவை தேவை என்று பலர் கோரினர். இதன் விளைவாக, அவருடைய நோயாளிகளின் எண்ணிக்கை விரைவில் அதிகரித்தது. நோய்வாய்பட்ட குழந்தைகளின் தேவையை நிறைவேற்ற, அவர் இயன்ற அளவில் தனது பணி நேரத்தை நீட்டிக்கின்றார் என்றார் guo zhi xin அம்மையார்.

இது பற்றி fei long கூறியதாவது

குழந்தைகளை மிகவும் நேசிக்கின்றேன். நான் களைப்படைகின்றேன் என்ற காரணத்தால் பணியை நிறுத்த முடியாது. இயன்ற அளவில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க முயற்சிக்க வேண்டும் என்றார் அவர்.

மூளைக்கடுத்த திமிர் வாத நோய் ஏற்பட்ட குழந்தைகள் பெரும்பாலானோர் மூளை மற்றும் விளையாட்டு ஆற்றல் குன்றியவர்களாவர். ஆகையால், அவர்களுக்கான சிகிச்சை பணி, மிகவும் நீண்ட நேரமும் பொறுமையும் தேவைப்படும் பணியாகும். Fei long உடன் சேர்ந்து பணி புரியும் மருத்துவர் shi xiao jie இந்த வெளிநாட்டு சகப் பணியாளரை வெகுவாகப் பாராட்டினார். அவர் கூறியதாவது

எங்களை விட அவர் மேலும் உணர்வுப்பூர்வமாக பணி புரிகின்றார். நோயாளிகளின் மீதான மனப்பாங்கு உள்ளிட்ட பல அம்சங்களில் அவர் சிறப்பாக செயல்படுகின்றார். மூளைக்கடுத்த திமிர் வாத குழந்தைகள் மீது அவர் அதிக அன்பு காட்டுகின்றார். இந்த இலட்சியத்தை அவர் மிகவும் விரும்புகின்றார் என்றார் அவர்.

தற்போது, உள்ளூர் மக்களின் வாழ்க்கையில் தான் முற்றிலும் ஒன்று கலந்ததாக fei long கருதுகின்றார். சான் சி மக்களில் ஒருவராக, இங்கு நிகழ்ந்த பெரும் மாற்றத்தைக் கண்டு அவரும் மகிழ்ச்சி அடைகின்றார்.

பொழுது போக்கில் அவர் dai ji, wu shu ஆகிய உடல் பயிற்சிகளில் ஈடுபட்டார். சீனாவில் தங்கிய 4 ஆண்டுகள், தனக்கு முக்கிய செல்வாக்கு ஏற்பட்டுள்ளது. வாய்ப்பு இருந்தால், சீனாவில் தொடர்ந்து தங்க வேண்டும் என்று அவர் விரும்புகின்றார். அவர் கூறியதாவது

சீனாவில் வாழ்ந்த இக்காலம் எனது அதிர்ஷ்டமுள்ள அனுபவமாகும். ஏனென்றால், சீனாவில் நாள்தோறும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. சீன மக்களுடன் பழகி, அவர்களின் வாழ்க்கையை புரிந்து கொள்கின்றேன். இங்கே மேலும் அதிக நேரமாக தங்க வேண்டும் என்று விரும்புகின்றேன். சான் சி மாநிலத்தை நேசிக்கின்றேன். சீனாவை நேசிக்கின்றேன். சீனாவில் ஒரு குடும்பத்தை உருவாக்க விரும்புகின்றேன் என்றார் அவர்.