வாணி – வேறு ஒரு தட்டில், 3 கிராம் உப்பு, 3 கிராம் சர்க்கரை, சிறிதளவு மிளகுத்தூள் ஆகியவற்றை 3 தேக்கரண்டி தண்ணீருடன் கிளறவும். பச்சை மிளகாயையும் சிவப்பு மிளகாயையும் பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
க்ளீட்டஸ் – வாணலியை அடுப்பின் மீது வைத்து, 3 தேக்கரண்டி சமையல் எண்ணெயை இதில் ஊற்றவும். மீன் துண்டுகளை வாணலியில் போட்டு, சுமார் 20 வினாடிகள் வதக்கவும். மீன் துண்டுகள் விரைவில் வெள்ளை நிறமாகிவிடும். அப்போது, அவற்றை வெளியே எடுக்கலாம்.
வாணி – வாணலியில் மீண்டும் ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெயை ஊற்றவும். பிறகு, இதில் இஞ்சி, வெங்காயத்தலை, பச்சை மிளகாய் மற்றும் சிவப்பு மிளகாய் துண்டுகளை இதில் கொட்டலாம். பட்டாணியையும் அதில் சேர்க்கவும். அவற்றை நன்றாக வதக்க வேண்டும். சுமார் ஒரு நிமிடத்துக்குப்
பின், தயாரிக்கப்பட்ட சாஸ் இதில் ஊற்றலாம். க்ளீட்டஸ் – கடைசியில், மீன் துண்டுகளை வாணலியில் போடலாம். வதக்கும் போது, நல்லெண்ணயை சேர்க்கவும். வாணி – இப்போது, இன்றைய சுவையான மீன் உணவு தயார்.
வாணி – கிளீட்டஸ், தமிழகத்தில் மக்கள் அடிக்கடி மீன் வகைகளைச் சாப்பிடுகின்னரா? க்ளீட்டஸ் – தமிழகம் கடலோர பிரதேசத்தில் அமைந்துள்ளது. அங்குள்ள மீன் வகைகள் அதிகம். மக்கள் மீன் வகை உள்ளிட்ட நீர் வாழ் இனங்களைச் சாப்பிடுவதுண்டு.
வாணி – எனக்கு தெரியும். சரி, நேயர்களே. இத்துடன் இன்றைய சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி நிறைவடைகின்றது. க்ளீட்டஸ் – கூடுதலான தகவல்களை அறிந்து கொள்ள எமது இணையதளத்தைப் பயன்படுத்தலாம். நிகழ்ச்சி பற்றிய கருத்துக்களைத் தெரிவிப்பதை வரவேற்கின்றோம்.
|