நிகழ்ச்சிகளை கேட்டு சுறுசுறுப்பாக தெரிவித்த கருத்துக்கள்
cri
கலை: உங்கள் எண்ணங்களின் வண்ணத்தொகுப்பான நேயர் நேரம் நிகழ்ச்சியில் மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். எமது நிகழ்ச்சிகளை நாள்தோறும் கேட்டு கடிதங்கள், மின்னஞ்சல்கள் வாயிலாக கருத்துக்களை பகிர்ந்து எம்மை ஊக்கமூட்டி வரும் உங்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.
........முதலில் சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் நிகழ்ந்த நிலநடுக்கம் பற்றி கவனம் செலுத்திய நேயர்களின் கருத்துக்களை பார்க்கின்றோம்.கடும் இழப்பை எதிர்நோக்கியுள்ள சீன மக்கள் மன உறுதியை இழக்காமல் துணிவுடன் தாயகத்தை புனரமைத்து ஒலிம்பிக்கில் வெற்றி பெறுவது உறுதி என்று திண்டுக்கல் சிறுநாயக் கன்பட்டி கே வேலுச்சாமி தெரிவித்தார். அவருகடைய ஆறுதல் கருத்தை கேளுங்கள்........
.........அடுத்து நிலநடுக்கத்தில் பெற்றோரை இழந்த அனாதை குழந்தைகளுக்கு துரையூர் த குறிஞ்சிக் குமரன் ஆறுதல் தெரிவித்துள்ளார். இந்த ஆறுதல் செய்தியை கேளுங்கள்......
க்ளீட்டஸ்: மணச்சநல்லூர் என். சண்முகம் எழுதிய கடிதம். சீனாவில் ஊனமுற்றொருக்கான காப்புறுதி பற்றி அண்மையில் நமது வானொலியில் வழங்கிய தகவல்களை கேட்டேன். ஊனமுற்றோருக்கு எந்த குறையுமில்லாமல் எல்லாவிதமான உதவிக்கொள்கைகளையும் மேற்கொண்டு, அவர்களது கல்வி, மருத்துவம். காப்பீடு முதலியவற்றை ஏற்படுத்தித் தரும் சீன அரசை பாராட்டுகிறேன். கலை: இலங்கை காத்தான்குடி எம். எஸ். எம். அன்சார் எழுதிய கடிதம். சீன வானொலியை மாணவர்களாகிய நாங்கள் மட்டுமல்ல எங்கள் ஆசிரியர்கள் கூட கேட்டு வருகின்றனர். சில வேளைகளில் நண்பர்கள் நாங்கள் பள்ளியிலிருந்து வீடு திரும்பி, படித்தபின் மீண்டும் ஒன்றாக அமர்ந்து வானொலியை கேட்பதுமுண்டு. நிகழ்ச்சிகளும், செய்திகளும், அவற்றில் இடம்பெறும் தகவல்களும் எங்களுக்கு பயனுள்ளவையாக இருக்கின்றன.
க்ளீட்டஸ்: கேரளா பாலக்காடு நேயர் டி.வி.ராமசுவாமி எழுதிய கடிதம். மார்ச் திங்களில் நடைபெற்ற கூட்டத்தொடர் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சிகள் அருமை. இவற்றின் மூலம் சீனாவின் அரசியல் அமைப்பு முறை பற்றி கூடுதலாக தெரிந்துகொள்ள முடிந்தது. பயனுள்ள தகவல்கள், நன்றி.
...........அடுத்து திபெத் பற்றி மதுரை என் இராமசாமி தெரிவித்தகருத்தை கேளுங்கள்.,.........
கலை: தேவநல்லூர் எஸ். செந்தில்குமார் எழுதிய கடிதம். தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியை தொடர்ந்து கவனமுடன் கேட்டு வருகிறோம். உங்கள் குரல் நிகழ்ச்சியில் அண்மையில் மலர் சீன வானொலி நேயர் மன்றத்தினரின் நிகழ்ச்சி மிக அருமையாக இருந்தது. க்ளீட்டஸ்: கோவை சுந்தராபுரம் எஸ். முரளிராஜ் எழுதிய கடிதம். இசை நிகழ்ச்சியில் திலகவதி அவர்கள் பாடல்களின் பின்னணி பற்றி குறிப்பிட்டு அதன் பொருளையும் விவரிப்பது அருமை. அவ்வண்ணமே மலர்ச்சோலை நிகழ்ச்சியில் இடம்பெறும் தகவல்களும் அருமை. செய்தித்தொகுப்புகளும் பயனுள்ள தகவல்களை தாங்கி வருகின்றன.
கலை: புதுகை ஜி. வரதராஜன் எழுதிய கடிதம். பெய்சிங் ஒலிம்பிக் போட்டி சிறப்பாக நடைபெறவேண்டும் என்ர நோக்கில் சுர்றுச்சூழல் பாதுகாப்பு, காற்றுத்தரத்தை உயர்த்திட உள்மங்கோலிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் ஆகியவை பற்றி அண்மையில் செய்தித்தொகுப்பு நிகழ்ச்சியில் அறிந்துகொள்ள முடிந்தது. பாலைவன நிலப்பரப்பில் கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலை மாற்றி, பெய்சிங் நகரிலிருந்து 180 கி.மீ தூரம் வரை தூய காற்றுக்கு உத்திரவாதம் தரும் வகையில் பல்வகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுக்குரியது. மின்னஞ்சல் பகுதி …… வளவனுர் புதுப்பாளையம், எஸ்.செல்வம்…… மே திங்கள் 23 ஆம் நாள் இடம்பெற்ற •பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுச் செய்திகள்• என்ற நிகழ்ச்சியைக் கேட்டேன். நிகழ்ச்சியில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான செய்திகளை விட, நிலநடுக்கம் தொடர்பான செய்திகளுக்கு முதன்மையும் முக்கியத்துவமும் வழங்கப்பட்டது என்னைப் பெரிதும் கவர்ந்தது. நிலநடுக்கம் ஏற்பட்ட பின்பு, ஒலிம்பிக் எழுச்சி சற்றே தணிவடைந்தது போல எனக்கு தோன்றுகின்றது. நிலநடுக்கப் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை மீட்கப்பட்ட பின்பு, ஒலிம்பிக் எழுச்சி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என கருதுகின்றேன்.
......ஊத்தங்கரை கவி.செங்குட்டுவன்...... (24.05.2008)நேயர் நேரம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரையாடல் கேட்டேன். அதில் சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் ஏற்பட்ட நில நடுக்கம் பற்றியும், அதன் விளைவாக ஏற்பட்ட பாதிப்புகள் பற்றியும், அதன் தொடர்ச்சியாக சீன அரசும் மக்களும் மேற்கொண்ட மீட்புதவி நடவடிக்கைகள் பற்றியும் பல செய்திகள் விரிவாக பரிமாறிக்கொள்ளப்பட்டது. இதன் மூலம் பல அரிய தகவல்களை அறிய முடிந்தது. அத்தோடு இந்நிகழ்வு குறித்து நேயர்கள் தங்களோடு பகிர்ந்துக்கொண்ட கருத்துக்களையும் ஒலிபரப்பியமை பாராட்டுக்குறியது .......பாண்டிச்சேரி ஜி. ராஜகோபால்....... திருமதி கலையரசி அம்மையார் அவர்கள் வாசித்து வழங்கிய செய்தித் தொகுப்பின் மூலமாக, நிலநடுக்கத்தால் ஏற்படும் இழப்பை குறைக்க சீன அரசு கையாளும் முயற்சிகளைக் கேட்டு ரசித்தேன். சிச்சுவான் மாநில நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை வேறு இடங்களில் குடியமர்த்தி புனரமைப்பு பணியினை உற்சாகத்துடன் கையாளும் அதேவேளை, நிலநடுக்கதால் நிகழக்கூடிய இழப்பை குறைப்பதும், குறிப்பாக பாதிக்கப்பட்ட நீர் சேகரிப்பு வசதிகள் நிலநடுக்கத்தினால் உடைந்த ஏரிகள் ஆகியவற்றால் நிகழக்கூடிய ஆபத்தை சமாளிப்பது சீனாவின் பல்வேறு துறைகளின் கவனத்தை ஈர்த்துள்ளது அருமை. மக்களின் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்பை உத்திரவாதம் கொடுக்க சீனா பாடுபடுவது வரவேற்கப்படவேண்டிய ஒன்று
மதுரை 20, R.அமுதாராணி அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியின் மூலம், நம்முடைய இக்கால மற்றும் எதிர்கால வாழ்வை உருவாக்கும் ஆதாரம் உணவு பழக்கவழக்கங்களே என்பதை அறிந்து கொண்டேன். பல்வகை ஊட்டசத்து மிக்க உணவே, உடல் நலத்திற்கு மிக முக்கியம். மிகுந்த சத்தான உணவுமுறையே பிறக்கின்ற குழத்தையில் ஆனா பெண்ணா என்பதை நிர்ணயிக்கின்ற அளவுக்கு கூட செல்வாக்கை ஏற்ப்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இத்தகைய பயனுள்ள செய்திகளை நேயர்களுக்கு வழங்கியுள்ள தமிழ்ப்பிரிவிற்கு எனது பாராட்டுகள்.
......பாண்டிச்சேரி என்.வசந்தி...... அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத் தலைவர் திரு.எஸ்.செல்வம் அவர்களின் அறிமுகத்தில் கடந்த சில திங்கள் காலமாக நான் சீன வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு வருகிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தங்களின் இணைய தளத்தையும் நான் பார்வையிடுகின்றேன்.சீனர்கள், தமிழை சிறப்பான முறையில் பேசி நிகழ்ச்சிகளை வழங்கும்போக்கு என்னை பெரிதும் கவர்கின்றது.பாராட்டுக்கள். கடந்த சில நாட்களாக சீனாவின் சிசுவான் மாநிலத்தில் நிகழ்ந்த கடும் நில நடுக்கம் பற்றிய தகவல்களின் மீது நான் கவனம் செலுத்தி வருகின்றேன். சீன வானொலியின் வழியாக, நிலநடுக்கம் பற்றிய செய்திகளை முழுமையான முறையில் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
|
|