இன்று, சி ச்சுவன் வென் ச்சுவன் மாவட்டத்தின் யிங் சியோ வட்டத்தின் அருகிலுள்ள கெவிமலைப்பள்ளத்தின் காட்டில், விபத்திற்குள்ளான ஹெலிகப்டரை சீனாவின் மீட்புதவி பணியாளர்கள் கண்டறிந்தனர். அதில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர்.
சீன அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஹூ ச்சின் தாவ், உயிரிழந்தோருக்கு இரங்கலையும், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்தார். அதனை தேடி கண்டறிந்தவர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளருக்கு நன்றி தெரிவித்தார்.
மே திங்கள் 31ம் நாள் பிற்பகல், பேரிடர் நீக்க மீட்புதவி பணி கடமையாற்றிய சீனாவின் சந்து இராணுவ வட்டாரத்தின் இந்த ஹெலிகப்டர் சி ச்சுவன் வென் ச்சுவன் மாவட்டத்தின் யிங் சியோ வட்டத்தின் அருகில் விபத்தில் சிக்கியது குறிப்பிடதக்கது.
|