• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-10 19:42:09    
சீன இராணுவ துறையின் மீட்புதவி பணி

cri

ஆசியான், சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகியவற்றின் ஆயுத படை சர்வதேச பேரிடர் நீக்க மீட்புதவி கருத்தரங்கு இன்று சீனாவின் ஹெ பெய் மாநிலத்தில் துவங்கியது. சீன இராணுவ படைப்பிரிவு, பேரிடர் நீக்க மீட்புதவி பணியில் ஆற்றிய பங்குகளை, இக்கூட்டத்தில் கலந்துகொண்ட வெளிநாட்டு இராணுவ பிரதிநிதிகள் உயர்வாக பாராட்டினர்.

நிலநடுக்கம் நிகழ்ந்த பின், சீன இராணுவ படைப்பிரிவு பேரிடர் நீக்க மீட்புதவி பணியில் கலந்துகொண்டு. உள்ளூர் பிரச்சினைகளை ஆக்கப்பூர்வமாக தீர்த்தன என்று சீனாவிலுள்ள வியட்நம் இராணுவ விவகார அதிகாரி திரியு குங் ஜின் தெரிவித்தார். இப்பேரிடர் நீக்க மீட்புதவி பணியில், சீன மக்கள் விடுதலைப்படைவீரர்கள் சிறந்த பங்காற்றினர் என்று மலேசிய ஆயுதப் படைப்பிரிவு மருத்துவ மனையின் தலைவர் மூஸ்ரன் பாராட்டு தெரிவித்தார்.

சீன தேசிய பாதுகாப்பு அமைச்சின் வெளிநாட்டு விவகார பணியகத்தின் தலைவர் ச்சியன் லி குவா இன்று இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட போது, சீன சி ச்சுவன் வென் ச்சுவன் நிலநடுக்கத்துக்கு பின், பேரிடர் நீக்க மீட்புதவி பணியில் சீனாவுக்கு அளித்த உதவிகளை உயர்வாக பாராட்டினார்.

இந்நிலநடுக்கத்தால், கடுமையான பாதிப்பு மற்றும் இழப்பு ஏற்படுத்தப்பட்டன. சர்வதேச சமூகம், அதில் கவனம் செலுத்தி, இரக்கம் தெரிவித்தன. அமெரிக்கா, ரஷியா, பெலாரஸ், உக்ரைன், சிங்கப்பூர், தென் கொரியா, இஸ்ரேல், செர்பியா, மண்டி நீக்கிரோ, ஜெர்மனி, வியட்நம் ஆகிய நாடுகளின் இராணுவ துறைகள், பல்வேறு முறைகளில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவி அளித்தன என்று செய்தியாளருக்குப் பேட்டி அளித்த போது அவர் தெரிவித்தார்.