திபெத் விவகாரத்தை சீனா திறமையாக கையாண்டு வருகின்றது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சிங் காங் இன்று பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இதை வலியுறுத்தினார்.
திபெத் தன்னாட்சி பிரதேசம் சீனாவிலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகும். திபெத் விவகாரம் சீனாவின் உள் விவகாரமாகும். வெளிநாடுகளுக்கு அதில் தலையிடும் உரிமை இல்லை. திபெத் விவகாரத்தை சீனா திறமையாக கையாண்டு வருகின்றது என்று சிங் காங் கூறினார்.
|