பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், இன்று யுன் நான் மாநிலத்தின் தி ச்சிங் திபெத் இனத் தன்னாட்சிச் சோவின் Shangrila மாவட்டத்தில் நடைபெற்றது.

Shangrila மாவட்டத்தின் தேசிய விளையாட்டு மையத்தில், அதிக மக்கள் கூடியிருந்தனர். பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத்தின் வருகையைக் கொண்டாடுவதற்காக, விழாவுக்கான அழகான உடைகள் அணிந்த பல்வேறு தேசிய இன மக்கள், ஆடி பாடினர். ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தின் துவக்க விழாவுக்கு முன், அனைத்து விருந்தினர் மற்றும் பார்வையாளர்கள், வென் ச்சுவான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.
காலை 9:15 மணிக்கு, தீபம், முதலாவது தீபம் ஏந்தும் நபரான Ma Bajinக்கு வழங்கப்பட்டு, ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நடவடிக்கை, Shangrila மாவட்டத்தில் துவங்கியது.
|