நிலநடுக்கத்தால் உருவான Tangjiashan ஏரியின் வெள்ளப்பெருக்கு நீர் மட்டம், நேற்று மாலை 5 மணியளவில் திட்டமிட்ட உயர்வை எட்டியது.
நிலநடுக்கத்தால் உருவான Tangjiashan ஏரியின் இடர் நீக்கப் பணி வெற்றி பெற்றுள்ளது என்று சீன சிச்சுவான் மாநில கட்சி கமிட்டியின் செயலாளர் liuqibao இடர் நீக்கப் பணி தலைமையகத்தில் தெரிவித்தார்.
இது வரை, இந்த ஏரியின் கொள்ளளவு 25 கோடி கன மீட்டரிலிருந்து 12 கோடி கன மீட்டராக குறைந்து, கீழ்ப்பகுதியை அச்சுறுத்தும் அபாய நிலை பெரிதும் தளர்ந்துள்ளது. அணைக்கட்டு உடைப்பினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொகை 13 இலட்சத்திலிருந்து 50 ஆயிரத்துக்கு குறைந்தது என்று இந்த ஏரியின் இடர் நீக்கப் பணி தலைமையகத்தின் நிபுணர் ஒருவர் கூறினார்.
|