• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-11 20:59:41    
நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விருப்பம்

cri

சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில் கடும் நில நடுக்கம் நிகழ்ந்த பின், அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள், மீட்புதவி பணியாளர்கள், தொண்டர்கள் ஆகியோர் தொகுதி தொகுதியாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று, மீட்புதவி பணிகளை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு மாபெரும் ஊக்கம் தந்துள்ளனர்.

Shi Fang நகரின் Luo Shui வட்டம், Cheng Du நகரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நில நடுக்கத்தில் Luo Shui வட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அவ்வட்டத்தில் சாலைகள் நாசப்படுத்தப்பட்டு, பொது மக்கள் பலர் வீடிழந்ததை செய்தியாளர் நேரில் கண்டனர். சாலையின் பக்கத்தில் நின்ற ஒரு சிறுமி, செய்தியாளரின் கவனத்தை ஈர்த்தார். Tang Hua Yang என்னும் இந்த சிறுமி, "மக்கள் விடுதலை படைவீரர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்" என்ற முழக்க அட்டையை ஏந்தி, சென்று வருகின்ற மீட்புதவி வாகனங்களுக்கு அதைக் காட்டினார்.

அவர், Luo Shui வட்டத்தின் Lian He கிராமத்தில் உள்ள துவக்க பள்ளியின் 6வது வகுப்பு மாணவி ஆவார். அவர் கூறியதாவது:

"நில நடுக்கத்தினால் இப்பகுதி அதிகமாக பாதிக்கப்பட்டது. அதிகமானோர் எங்கள் மீது பெரும் கவனம் செலுத்தி, பராமரிக்கின்றனர். அவர்களை நாங்கள் அன்புடன் மாமா என்று அழைக்கின்றோம். அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். நாங்கள் அவர்களைச் சந்திக்க முடியாவிட்டாலும், நன்றி தெரிவிக்கும் முழக்கத்தை எழுதி, அவர்களுக்கு உளமார்ந்த நன்றி தெரிவிக்கிறோம்" என்றார், அவர்.

நில நடுக்கம் நிகழ்ந்தவுடன், மீட்புதவி படைவீரர்கள் விரைவில் அங்கு விரைந்து, இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களைக் காப்பாற்றினர். அதே வேளை, நாட்டின் இதர இடங்களிலிருந்து, நிவாரணப்பொருட்கள் Luo Shui வட்டத்துக்குள் அனுப்பப்பட்டன. நாள்தோறும் மீட்புதவிப் பணியாளர்கள் கிராமவாசிகளுக்கு குடிநீர், உணவு வகைகள், மருந்துகள் உள்ளிட்ட அன்றாடத் தேவைக்கான பொருட்களை வழங்குகின்றனர். Tang Hua Yang கூறியதாவது:

"நாள்தோறும் அதிக வண்டிகளில், நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இது என்னை மனமுருகச்செய்கின்றது. அந்த படைவீரர்கள், சாப்பிடுவதை கூட மறந்து விட்டனர். அவர்கள் தத்தமது குடும்பத்தினரை மறந்து விட்டு பணி புரிகின்றனர்" என்றார், அவர்.

மீட்புதவி பணியாளர்கள் சுறுசுறுப்பாக மீட்புதவிப் பணியில் ஈடுபடுவதைக் கண்டு, அப்பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று Tang Hua Yang விருப்பம் தெரிவித்தார். அவளும் அவளது நண்பர்களும் சேர்ந்து, ஆலோசனை செய்து நன்றி தெரிவிக்கும் முழக்கங்களை எழுதி ஏந்தி செல்வதன் மூலம் தத்தமது நன்றியுணர்வை வெளிப்படுத்துவதென தீர்மானித்தனர்.

Tang Hua Yangவின் தந்தை, ஒரு விவசாயி ஆவார். தமது மகளின் இந்த செயல் பற்றி அவர் கூறியதாவது:

"அவர்கள் சுய விருப்பத்துடன் இதை செய்தனர். அதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். கடும் நில நடுக்கத்தினால் நாங்கள் பாதிக்கப்பட்ட பின், பல்வேறு சமூகத் துறையினர் எங்கள் மீது அக்கறை காட்டியுள்ளனர். அதற்காக மிகவும் நன்றி தெரிவிக்கின்றோம்" என்றார், அவர்.

அண்மையில், சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ், Luo Shui வட்டம் அமைந்துள்ள Shi Fang நகருக்குச் சென்று, பேரழிவு நிலைமை பற்றி அறியும் சோதனைப் பயணம் மேற்கொண்டார். Tang Hua Yangஉம், அவரது நண்பர்களும், நன்றி தெரிவிக்கும் முழக்க அட்டையை அரசுத் தலைவர் ஹூ சிந்தாவிடம் காட்ட விரும்பியிருந்தனர். ஆனால், அந்த விருப்பம் நனவாகவில்லை. இருப்பினும், அவர் மனவருத்தம் அடையவில்லை. அவர் கூறியதாவது:

"எங்களுக்கு அந்த விருப்பம் ஏற்பட்டது. நமது நாட்டு அரசுத்தலைவரும் எங்கள் அன்பு தாத்தாவுமான ஹு இதை அறிந்து கொள்ளாமல் இருந்தாலும், இதை செய்துள்ளோம்" என்றார், அவர்.

இந்த நில நடுக்கத்தில், Luo Shui வட்டத்தில் உள்ள மூன்று பள்ளிகள் இடிந்து தரை மட்டமாயின. 200க்கு அதிகமான குழந்தைகள் உயிரிழந்தனர். தற்போது, கற்றுக்கொள்ளும் பாடநூல்களைப் படிப்பதோடு, வயலில் தமது குடும்பத்தினருக்கு உதவி செய்கின்றார். பள்ளிக்குத் திரும்பி, தமது படிப்பைத் தொடர்வது என்பது, அவளது மிக பெரிய விருப்பமாகும். அவள் கூறியதாவது:

"நில நடுக்கம் மீண்டும் ஏற்படாமல், எங்களது தாயகத்தை மறுசீரமைத்து, பள்ளிக்குத் திரும்பி, சக மாணவர்களுடன் சேர்ந்து விளையாடி, கல்வி பயில வேண்டும் என்பது எனது மிக பெரிய விருப்பமாகும்" என்றார், அவர்.