• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-11 09:18:35    
சீனாவிலுள்ள பாலஸ்தீன தூதரின் கருத்து

cri
பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிரமங்களை எதிர்நோக்கிய போதிலும், தனது நாட்டின் விளையாட்டு இலட்சியத்தை வளர்ப்பதை பாலஸ்தீனா நிறுத்தவில்லை. சீனாவிலுள்ள பாலஸ்தீன தூதர் Allouh, பெய்சிங்கில் நமது செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது, இவ்வாறு தெரிவித்தார். கைப்பற்றப்படுவதால், பாலஸ்தீன விளையாட்டில் பல சிரமங்களை சந்தித்த போதிலும், அப்பணியை நிறுத்தவில்லை என்றார் அவர்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ளும் பாலஸ்தீன பிரதிநிதிக் குழு சிறிய அளவைக் கொண்டுள்ள போதிலும், கலந்துகொள்வது முக்கியத்துவம் வாய்ந்தது என்று Allouh தெரிவித்தார். பாலஸ்தீனர்களில் பல திறமைசாலிகள் உள்ளனர். பல்வேறு போட்டிகளில் பாலஸ்தீனா கலந்துகொள்ளலாம் என்பதை ஒலிம்பிக் வெளையாட்டு போட்டியில் அது கலந்துகொள்வது சுட்டிக்காட்டுகின்றது என்றார் அவர்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் துவக்க விழாவில் அரபு பண்பாட்டைப் பார்க்க வேண்டும் என்று Allouh விருப்பம் தெரிவித்தார். சீன-அரபு பண்பாடு ஒன்றிணைவதை அது காட்டும்.
சீனாவின் சிச்சுவான் வென் சுவான் கடும் நிலநடுக்கம், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதை பாதிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி, பெய்சிங் மாநகரம் ஒரு சுற்றுலா நகராக கட்டியமைக்கப்படும். சீனாவிலுள்ள பல்கேரியத் தூதர் Peychinov, பெய்சிங்கில் நமது செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது, இவ்வாறு தெரிவித்தார்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், சீனாவின் தொடர்புடைய தரப்புகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றன. போக்குவரத்துத் தடை பிரச்சினையைத் தீர்ப்பது மற்றும் காற்று மாசுப்பாட்டைக் குறைப்பது என்பவை இரண்டு மிக முக்கிய பிரச்சினைகளாகும் என்று Peychinov கூறினார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் சிறந்த வாநிலை மற்றும் போக்குவரத்து நிலைமைக்கு உத்தரவாதம் அளிக்க பாடுபடும் வகையில் இன்றியமையாத நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், முந்திய ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் வெற்றிகரமான

அனுபவங்களைப் பயன்படுத்தி, பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி, பெய்சிங் மாநகரம் ஒரு சுற்றுலா நகராக கட்டியமைக்கப்படும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றிகரமாக நடைபெற மக்கள் அனைவரும் விரும்புகின்றனர். காற்று தரத்தில் பெய்சிங் மேலும் முன்னேற்றம் பெற நான் விரும்புகின்றேன். சீன அரசு, சுற்றுச்சூழல் பிரச்சினையை உணர்வுபூர்வமாக கையாள, பல நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது. அத்துடன், அந்நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க பயனையும் பெற்றுள்ளன என்றார். மாசு கட்டுப்பாடு துறையில், உலகுடன், சீனா ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் Peychinov விருப்பம் தெரிவித்தார்.