• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-11 09:20:01    
நேர்மை

cri

ஒருமுறை ஊழலே வடிவான ஒரு அரசு அதிகாரி தான் மிகவும் நேர்மையானவன், களங்கமற்றவன் என்று புதிதாக பதவியேற்க சென்ற இடத்தில் நீருபிக்க விரும்பினான். எனவே பொறுப்பேற்பதற்கு முன் மக்கள் முன் நின்று " என் வலக்கை லஞ்சம் வாங்கினால், அது அழுகிப்போகட்டும். என் இடக்கை லஞ்சம் வாங்கினால் அதுவும் அழுகிப்போகட்டும்" என்று கூறி லஞ்ச லாவண்யமில்லாதவனாய் பணிபுரிவதாக வாக்களித்தான்.
சில நாட்கள் கழித்து அவனிடம் ஒரு தேவைக்காக வந்த ஒருவன் லஞ்சமாக 100 வெள்ளிக்காசுகள் தருவதாக கூறினான். அதிகாரிக்கு லஞ்சம் வாங்க ஆசை ஆனால், தான் கொடுத்த வாக்கு பலித்து விடுமோ என்ற பயம் அவனை தடுத்தது.
அதிகாரி தயங்குவதை கண்ட, அந்த மனிதன், ஒருவேளை தான் கொடுத்த வாக்கை எண்ணி அஞ்சுகிறார் போல என்று நினைத்து, அதிகாரியின் குழப்பத்தை தீர்க்க வழி சொன்னான். "ஐயா, ஏன் நான் அந்த வெகுமதியை உங்கள் சட்டைப்பையில் வைக்கக்கூடாது. லஞ்சம் வாங்குவது சட்டைபைதானே. உங்கள் வாக்குப்படி லஞ்சம் வாங்கிய சட்டைப்பை அழுகினால் அழுகட்டும்" என்றான்.
அதிகாரிக்கு அந்த யோசனை சரியென தோன்றியது. மகிழ்ச்சியுடன் லஞ்சத்தை வாங்கிக்கொண்டான்.