• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-11 14:24:50    
நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலான நோய் தடுப்புப் பணி

cri

தற்போது, சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பெருமளவு அவசர மருத்துவ சிகிச்சை தொடர்பான மீட்புதவிப் பணி அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மிகப் பெரும்பாலான காயமுற்றோர் உரிய முறையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளனர் என்று சீனச் சுகாதார அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் நேற்று பெய்சிங்கில் கூறினார். கடும் நோய்களை தடுப்பதற்காக, சீனச் சுகாதார வாரியங்கள் பல்வேறு பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

மே 12 நாள் சிச்சவான் மாநிலத்தில் நிகழ்ந்த கடுமையான நிலநடுக்கத்துக்கு பின், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு, 10 ஆயிரத்துக்கு மேலான மருத்துவ சிகிச்சை, நோய் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணியாளர்களை சீனாவின் தொடர்புடைய வாரியங்கள் அனுப்பின என்று நேற்று பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீனச் சுகாதார அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் Mao qunan கூறினார்.

நாடு முழுவதிலிருந்து அவசரமாக அனுப்பப்பட்ட அவசர மருத்துவ உதவி வண்டிகள், நோய் தடுப்பு வண்டிகள் மற்றும் சுகாதார கண்காணிப்பு வண்டிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 2000 ஆகும். தவிர, பேரிடர் நீக்கப் பணியில் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புப் பற்றிய பணி பற்றிய திட்டம் உள்ளிட்ட ஒரு தொகுதி திட்டங்கள் வெளியிடப்பட்டன. இந்நிலைமையில், பேரிடர் நீக்கப் பணியிலான சுகாதார மற்றும் மருத்துவ சிகிச்சைப் பணி பயன்தரும் முறையில் சீராக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று Mao Qun an தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

தற்போது, பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பெருமளவு அவசர மருத்துவ சிகிச்சை தொடர்பான மீட்புதவிப் பணி அடிப்படையில் நிறைவேறியுள்ளது. மிகப் பெரும்பாலான காயமுற்றோர் உரிய முறையில் சிகிச்சை பெற்றுள்ளனர். சிச்சுவானின் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கு மேலான காயமுற்றோர், நாட்டின் 20க்கு அதிகமான மாநிலங்களுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அப்புறப்படுத்தப்பட்டனர். உள் நாட்டின் புகழ் பெற்ற மருத்துவ நிபுணர்கள் கடுங்காயமுற்றோருக்கு பயனுள்ள மருத்துவ சிகிச்சை அளித்தனர் என்றார் அவர்.

எதிர்காலத்தில், சுகாதார வாரியங்கள் தொடர்ந்து மருத்துவ ஆற்றலை வலுப்படுத்தி, தங்களால் இயன்ற அளவில் காயமுற்றோரின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும். வருகின்றன. கண்புறை நோய் அறுவை சிகிச்சை, மகளிரிடையே காணப்படும் நோய் முதலியவற்றுக்கான மருத்துவ சிகிச்சை திட்டங்களை மேற்கொள்ள உள்ளூர் மருத்துவக் குழுக்களை உருவாக்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கான உள நல உதவியை வலுப்படுத்தும் என்று Mao Qun an கூறினார்.

கடும் இயற்கை சீற்றத்துக்குப் பின் கடும் நோய்களை தடுப்பது என்பது நடப்புக் கட்ட சுகாதாரப் பணியில் மிக முக்கிய கடமையாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார். தற்போது, நோய் தடுப்பு, சுகாதார கண்காணிப்பு முதலிய பணிகள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜுன் 10ம் நாள் வரை, கடும் தொற்று நோய்கள் மற்றும் திடீர் பொதுச் சுகாதார சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், தற்போது பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தொற்று நோய் ஏற்படும் சாத்தியக்கூறு இன்னும் நிலவுகின்றது என்று Mao Qun an வெளிப்படையாக தெரிவித்தார். நோய்களை தடுக்க, சுகாதார வாரியங்கள் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளன. Mao Qun An கூறியதாவது:

முதலில், பாதிக்கப்பட்ட மக்கள் பலர் ஒருங்கிணைப்பாக ஒரே இடத்தில் தங்கவைக்கப்பட்டதால், நோய் ஏற்படும் சாத்தியக்கூறு அதிகரிக்கப்பட்டது. எனவே, மறுகுடியேற்ற இடங்களில் நோய் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆற்றலை வலுப்படுத்தியுள்ளோம். தவிர, சுகாதார அமைச்சகம் தொடர்புடைய வாரியங்களுடன் ஒத்துழைத்து, குடி நீருக்கான கண்காணிப்பை வலுப்படுத்தி வருகின்றது என்று அவர் கூறினார்.

தற்போது, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில், தொற்று நோய் நிலைமை பற்றிய நாளறிக்கை என்ற அமைப்பு முறை செயல்படுத்தப்படுகின்றது என்று தெரிய வருகின்றது. பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலான நோய் நிலைமை பற்றி அறிக்கை தரும் அமைப்பு, நிலநடுக்கத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட போதிலும், செல்லிட இணையத்தை பயன்படுத்துவதன் மூலம், பாதிக்கப்பட்ட மாவட்டம் மற்றும் கிராமப்புறங்களிலுள்ள மறுகுடியேற்ற இடங்களில் நோய் நிலைமை பற்றிய கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.