சீனாவின் Cheng Du இராணுவ ஆணைப் பிரதேசத்தின் நிலநடுக்கப் பேரிடர் நீக்கப் பணியில் ஈடுபட்டு, விபத்தில் சிக்கிய இராணுவ ஹெலிகாப்டரின் கறுப்புப் பெட்டி கண்டறியப்பட்டுள்ளது. நேற்று இரவு 8:30 மணி வரை, 5 பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து 18 உயிரிழந்தோரின் பூதவுடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று சீன சி ச்சுவான் மாநிலத்தின் இராணுவ ஆணைப் பிரதேச நிலநடுக்கப் பேரிடர் நீக்கப் பணிக்கான தலைமையகம் அறிமுகப்படுத்தியது.

மே திங்கள் 31ம் நாள், நிலநடுக்கப் பேரிடர் நீக்கப் பணியில் ஈடுபட்ட போது, வென் ச்சுவான் மாவட்டத்தின் Yingxiu வட்டத்துக்கு அருகில் மேக மூட்டம், அதிகமான மூடுபனி மற்றும் வலிமையான காற்றால், பிற்பகல் 2:56 மணிக்கு இந்த ஹெலிகப்டர் விபத்துக்குள்ளானது.
நேற்று, இந்த ஹெலிகாப்டரின் எஞ்சிய மற்றும் உடைந்த பகுதிகள், Yingxiu வட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. உயிரிழந்தோரின் எஞ்சிய உடற்பகுதிகளும், ஹெலிகாப்டரின் உடைந்த சில பகுதிகளும் இராணுவ வட்டாரத்தால் உறுதி செய்யப்பட்டன. இன்று, உயிரிழந்தோரின் பூதவுடல்கள் ஏற்றிச் செல்லப்படும் என்று மதிப்பிடப்படுகிறது.
|