
Ji gong மலை, சீனாவின் மையப்பகுதியிலுள்ள He nan மாநிலத்தின் சின் யாங் நகரில் அமைந்துள்ளது. சீனாவில் புகழ்பெற்ற கோடைக்கால வாசஸ்தலங்களில் ஒன்றாகும். சீன மொழியில், Ji gong என்பது, சேவல் என்ற பொருளாகும். அம்மலையின் மிக உயரமான சிகரம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 700 மீட்டர் உயரமானது. அதன் வடிவம், சேவல் போன்று அமைந்ததால், Ji gong மலை என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

அம்மலையில், 1200க்கு கூடுதலான வகை மரங்கள் வளர்கின்றன. ஆண்டின் நான்கு பருவகாலங்களில் வேறுபட்ட இயற்கைக் காட்சியை இங்கு காணலாம். குறிப்பாக, கோடைக்காலத்தில் மலையின் வெளிப்புறத்தில் வெப்பமாகவுள்ள போது, அம்மலையில் குளிர்ச்சியாகவுள்ளது. நுழைவுச் சீட்டு கட்டணம்: பெரியோருக்கு :41 யுவான், மாணவர்களுக்கும் முதியோருக்கும் இராணுவத்தினருக்கும் பணியிலிருந்து ஓய்வு பெற்றோருக்கும் :20 யுவான்

|