• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-12 22:12:04    
அதிக பயன்பெற தாய்சீ கலை

cri

அதிக பயன்பெற தாய்சீ கலை

இசைக்கு மயங்காதோர் யாருமில்லை. மனிதர்கள், விலங்குகள், இயற்கை அனைத்தும் இசைக்கு மயங்குவதை பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. மகுடி இசைக்கு பாம்பு மயங்குவது இயல்பு. தொடர்ந்து இசை கேட்ட மரம் அதிக பயன் கொடுக்குமாம். சாலை ஓரங்களில் உள்ள மரங்களும், மனிதரின் குரலை அதிகமாக எப்போதும் கேட்கக்கூடிய சூழ்நிலையில் வளருகின்ற மரங்களும் மேலதிக பயன் தரும் என உறுதிபடுத்தியுள்ளனர். சரி! இசைக்கலைக்கு மட்டும் தான் இந்த சிறப்பா? இல்லை. வேறு கலைகளுக்கும் இந்த சக்தி உண்டா என்று கேட்டால் உண்டு என்கிறார் 44 வயதான பிரிட்டன் விவசாயி Rob Taverner. தன்னுடைய பசுக்களை நிதானமுறச்செய்து அதிக பால் வழங்க செய்ய தாய்சீ என்னும் சீன தற்காப்பு மற்றும் தியானக்கலை உதவுகிறது என்று அவர் தெரிவித்துள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாள்தோறும் காலை வேளையில் பால் கறப்பதற்கு முன்னர் Rob Taverner சீருடை அணிந்து கொண்டு சீனாவின் முற்கால தற்காப்பு மற்றும் தியானக் கலையான தாய்சீயை தன்னுடைய 100 க்கு மேற்பட்ட பசுக்களுக்கு முன்னால் நிகழ்த்தி காட்டுகிறார். இது எல்லா பசுக்களையும் நல்ல நிதானமான நிலைக்கு கொண்டு வருவதோடு அதிக பால் கொடுக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

தாய்சீ கலை, நம்முடைய பிரச்சனைகளின் மத்தியிலும் மனதை ஒருமுகப்படுத்த உதவுகிறது. இத்தகைய நிதானமான நல்ல உணர்வுநிலை பசுக்களுக்கும் பரவுகிறது. எல்லா விலங்குகளையும் போல அவை மனித உணர்வுகளான ஓய்வு, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை உணர்கின்றன. மகிழ்ச்சியான பசுவே அதிக பயனை வழங்கும் பசு என்கிறார் Rob Taverner. தாய்சீ என்னும் சீனாவின் முற்கால தற்காப்பு மற்றும் தியானக்கலை உடல்நலத்தில் பல்வேறு பயன்களை தருகிறது. இக்கலை நிதானமான, கட்டுபாடான அசைவுகளை கொண்டு வலிமை, உறுதி, பாவனை மற்றும் மனதை ஒருமுகப்படுத்தி அமைதியான உணர்வை அளிக்கும் கலையாகும்.

உலக அழகியின் ஒலிம்பிக் கனவு

பிறர்நலப் பணிகளே அழியா வெற்றிகளுக்கு அடிப்படை என்று பல சாதனையாளர்கள் எண்பித்துள்ளனர். அவ்வாறு மக்கள் பணிகளில் ஈடுபாடு காட்டும் அணியில் ஆறு திங்களுக்கு முன்னால் 57 வது உலக அழகியாக சீனாவிலிருந்து முதல்முதலாக முடி சூட்டப்பட்ட Zhang Zilin இணைந்துள்ளார். உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், 57 இடங்களுக்கு ஏழை எளிய குழந்தைகளுக்காக உதவித்தொகை பெருக்கும் வகையில் அவர் வரவேற்கப்பட்டார். அவருடைய தென் கொரியா, அயர்லாந்து, செக் குடியரசு, ஐயேவா, அமெரிக்க பயணங்கள் 3.46 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை பெருக்கியுள்ளது. ஒலிம்பிக்கின் கனவில் பங்கெடுப்பது தான் அனைவரின் இலக்காக இருக்கிறது. அந்த உணர்வை, தான் சென்ற இடங்களில் எல்லாம் உணர முடிந்தது. உலக அழகியாக தனது பணியை செய்கிறபோது ஒலிம்பிக்கின் தூதர் போன்று உணர்ந்தாக அவர் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய 24 வது பிறந்த நாளாகிய மார்ச் திங்கள் 22 நாள் உலகம் என்னை பின்பற்றுகிறது என்ற ஒலிம்பிக் தீப தொடரோட்ட பாடல் கொண்ட இசை ஒளிப்படத்தட்டை அவரும் பிற நான்கு ஒலிம்பிக் விளம்பர நபர்களும் பாடி வெளியிட்டுள்ளனர். பெய்சிங் தீப தொடரோட்டம் சீனாவின் Sanya வை வந்தடையும் மே 4 ஆம் நாள் Zhang, சீன கூடைப்பந்து விளையாட்டு வீரர் Yi Jianlian மற்றும் இதர பிரமுகர்களோடு ஒலிம்பிக் தீபத்தை ஏந்துவதில் அளவற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதன் மூலம் தனது வாழ்வில் ஒலிம்பிக் தீபம் ஏந்த வேண்டும் என்ற கனவு நனவாவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.