சீனாவின் மையப்பகுதியிலுள்ள He nan மாநிலத்தின் சின் யாங் நகர், தெளிந்த நீரையும் பசுமை அடர்ந்த மலையையும், சீரான காலநிலையையும் கொண்ட இடமாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறுடைய பண்டைய கோயிலான லீங் சான் கோயில், கோடைக்கால வாசஸ்தலமான ஜிகுங் மலை, சீனாவின் புகழ்பெற்ற தேயிலையான சின்யாங் மெளசியான் என்னும் தேயிலை ஆகியவை சின்யாங்கில் காணப்படலாம்.
சின்யாங் நகரத்தில் ஈரப்பதம் கொண்ட காலநிலை உள்ளது. தாவர வகைகள் மிகவும் அதிகம். சின்யாங் நகரத்தைச் சேர்ந்த ரோ சான் மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் லீங் சான் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒரு கிணறு உள்ளது. இனிமையான நீரை கொண்டதால், இது புனித கிணறு என்று அழைக்கப்படுகிறது. பரம்பரைக்கதையின் படி, இக்கிணற்றிலுள்ள ஊற்று, கோயிலின் பிந்திய மாளிகையிலுள்ள புத்தர் சிலையின் அடித்தளத்திலிருந்து உருவானது.. கோயிலில் ஆயிரம் ஆண்டுகால வரலாறுடைய பண்டைக்கால தேவதாரு மரம் ஒன்றும் உள்ளது. லீங் சான் கோயிலில், நீலமான ஏரி, நீர் தெளிவான வானம், அழகான இயற்கைக் காட்சி ஆகியவை, பயணிகளின் மனதில் ஆழப்பதிந்துள்ளன. பெய்ஜிங்கின் பயணி அன் லி ஹோங் செய்தியாளரிடம் கூறியதாவது
லீங் சான் கோயில் காட்சி மண்டலம் மிகவும் அழகானது. அதன் சுற்றுச் சூழல் பாதுகாப்பு நன்றாக இருக்கிறது. மலை மேல் நோக்கி நடந்த பாதையில், சிறிய ஆற்றில், சிறுசிறு மீன்கள், சிறிய நண்டுகள் ஆகியவற்றைப் பார்க்கலாம். எமது சகோதர இளைஞர்கள் இதில் நீச்சலடிக்க விரும்புகின்றனர். மனிதர், இயற்கையுடன் போதியளவு இரண்டறக்கலப்பதாக உணர்ந்து கொண்டோம் என்றார் அவர். சீனாவின் புத்த மதத் துறையில், லீங் சான் கோயில், குறிப்பிடத்தக்கது. சூங் மற்றும் மிங் வம்சக் காலத்தின் அரசர்கள், இக்கோயிலுக்குச் சென்லுள்ளனர். மிங் வம்ச அரசர் சூ யுவான் சாங், இக்கோயிலுக்கு நீண்ட குறட்பா
பலகையை சிறப்பாக வழங்கி, இக்கோயிலை தேசிய கோயிலாக அறிவித்தார். லீங் சான் கோயில் சுற்றுலா வளர்ச்சி நிறுவனத்தின் பணியாளர் குவே சியுன் பொங் கூறியதாவது: லீங் சான் கோயில், சுமார் 1500 ஆண்டுகால வரலாறுடையது. புத்த மதம் சீனாவுக்கு பரவிய பிறகு கட்டியமைக்கப்பட்ட முதலாவது தொகுதி கோயில்களில் இதுவும் ஒன்றாகும். மிங் வம்ச அரசர் சூ யுவான் சாங், இக்கோயிலுக்கு மூன்று முறை வந்துள்ளார் என்றார் அவர். சந்திர நாட்காட்டியின் படி மார்ச் திங்கள் முதல் நாளன்று, லீங் சான் கோயில் பாரம்பரிய கோயில் கூட்டம் நடத்துகிறது. அதன்போது மலைச் சாலையில் பயணிகள் நிறைந்து காணப்படுகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகை தருகின்றனர்.
லீங் சான் கோயிலைப் பார்வையிட்ட பிறகு, ஜிகுங் மலையை பற்றி கூறுகின்றோம். சின்யாங் நகரத்தின் தென்கிழக்கு பகுதியிலுள்ள ஜிகுங் மலை, சீனாவில் புகழ்பெற்ற கோடைக்கால வாசஸ்தலங்களில் ஒன்றாகும். சீன மொழியில், ஜிகுங் என்பது, சேவல் என்ற பொருளாகும். அம்மலையின் மிக உயரமான சிகரம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 700 மீட்டர் உயரமானது. அதன் வடிவம், சேவல் போன்று அமைந்ததால், ஜிகுங் மலை என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அம்மலையில், 1200க்கு கூடுதலான வகை மரங்கள் வளர்கின்றன. ஆண்டின் நான்கு பருவகாலங்களில் வேறுபட்ட இயற்கைக் காட்சியை இங்கு காணலாம். குறிப்பாக, கோடைக்காலத்தில் மலையின் வெளிப்புறத்தில் வெப்பமாகவுள்ள போது, அம்மலையில் குளிர்ச்சியாகவுள்ளது.
|