இன்று, 2008ம் ஆண்டு ஜூன் திங்கள் 12ம் நாள். கடந்த திங்களில் , சீன சி ச்சுவன் வென் ச்சுவன் மாவட்டத்தில், 8 ரிக்சர் அளவாக பதிவான நிலநடுக்கம் நிகழ்ந்தது. அந்நிலநடுக்கம், உயிர்களையும் உடமைகளையும் கடுமையாக பாதித்தது. நேற்று நண்பகல் 12 மணி வரை, 69 ஆயிரத்து 146 பேர் உயிரிழந்துள்ளனர். 3 இலட்சத்து 70 ஆயிரத்துக்கு மேலானோர் காயமுற்றுள்ளனர். 17 ஆயிரத்துக்கு மேலானோர் காணாமல் போயியுள்ளனர்.
சீனா பெற்ற துன்பங்கள் மிக அதிகமாகும். ஆனால், இத்துன்பங்களால் சீனா துவண்டுபோக தோற்கடிக்கப்பட வில்லை என்று வென் ச்சுவன் நிலநடுக்கத்துக்குப் பின், ரஷிய செய்தி நிறுவனம், சீனா ஊன்றி நிற்பது என்னும் கட்டுரையில் கூறியது. பேரிடர் நீக்க மீட்புதவி பணிகள் பூர்வாங்க வெற்றி பெற்றுள்ளன என்று இன்று, நாம் பெருமையாக கூறலாம். தற்போது, பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் சமூக ஒழுங்கு சீராகியுள்ளது. மக்கள் சீராக குடியமர்த்தப்பட்டுள்ளனர். சீனா, துவண்டுபோக வில்லை என்பதை உண்மைகள் நிரூபித்தன. சீனாவில் நிகழ்ந்த அனைத்து நிகழ்ச்சிகளும் வரலாற்றில் பசுமரத்து ஆணி போல் பதிக்கப்படும்.
அனைத்து சிரமங்களும், வீரஞ்செறிந்த சீன மக்களை தோற்கடிக்க முடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
சீன அரசுத் தலைவர் ஹூ ச்சின் தாவ், சி ச்சுவன் மாநிலத்தின் சீ பாஃங் நகரில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து, மீட்புதவி வீரர்களுக்கு ஊக்கமளித்த போது இவ்வாறு தெரிவித்தார். நிலநடுக்கம் நிகழ்ந்தவுடன், சீன அரசு நிவாரணப்பணிகளை வேகமாக பரவல் செய்தது. சீனத் தலைவர்களும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அடிமட்ட நிலை ஊழியர்களும் பேரிடர் நீக்க மீட்புதவிப் பணியில் ஆக்கப்பூர்வமாக கலந்துகொண்டனர். பல்வகை படைப்பிரிவுகளை அனுப்புவது, சமூக மூல வளங்களை ஒருங்கிணைப்பது, பல்வேறு வாரியங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு ஆகியவை, வேகமாகவும் ஒழுங்காகவும் உயர் பயனுடனும் மேற்கொள்ளப்பட்டன. சீன அரசு ஆற்றியுள்ள பணிகள் வரலாற்றில் பசுமரத்து ஆணி போல் பதிக்கப்படும்.
இவ்வொலி, பாரசூட் அணிந்து கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களில் இறங்கிய படை வீரர்கள், சி ச்சுவன் சீ பாஃங் நகரில் உயிர்த் தப்பியோரை காப்பாற்றிய ஒலியாகும். நிலநடுக்கம் நிகழ்ந்தவுடன், விடுதலைப் படைவீரர்கள் ஆயுதக் காவற்துறையினர், மக்கள் படை துணைநிலை பிரிவின் உறுப்பினர் உள்ளிட்ட ஒரு இலட்சம் வீரர்களை, சீன அரசு, அனுப்பியது. எங்கு அபாயங்களும் சிரமங்களும் இருந்ததோ, அங்கு அவர்கள் சென்றனர். அவர்களின் வீரஞ்செறிந்த செயல்கள், அனைத்து மக்களையும் மனமுருக செய்தன. சீன வீரர்களின் பேரிடர் நீக்க மீட்புதவிப்பணி வரலாற்றில் பசுமரத்து ஆணி போல் பதிக்கப்படும்.
நான் வீரர்களில் ஒருவர். இடர்பாடுகளை சமாளிப்பதில் அதிக அனுப்பவங்களை பெற்றுள்ளேன். நான் உயிர்த் தப்பியுள்ளோரை அதிகமாக காபாற்றுவேன்.
தொண்டர் சேன் யன் இவ்வாறு கூறினார். இந்நிலநடுக்கத்துக்குப் பின், இருப்புப் பாதை நெடுஞ்சாலை, பயணியர் விமான சேவை, தொலைத் தொடர்பு ஆகிய பல்வேறு தொழிற்துறைகள், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஆதரவு அளித்தன. ஹாங்காங், மகௌ, தைவான் உள்ளிட்ட சீனாவின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த தொண்டர்கள், மருத்துவ ஊழியர்கள், மீட்புதவிப் பணியாளர்கள், பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சென்றடைந்தனர். அவர்களி்ன் பணிகள், வரலாற்றில் பசுமரத்து ஆணி போல் பதிக்கப்படும்.
நிலநடுக்கம் போன்ற இயற்கையான பேரழிவுகளை, எந்த நாடும் மக்களும் தவிரக்க முடியாது. நாங்கள் உங்களுடன் இணைகின்றோம்.
ரஷிய மருத்துவ அணியின் துணைத் தலைவர் ஈவன்னியுஸ் சீனாவிலிருந்து புறப்படும் முன் இவ்வாறு கூறினார். நிலநடுக்கம் நிகழ்ந்தவுடன், சர்வதேச சமூகம், சீனாவுக்கு உதவி அளித்தது. ரஷியா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், ஆகிய நாடுகள், சர்வதேச மீட்புதவி அணிகளை அனுப்பின. ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கியூபா, ரஷியா, ஜப்பான் ஆகிய நாடுகள் சர்வதேச மருத்துவ அணிகளை அனுப்பின. சர்வதேச சமூகம் சீனாவுக்கு அளித்த உதவிகள், வரலாற்றில் பசுமரத்து ஆணி போல் பதிக்கப்படும்.
நாங்கள், சுய வலிமைக்காக விடா முயற்சி செய்து, து சியங் யன் நகரை புனரமைக்க வேண்டும்.
சி ச்சுவன் மாநிலத்தின் து சியங் யன் நகரிலுள்ள பாதிக்கப்பட்ட மக்கள் இவ்வாறு நம்பிக்கை தெரிவித்தனர். அவர்கள், வருத்தங்களை மறந்து, வீடுகளை புனரமைத்துக்கொண்டிருக்கின்றனர். மக்களின் மனவுறுதி, வரலாற்றில் பசுமரத்து ஆணி போல் பதிக்கப்படும்.
சீன அரசு மற்றும் மக்களின் முயற்சி, சர்வதேச சமூகத்தின் ஆதரவு ஆகியவற்றின் மூலம், பேரிடர் நீக்க மீட்புதவி பணியில் சீனா வெற்றி பெற வேண்டும்.
|