இது வரை, சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் உருவான் 34 ஏரிகள் உள்ளன. இதில் 12 ஏரிகள் அபாயமற்றைவை. 20 ஏரிகளின் இடர் நீக்கப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று சீன அரசவையைச் சேர்ந்த பேரிடர் நீக்கத் தலைமையகத்தின் நீர் சேமிப்புக் குழுவின் தலைவரும், சீன நீர் சேமிப்பு அமைச்சகத்தின் தலைவருமான chenlei நேற்று சிச்சுவான் mianyang இல் தெரிவித்தார்.
மே திங்கள் 29ம் நாள் இடர் நீக்கப் பணி துவங்கிய முதல் இது வரையான இரு வாரக் காலத்தில், இத்தகைய ஏரிகளின் இடர் நீக்கப் பணிகள் ஒட்டுமொத்தமாகத் தடையின்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப்போக்கில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் உருவான ஏரிகளின் இடர் நீக்கப் பணிக்கான அவசரக் கூட்டத்தில் அவர் கூறினார்.
|