• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-13 08:35:41    
சீனாவின் யூகு இனம்

cri
சீனாவின் யூகு இன மக்கள், gansu மாநிலத்தின் hexizoulangஇன் sunanபிரதேசத்தில் வாழ்கின்றனர். பிறர் jiuquanஇல் வாழ்கின்றனர். 2005ம் ஆண்டின் புள்ளிவிபரத்தின்படி, அதன் மக்கள் தொகை, 15 ஆயிரமாகும்.

வாழ்ந்த பிரதேசத்தின்படி, யூகு இன மக்கள் மூன்று மொழிகளைப் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு சொந்த எழுத்துக்கள் இல்லை. பொதுவாக சீன மொழி பயன்படுத்துகின்றனர்.

யூகு இன மக்கள், முக்கியமாக கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபடுகின்றனர். முன்பு, அவர்கள் தோல்களினால் தயாரிக்கப்பட்ட கூதாரங்களில் வாழ்ந்தனர். ஆடைகளும், காலணிகளும் தோல்களால் தயாரிக்கப்பட்டவை. இறைச்சி, பால் முதலிய கால்நடை உற்பத்தி பொருட்களைச் சாப்பிடுகின்றனர். உற்பத்தி மற்றும் வாழ்க்கையில் பயன்படுத்துகின்ற கருவிகளில் பெரும்பாலும், தோல்களால் தயாரிக்கப்பட்டவை. தற்போது, சிலர், வேளாண்துறையில் ஈடுபடத் தொடங்கினர்.

பாலும் தேநீரும், யூகு இன மக்களின் வாழ்க்கையில் முக்கியமான இடம் வகிக்கிறது. நாளுக்கு 3 முறை தேநீரைக் குடிப்பது வழக்கம். இரவில், அனைத்து பணி முடிந்த பின்பு தான், ஆக்கப்பூர்வமாக உணவுகளைச் சாப்பிடுகின்றனர்.

விருந்தினர்கள் வரும் போதும், யூகு இன மக்கள் முதலில் தேநீரை அளித்து பின்பு மதுமானத்தை அளிப்பது வழக்கம். மதுமானத்தைக் குடித்த போது, ஒரு முறை இரண்டு கோப்பை மதுமானத்தை குடிக்க வேண்டும். என்ற தாவரத்தினால் தயாரிக்கப்பட்ட மதுபானம், தனிச்சிறப்பு வாய்ந்தது.