• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-13 10:34:32    
இரண்டாவது பாடம், நன்றியும் மன்னிப்பும்

cri
கலை----நான் கலையரசி

கிளீட்டஸ்------நான் கிளீட்டஸ்

கலை----கடந்த வகுப்பில், வணக்கம் பற்றிய சில சொற்களைக் கற்றுக்கொண்டுள்ளோம். இனி, அந்த வாக்கியங்களை மீளாய்வு செய்கின்றோம்.

கிளீட்டஸ்------நல்ல கருத்து. இந்த பகுதியின் உரையாடலைக் கேளுங்கள்.

கலை----கேட்கலாம்.

கலை---- சரி, இப்பொழுது, இன்றைய பாடத்தைக் கற்றுக்கொள்ள தொடங்குகின்றோம்.

கலை----ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டிய போது, xie xie 谢谢 சொல்லலாம்.

கிளீட்டஸ்------ xie xie 谢谢. முதல் பாடத்தின் உரையாடலில், இந்தச் சொல்லை கேட்டுள்ளேன்.

கலை----xie xie 谢谢 என்றால், நன்றி என்று பொருள். உங்களுக்கு நன்றி என்றும் சொல்லலாம்.

கிளீட்டஸ்-----xie xie ni 谢谢你.

கலை----ni 你 என்பது, உங்கள்/ நீங்கள் தான்.

கிளீட்டஸ்----- ni 你。

கலை----சிறப்பாக நன்றி தெரிக்க வேண்டுமானால், fei chang gan xie 非常感谢 என்று, சொல்லாம்.

கிளீட்டஸ்----- fei chang gan xie 非常感谢.

கலை---- fei chang 非常 என்பது, வினை உரிச்சொல் ஆகும். அதன் பொருள், மிகவும் என்பதாகும். gan xie 感谢 என்றால், நன்றி என்று பொருள். மிக்க நன்றி, fei chang gan xie 非常感谢.

கிளீட்டஸ்----- fei chang gan xie 非常感谢.

கலை----ஒருவர் உங்களிடம் xie xie 谢谢 என்று சொல்லும் போது, நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?சீன மொழியில், bu yong xie 不用谢 என்று சொல்லலாம்.

கிளீட்டஸ்----- bu yong xie 不用谢.

கலை----bu yong 不用 என்றால், வேண்டாம் என்று பொருள். xie 谢 என்றால், நன்றி என்று பொருள்.

கலை----சரி நேயர்களே, இன்று கற்றுக்கொண்ட சொற்களை மீளாய்வு செய்கின்றோம். xie xie 谢谢。

கிளீட்டஸ்----- xie xie 谢谢.சீன மொழியில், உங்களுக்கு நன்றி என்று எப்படி சொல்வது?

கலை---- xie xie ni谢谢你 என்று சொல்லலாம்.

கிளீட்டஸ்-----சரி, மிக்க நன்றி என்பதை எப்படி சொல்ல வேண்டும்?

கலை---- fei chang gan xie 非常感谢 சொல்லுங்கள்.

கலை---- இனி, ஒரு உரையாடலைக் கேளுங்கள். லீ லீயின் கணினியில் சில பிரச்சினை ஏற்பட்டது. அவருடைய சக பணியாளர் வாங் நான், மூன்று மணி நேரம் பயன்படுத்தி, கணினியைத் திருத்தினார்.

கலை----சரி, அடுத்து, சீன மொழியில் மன்னிக்கவும் என்று எப்படி சொல்வது என்பதை அறிந்துகொள்வோம்.

கிளீட்டஸ்-----சரி,சொல்லுங்கள்.

கலை---- சீன மொழியில் மன்னிக்கவும் என்பது, dui bu qi 对不起 தானே.

கிளீட்டஸ்-----dui bu qi 对不起.

கலை----ஒருவர் உங்களிடம் dui bu qi 对不起 என்று சொன்னால், நீங்கள் எப்படி பதிலளிக்க வேண்டும் என்று தெரியுமா?

கிளீட்டஸ்-----mei guan xi 没关系 என்பதைச் சொல்லலாமா?

கலை----சரியான பதில்!mei 没 என்பது, இல்லை என்று பொருள். guan xi 关系 என்றால், உறவு. mei guan xi 没关系 என்பது, பரவாயில்லை என்று பொருள். சில நேரத்தில், mei shi er没事儿என்றும் சொல்லலாம். சரி, கிளீட்டஸ், நாம் சேர்ந்து மீளாய்வு செய்போம். dui bu qi 对不起

கிளீட்டஸ்----- dui bu qi 对不起

கலை----mei guan xi 没关系

கிளீட்டஸ்-----mei guan xi 没关系

கலை----சரி, உண்மை வாழ்வில், சீன மக்களின் உரையாடலை கேளுங்கள்.

கலை----கிளீட்டஸ், இவ்வுரையாடல் உங்களுக்குப் புரிகிறதா?

கிளீட்டஸ்-----பெரும்பாலான உள்ளடக்கம் புரிகிறது. xie xie 谢谢

கலை----சரி, இரண்டு முழுமையான உரையாடல்களைக் கேட்பதற்கு முன், இந்தப் பாடத்தின் முக்கிய வாக்கியங்களை மீண்டும் சொல்கின்றோம்.

கிளீட்டஸ்-----சரி. நீங்கள் சொல்லுங்கள், நான் தொடர்ந்து சொல்வேன்.

கலை----சீன மொழியில், நன்றி என்பது, xie xie 谢谢.

கிளீட்டஸ்----- xie xie 谢谢

கலை----அல்லது xie xie ni谢谢你

கிளீட்டஸ்----- xie xie ni谢谢你

கலை----மிக்க நன்றி, என்பதை, சீன மொழியில் fei chang gan xie 非常感谢 என்று சொல்லலாம்.

கிளீட்டஸ்----- fei chang gan xie 非常感谢

கலை----பதிலளிக்கும் போது, bu yong xie 不用谢 என்று சொல்ல வேண்டும்

கிளீட்டஸ்----- bu yong xie 不用谢.

கலை----அல்லது நீங்கள் mei shi er没事儿என்றும் சொல்லலாம்.

கிளீட்டஸ்----- mei shi er没事儿.

கலை---- கிளீட்டஸ்,சீன மொழியில், மன்னிக்கவும் என்று எப்படி சொல்ல வேண்டும். நினைவிருக்கிறதா?

கிளீட்டஸ்----- dui bu qi 对不起.

கலை----சரி. இவ்விரு உரையாடல்களைக் கேட்கலாம்.

கலை----சரி, இன்றைய நிகழ்ச்சிக்கு முடிவடைவதற்கு முன், வழக்கம் போல் சிறிய தேர்வு. சீன மொழியில், மன்னிக்கவும் என்று எப்படி சொல்வது உங்களுக்கு தெரியுமா?

கிளீட்டஸ்-----உங்களின் பதிலை மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள்.

நேயர்களே, இன்றைய நிகழ்ச்சி நிறைவடைகிறது. வணக்கம்.