• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-13 09:13:59    
சீன மலையேறும் அணியின் தலைவர் Wang Yongfeng

cri


2008ம் ஆண்டு மே 8ம் நாள் முற்பகல், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் புனிதத் தீபம், உலகின் சிகரமான ஜொல்மோ லுங்மா சிகரத்தை வெற்றிகரமாக எட்டியது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்ட நடவடிக்கையில் இது மக்களின் கவனத்தை மிகவும் ஈர்த்தது. ஜொல்மோ லுங்மா சிகரத்திலிருந்து திரும்பிய பின், சீன மலையேறும் அணியின் தலைவர் Wang Yongfeng சிச்சுவான் மாநிலத்தின் பேரிடர் நீக்க பணியில் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டபோது, ஒலிம்பிக் புனிதத் தீபத்துடன் இணைந்து, சீனாவின் தென் பகுதியிலுள்ள குவாங் சீ சுவான் இன தன்னாட்சி பிரதேசத்துக்கு வந்து, ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்ட நடவடிக்கையின் பிரச்சார பணிகளில் பங்கெடுத்தார்.


2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்ட நடவடிக்கையில் பல புகழ் பெற்ற வீரர்கள் மற்றும் நடிகர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஜொல்மோ லுங்மா சிகரத்தில் தீபத் தொடரோட்ட நடவடிக்கையின் போது இரண்டாவது தீபம் ஏந்தியவரான Wang Yongfengஇன் பெயர் மக்களின் கவனத்தை மிக ஈர்த்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 8844 மீட்டர் உயரமுள்ள ஜொல்மோ லுங்மா சிகரத்தில் தீபத் தொடரோட்டம் நடைபெறுவதில் கலந்து கொள்வதில், அவர் அதிகப் பெருமை அடைந்தார்.
ஜொல்மோ லுங்மா சிகரத்தில், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத்தை நான் ஏந்துகிறேன். என் வாழ்க்கையில் நடைபெறும் மாபெரும் பெருமைக்குரிய நிகழ்ச்சி இதுவாகும் என்றார் அவர்.


சீன மலையேறும் அணியின் தலைவரான Wang Yongfengஇன் பெயர் சீனா மற்றும் உலகில் அதிகமான கவனம் பெற்றுள்ளது. 45 வயதான அவர் உலகின் 7 கண்டங்களில் உயரமான உச்சியில் வெற்றிகரமாக ஏறி, தென் துருவத்தையும் வட துருவத்தையும் நடந்து அடைந்தார். ஜொல்மோ லுங்மா சிகரத்தில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்ட நடவடிக்கை வெற்றிகரமாக நடைபெற காரணமான குழுவின் உறுப்பினர் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். நான் முக்கியமாக நன்றி தெரிவிக்கிறேன். ஜொல்மோ லுங்மா சிகரத்தில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்ட நடவடிக்கை வெற்றிகரமாக நடபெறும் வகையில், 2 ஆண்டு கால போராடி, முயற்சிகள் மூலம், பலர் இந்நடவடிக்கையை நிறைவேற்றியுள்ளனர் என்றார் அவர்.


2008ம் ஆண்டு மே 8ம் நாள் முற்பகல், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் புனிதத் தீபம், உலகின் மிக உயரமான சிகரமான ஜொல்மோ லுங்மா சிகரத்தை வெற்றிகரமாக எட்டியது. ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் வரலாற்றில் அந்நாள் பொறிக்கப்பட்டுள்ளது உறுதி. ஜொல்மோ லுங்மா சிகரத்தை ஒலிம்பிக் புனிதத் தீபம் எட்டிய போது, 113 நாடுகளைச் சேர்ந்த 227 தொலைக்காட்சி நிலையங்கள் நேரடி நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் வழங்கின. சீன மக்கள் விடா முயற்சியோடு, ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்காக விண்ணப்பித்த போது, ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியில் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நடவடிக்கை நடைபெறும் என்ற வாக்குறுதியைச் சீனா நடைமுறைப்படுத்தியுள்ளது என்று Wang Yongfeng கூறினார்.
எதிர்காலத்தில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் தீபத் தொடரோட்டத்தின் போது, ஜொல்மோ லுங்மா சிகரத்தில் நடைபெற்ற தீபத் தொடரோட்ட நடவடிக்கையை மக்கள் அனைரும் நினைவுகூர்வார்கள். ஒலிம்பிக் வரலாற்றில், இது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்றார் அவர்.