• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-13 09:19:00    
பதனீட்டுத் தொழிலில் ஈடுபடும் Ye Mei Yu அம்மையார்

cri

Zhe Jiang மாநிலத்தின் Lin Hai நகரில் உள்ள You Xi என்னும் வட்டத்தில், Ye Mei Yu அம்மையார் மக்களால் மிகவும் பாராட்டப்படுகின்றார். அவர் பதனீட்டுத் தொழிலில் ஈடுபடுவதன் மூலம் செல்வமடைந்துள்ளார். இதன் பிறகு, அவரது தலைமையில், கிராமங்களின் பெண்கள் செல்வமடையும் பாதையில் முன்னேறி வருகின்றனர்.
1998ஆம் ஆண்டு, Ye Mei Yuவின் குழந்தை சிறு வயதாய் இருந்தது. கிராமங்களிலுள்ள பெரும்பாலான பெண்களைப் போல், அவர் வீட்டில் குழந்தையைப் பராமரித்து, வீட்டுப் பணியில் ஈடுபட்டார். ஆனால், மகளிர் தமது லட்சியத்துக்காக பாடுபட வேண்டும் என்று அவர் எப்போதும் கருதுகின்றார்.

தம்மைப் போல், கிராமங்களில் இதர பெண்கள் வீட்டில் குழந்தைகளைப் பாராமரித்ததைக் கண்டு, இவ்வளவு உழைப்பு ஆற்றல் வீணாக போகிறது என்று அவர் எண்ணினார். தமது வீட்டில் எந்த பொருளையாவது பதனீடு செய்தால், ஒரு புறம், குடும்பத்தினரை செவ்வனே பராமரிக்க முடியும். மறு புறம், குடும்பத்தின் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்று அவர் எண்ணினார்.
அவர் இந்த எண்ணத்தை தமது கணவரிடம் தெரிவித்தார். கணவர் அவருக்கு ஆதரவு அளித்தார். வீட்டில் பதனீடு செய்யப்படக்கூடிய கைவினைப் பொருட்களை அவர் எங்கெங்கும் தேடினார். வண்ண விளக்குகளைப் பதனீடு செய்யுமாறு மற்றவர்களை ஒரு வண்ண விளக்கு தொழிற்சாலை கேட்டுக் கொள்கின்றது என்பதைக் கேட்ட பின், அவர் இத்தொழிற்சாலைக்குச் சென்றார். ஆனால், முன்பு வண்ண விளக்கு பதனீட்டுப் பணியில் ஈடுபடும் அனுபவம் அவருக்கு இல்லை என்பதால், இத்தொழிற்சாலை அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தப் பதனீட்டு அலுவல் வாய்ப்பை பெறும் வகையில், நாள்தோறும் அவர் தொழிற்சாலைக்கு சென்று வண்ண விளக்கு பதனீட்டு தொழில் நுட்பத்தை கற்றுக்கொண்டார். சில திங்கள் கால முயற்சியுடன், அவரது பதனீட்டு தொழில் நுட்பத்தை இத்தொழிற்சாலை ஏற்றுக்கொண்டது.
இதற்கு பின், Ye Mei Yu அம்மையார் சிறிய அளவு வண்ண விளக்குகளை தமது வீட்டுக்குக் கொண்டு வந்தார். வண்ண விளக்குகளைப் பதனீடு செய்யும் தொழில் நுட்பத்தை அண்டை வீட்டுக்காரர்களுக்கு அவர் நேரடியாக கற்றுக்கொடுத்தார். உற்பத்திப் பொருட்களின் தரத்தில் கவனம் செலுத்துமாறு அண்டை வீட்டுக்காரர்களை அவர் கோரினார். அண்டை வீட்டுக்காரர்களின் பதனீட்டுத் தொழில் நுட்பம், தொழிற்சாலையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின், இத்தொழிற்சாலையிலிருந்து அவருக்கு கிடைத்த விளக்குகளின் அளவு மென்மேலும் அதிகரித்தது. பதனீடு செய்யப்பட்ட பொருட்களின் தரத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, அவர் இப்பொருட்களை தொழிற்சாலைக்கு காலதாமதமின்றி திருப்பிக் கொடுக்கின்றார். சில காலத்துக்குப் பின், தொழிற்சாலையின் நம்பிக்கையை Ye Mei Yu அம்மையார் பெற்றார். You Xiயில் பதனீடு செய்யப்படாத வண்ண விளக்குகளின் விநியோக நிலையத்தை நிறுவ தொழி்ற்சாலை ஒப்புக்கொண்டது.

இந்நிலையம் நிறுவப்பட்ட பின், பதனீட்டுப் பணியில் Ye Mei Yu அம்மையார் தனது மனதை ஈடுபடுத்தத் துவங்கினார். ஓராண்டுக்கு பின் சுமார் 10 ஆயிரம் யுவானை அவர் ஈட்டினார். அப்போது இது பெரும் தொகையாகும். வண்ண விளக்கு பதனீட்டுப் பணியில் ஈடுபடுபவரின் எண்ணிக்கை, 6இலிருந்து, படிப்படியாக அதிகரித்துள்ளது.
மகளிர் ஒருவர் செய்தியாளருக்குப் பேட்டி அளித்தார். தாம் Ye Mei Yuஉடன் இணைந்து வண்ண விளக்குகளை பதனிடத் துவங்கி, சுமார் பத்து ஆண்டுகள் ஆகின்றன என்றும், வண்ண விளக்கு பதனீட்டு பணியினால் தாம் செல்வமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். ஆண்டுதோறும் வண்ண விளக்கு பதனீடு மூலம் அவர் மற்றும் அவரது கணவர் ஈட்டிய தொகை, குடும்பத்தின் இதர வருமானம் ஒன்று சேர்க்கப்பட்டு, மொத்தம் 30 ஆயிரம் யுவானை எட்டியுள்ளது. தற்போது அவர்கள் புதிய வீட்டில் குடிபெயர்ந்துள்ளனர்.
Ye Mei Yu அம்மையாரின் தலைமையில், கிராமத்தில் உள்ள மகளிரின் உழைப்பு ஆற்றல் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்கிராமத்துக்கு அருகில் உள்ள சில கிராமங்களில் உள்ள மகளிரை Ye Mei Yu நினைத்தார். நாள்தோறும் விடியற்காலையில் அவர் அந்த கிராமங்களுக்குச் சென்று, வண்ண விளக்கு பதனீட்டுப் பணியில் ஈடுபடுமாறு அங்குள்ள மகளிரை அணிதிரட்டினார். ஆனால், வண்ண விளக்கு பதனீடு பற்றி புரிந்து கொள்ளாத இப்பெண்கள் அதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. இதனால், தமது கிராமத்தில் வண்ண விளக்கு பதனீடு பற்றி அவர் விபரமாக விவரித்தார். தமது கிராமத்து மக்களின் வீட்டுக்கு வருமாறு இந்த பெண்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். பதனீட்டுத் தொழில் நுட்பம் சிரமமில்லை என்றும், இத்தொழில் நுட்பத்தைக் கிரகித்துக் கொண்ட பின், நாள்தோறும் குறைந்தது 30 யுவான் ஈட்ட முடியும் என்றும் அவர்களுக்கு Ye Mei Yu அம்மையார் தெரிவித்தார். படிப்படியாக இதர கிராமங்களின் பெண்களும் வண்ண விளக்கு பதனீட்டுப் பணியில் ஈடுபட ஒப்புக்கொண்டனர். வண்ண விளக்கு பதனீட்டுப் பணியில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை, 180 வரை அதிகரித்துள்ளது.


2005ஆம் ஆண்டு வண்ண விளக்குகளை ஏற்றிச்செல்லும் பொருட்டு, Ye Mei Yu அம்மையார் ஒரு சிறிய வாகனத்தை வாங்கினார். வண்ண விளக்கு பதனீட்டுப் பணியில் அவர் மென்மேலும் மகிழ்ச்சியாக ஈடுபடுகின்றார்.
ஆண்டுதோறும் ஜுலை திங்கள் வண்ண விளக்கு பதனீட்டுப் பணி நிறைவேறுகின்றது. இதற்கு பிந்திய சில திங்களில், பெண்கள் தத்தமது வீட்டில் ஓய்வு பெறுகின்றனர். எனவே இதர பதனீட்டுப் பணியின் மீது Ye Mei Yu அம்மையார் குறி வைத்தார். Yong Qiang குழுமம், பிரம்பு நாற்காலிகளை உற்பத்தி செய்கின்றது என்று அவர் கேள்விபட்ட பின், Yong Qiang குழுமத்துடன் தொடர்பு கொண்டார். இறுதியில் பிரம்பு நாற்காலி பதனீட்டு அலுவலில் Ye Mei Yu ஈடுபடுவதற்கு Yong Qiang குழுமம் ஒப்புதல் அளித்தது. இதற்கு பின், அவர், கிராமத்தில் உள்ள இதர மகளிருடன் இணைந்து பிரம்பு நாற்காலி பதனீட்டு தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொண்டார். அவர்கள் பதனீட்டுப் பொருட்களின் தரத்தில் கவனம் செலுத்துவதால், Yong Qiang குழுமத்தின் நம்பிக்கையை பெற்றுள்ளனர்.