நிலநடுக்கத்துக்குப் பின் சீன அரசு அவசர நடவடிக்கை மேற்கொண்டதை எமது நிகழ்ச்சி மூலம் அறிந்த பிறகு, பல நேயர்கள் கடிதம், மின்னஞ்சல், தொலைபேசி முதலியவற்றின் மூலம் சீன அரசின் பேரிடர் நீக்கப் பணியை வெகுவாகப் பாராட்டினர்.
இயற்கை சீற்றத்துக்குப் பின் தொற்று நோய் பரவல் இயல்பே. ஆனால், சீன அரசு வேகமான நடவடிக்கை மேற்கொண்டதினால், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இதுவரை கடும் நோய் நிலைமை ஏதும் நிகழவில்லை. இது பாராட்டத்தக்கது என்று அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத் தலைவர் எஸ்.செல்வம் தனது மின்னஞ்சலில் கூறினார்.
சீன அரசு அவசர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. பேரிடர் நீக்கப் பணி ஒழுங்காக நடைபெற்ற வருகின்றது. அரசின் நடவடிக்கை மக்களின் ஒற்றுமை ஆகியவற்றின் மூலம், பாதிக்கப்பட்ட மக்கள் இன்னல்களைச்சமாளிப்பது உறுதி என்று நம்புவதாக ஈரான் நேயர் பாயிதோல் தெரிவித்தார்.
|