ஜுன் 15ம் நாள் முதல் சிச்சுவான் மாநிலத்தில் சில பகுதியிலுள்ள சுற்றுலா சந்தையை மீட்க இம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
சீன சிச்சுவான் மாநில அரசின் செய்தியாளர் கூட்டத்திலிருந்து கிடைத்த தகவல் இவ்வாறு கூறுகிறது.
Le Shan, Yi Bin, Mei Shan, Liang Shan முதலிய 13 பிரதேசங்களிலான சுற்றுலா சந்தைகள் மீட்கப்படும். Bi Fengxia, Meng Dingshan முதலிய Ya An நகரிலான காட்சி தலங்களும் பயணிகளை வரவேற்கும் என்று சிச்சுவான் சுற்றுலா துறையின் தலைவர் Zhang Gu கூறினார். இதர கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பேரிடர் நீக்கப் பணியும் பாதிக்கப்பட்ட மக்களை குடியமர்த்துவதும் தற்போதைய மிக முக்கிய கடமைகளாகும். எனவே, இப்போது இந்த பிரதேசங்கள் பயணிகளுக்குத் திறக்கப்படவில்லை. எதிர்வரும் நாட்களில், சுற்றுலா சந்தையை மீட்கபது பற்றிய நிலைமையை கட்டங்கட்டமாக வெளியிடும் என்று அவர் தெரிவித்தார்.
|