இன்று காலையில், சீனாவின் தென்மேற்குப் பகுதியிலுள்ள சென் யீ நகரில் பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் வெறிகரமாக நடைபெற்றது.
சென் யீ, குய் சோ மாநிலத்தில் தீபத் தொடரோட்டம் நடைபெற்ற இறுதி நகரமாகும். இன்று காலை 8 மணிக்கு, இத்தொடரோட்டம் சென் யீ கூட்டம் நடைபெற்ற இடத்தில் துவங்கியது. 9.50மணிக்கு ஹுய் ச்சுவான் விளையாட்டரங்கு சென்றடைந்த பின், தீபத் தொடரோட்டம் நிறைவடைந்தது.
இதன் முழு நீளம் 8.3கிலோமீட்டர். மொத்தம் 208 தீபம் ஏந்தும் நபர்கள் இதில் கலந்து கொண்டனர்.
துவக்க விழாவில், இந்நடவடிக்கையில் கலந்து கொண்டவோர் அனைவரும் வென் சுவான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். தீபம் ஏந்தும் நபர்கள், உள்ளூர் பல்வேறு துறைகள் ஆகியோர் நன்கொடை நடவடிக்கையையும் மேற்கொண்டனர்.
|