ஆசிய-பசிபிக் சுற்றுலா சங்கத்தின் அனைத்து ஆற்றலையும் ஒருங்கிணைப்பதன் மூலம், சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சுற்றுலா துறையை மீட்பதற்கு ஆதரிக்கும் என்று இச்சங்கத்தைச் சேர்ந்த சீன பிரதேச தலைவர் Chang Hongஅம்மையார் இன்று பெய்சிங்கில் தெரிவித்தார். புள்ளி விபரங்களின் படி, ஜுன் முதல் நாள் வரை, சிச்சுவான், ஷெங்சி, காங் சு, சுங்சின், யுன்னான் ஆகிய பிரதேசங்களில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சுற்றுலா துறைக்கு ஏற்பட இழப்பு தொகை 5330கோடி யுவான் ஆகும். தொடரமைப்பு துறையில் ஆசிய-பசிபிக் சுற்றுலா சங்கத்தின் மேம்பாடு மூலம், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலான சுற்றுலா துறையின் மீட்சிக்கும் அதன் தொழில் சின்னங்களின் புனரமைப்புக்கும் இச்சங்கம் ஆதரித்து, உள்ளூர் சுற்றுலா துறை இன்னல்களை சமாளிக்க உதவி செய்யும் என்று Chang Hongஅம்மையார் கூறினார்.
|