ஜுன் திங்கள் 13ம் நாள் வரை, அன்னிய முதலீட்டு தொழில் நிறுவனங்கள், நாடு கடந்த பெரிய கூட்டு நிறுவனங்கள், ஹாங்காங்,மக்கௌ மற்றும் தைவான் பிரதேசங்களிலுள்ள தொழில் நிறுவனங்கள் ஆகியவை, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 366கோடியே10லட்சம் யுவான் மதிப்புள்ள நன்கொடை நிதி மற்றும் பொருட்களை வழங்கியுள்ளன. சில மாநில மற்றும் நகர வணிக வாரியங்களும், சீன அன்னிய முதலீட்டு தொழில் நிறுவன சங்கமும் வழங்கிய தகவல் இதைத் தெரிவித்தது.
புள்ளிவிபரங்களின் படி, அவற்றில் 303கோடியே90லட்சம் யுவான் நிதியுதவி இடம்பெற்றது. தவிர, 62கோடியே 20லட்சம் மதிப்புள்ள உணவு, மருந்துகள், மருத்துவ சிகிக்கை கருவிகள், கூடாரங்கள் முதலிய நன்கொடைப் பொருட்கள் உள்ளன.
|