இன்று நண்பகல் 12மணி வரை, சீனாவின் பல்வேறு நிலை அரசுகள் பேரிடர் நீக்கப் பணிக்கு ஒதுக்கியுள்ள நிதித்தொகை, 5376கோடியே 30லட்சம் யுவானாகும். சீனா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்து சேர்ந்த நன்கொடைத் தொகை 4560கோடி யுவானுக்கு மேலாகும். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 1410கோடி யுவான் ஒதுக்கப்பட்டுள்ளது. சீன அரசவையின் செய்தி அலுவலகம் இன்று இத்தகவலை அறிவித்தது.
இன்று நண்பகல் 12மணி வரை, 69ஆயிரத்து170 பேர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தனர். 17ஆயிரத்து427பேர் காணாமல் போயினர். நிலநடுக்கத்தில் காயமடைந்த 14ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
|