
மே திங்கள் 12ம் நாள், சீனாவின் தென் மேற்குப் பகுதி சிச்சுவான் மாநிலத்தின் வென்ச்சுவானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால், கணிசமான உயிர் மற்றும் உடமை இழப்புகள் ஏற்பட்டன. தவிரவும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் தொல் பொருட்கள் கடுமையாக சீர்குலைக்கப்பட்டன. தற்போது, நிலநடுக்கத்துக்குப் பிந்திய தொல் பொருட்களுக்கான பாதுகாப்புப் பணியில் சிச்சுவான் மாநிலம் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டு வருகிறது.

மே திங்கள் 12ம் நாள், சிச்சுவான் மாநிலத்தில் ரிக்டர் அளவையில் 8.0 என பதிவான நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. இதனால், உள்ளூர் பண்பாட்டு மரபுச் செல்வங்கள் கடுமையாகச் சீர்குலைக்கப்பட்டன.

பண்பாட்டு மரபுச் செல்வங்களைப் பொறுத்தவரை, சிச்சுவான் நிலநடுக்கம் ஒரு மாபெரும் பேரிடராகும். 128 தேசிய தொல் பொருட்கள் இடங்களில் 79 இடங்கள் இதனால் சீர்குலைக்கப்பட்டன. புள்ளிவிபரங்களின் படி, மாநில நிலை தொல் பொருள் இடங்களில் சுமார் 30 விழுக்காடு சீர்குலைக்கப்பட்டது என்று சிச்சுவான் மாநிலத்தின் தொல் பொருள் துறையின் துணைத் தலைவர் wangqiong அம்மையார் தெரிவித்தார்.

சீனாவின் தென் மேற்குப் பகுதியிலுள்ள சிச்சுவான் மாநிலத்தில் எழில்மிக்க இயற்கைக் காட்சிகள் காணப்படுகின்றன. தனிச் சிறப்பு வாய்ந்த சிச்சுவான் மாநிலத்தின் பண்டைக்கால பண்பாடுகள், சீனாவின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கின்றன. உலகில் புகழ் பெற்ற லீ பைய், இலக்கிய மேதை sushi ஆகியோர் சிச்சுவான் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாவர். பல முக்கிய மானிட வள வரலாற்றுச் சின்னங்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டன. மிகப் புகழ் பெற்ற உலக வரலாற்று பண்பாட்டு மரபுச் செல்வமான dujiangyan இதில் ஒன்றாகும். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்ட இந்நீர் ப்பாசனத் திட்டப்பணி, இன்னும் வெள்ளத் தடுப்பு, நீர் பாசனம் போன்ற முக்கிய பங்காற்றி வருகிறது.
நண்பர்களே, நிலநடுக்கத்துக்குப் பிந்திய தொல் பொருட்களுக்கான பாதுகாப்பு என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.
|