தொடரவல்ல வளர்ச்சியை நிறைவேற்றும் வகையில், கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள Shandong மாநிலம் சுற்றுச் சூழல் பாதுகாப்புக் கொள்கையை கண்டிப்புடன் செயல்படுத்தி வருகிறது. கணிசமான மனித வளம், பொருட்கள் மற்றும் நிதியோடு, தொழில் துறையின் கட்டமைப்பைச் சரிப்படுத்தி, சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலுப்படுத்தி, குறிப்பிடத்தக்க பயன்களை இம்மாநிலம் பெற்றுள்ளது.
Shandong மாநிலத்தில், huawen என்னும் பெரிய தாள் உற்பத்தித் தொழிற்சாலை உள்ளது. கடந்த ஆண்டில், இங்கு முன்னேறிய தாள் உற்பத்தி தொழில் நுட்பம் மற்றும் சாதனங்கள் உட்புகுத்தப்பட்டன.
சுற்றுச் சூழல் பாதுகாப்பு வரையறை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளதால், தொழில் நிறுவனங்கள் மேலும் முன்னேறிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டி இருக்கின்றது என்று இத்தொழில் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் zhoufeng தெரிவித்தார். அவர் கூறியதாவது:
தொழில் நுட்பத்தை புத்தாக்கம் செய்வதில் நாம் ஊன்றி நிற்பதால் வெளியேறுகின்ற மாசுபாடுகள் குறைந்துள்ளன. நிறுவனங்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்ட போதிலும், அதன் நலன்களை நாடுவதற்காக, நாட்டின் நலன்களை தொழில் நிறுவனம் பலிகொடுக்க முடியாது என்றார் அவர்.
தாள் உற்பத்தி செய்யும் போது வெளியேறும் கழிவு நீர், ஆறு, ஏரி மற்றும் கடலின் மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாகும் என்பது நாமறிந்ததே. Shandong மாநிலத்தின் தாள் உற்பத்தி, நாட்டின் 25 விழுக்காட்டை வகிக்கிறது. நீர் சூழலின் மாசுபாடுகளைக் குறைக்கும் வகையில், 2006ம் ஆண்டு முதல், நீர் மாசுபாட்டுப் பொருட்களின் வெளியேற்றம் பற்றிய புதிய வரையறையை Shandong மாநிலம் நடைமுறைப்படுத்தியது. இவ்வரையறை, தற்போது சீனாவிலுள்ள மிகக் கண்டிப்பான மாசு வெளியேற்ற வரையறையாகும் என்று Shandong மாநிலத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்புத் துறையின் துணைத் தலைவர் zhangbo கூறினார். அவர் கூறியதாவது:
இப்புதிய சுற்றுச் சூழல் வரையறை, இரண்டு பயன்கள் வாய்ந்தவை. ஒரு புறம், தொழில் நிறுவனத்தின் பொருளாதார அதிகரிப்பு முறையை மாற்றுவதை இவ்வரையறை முன்னேற்றுகிறது;தொழில் நிறுவனத்தின் கட்டமைப்புச் சரிப்படுதலை மேம்படுத்துகிறது. மறு புறம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான அடிமட்ட பிரிவுகளுக்குத் தெளிவான சட்டசெயலாக்கத்துக்கான அடிப்படையை வழங்குகிறது என்று அவர் கூறினார்.
இப்புதிய வரையறை, Shandong மாநிலத்தின் தாள் உற்பத்தித் துறையில் பசுமை புரட்சி ஒன்றை இவ்வரையறையை எட்டும் வகையில், தொழில் துறையின் கட்டமைப்பை ஆக்கப்பூர்வமாகச் சரிப்படுத்தி, அறிவியல் தொழில் நுட்பத்தைத் தொடர்ந்து மேம்படுத்தி, மாசுபாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க பல பெரிய தாள் உற்பத்தித் தொழில் நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளன. பெருவாரியான சிறிய தாள் உற்பத்தி தொழில் நிறுவனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன அல்லது அகற்றப்பட்டுள்ளன. தொழில் துறையின் கட்டமைப்புச் சரிப்படுத்துதல், Shandong மாநிலத்தின் தாள் உற்பத்தித்துறை பன்முகங்களில் வளர்வதை விரைவுபடுத்தியுள்ளது. கடந்த ஆண்டு, Shandong மாநிலத்தின் தாள் உற்பத்தித்துறையின் மொத்த பொருளாதார அளவு, 10 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியது. இலாபம் மற்றும் வட்டி, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 20க்கு மேலான விழுக்காடு அதிகம். பல்வேறு பொருளாதார இலக்குகள், நாட்டில் முதலிடம் வகித்தன என்று தெரிகிறது.
தாள் உற்பத்தி துறையிலான பசுமை புரட்சியானது, Shandong மாநிலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் மேற்கொண்ட ஒரு சிறிய பகுதியாகும். கடந்த சில ஆண்டுகளில், சுற்றுச் சூழல் நுழைவு வரையறையை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தி, சுற்றுச்சூழல் கண்காணிப்பை அதிகரித்து, மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணியையும் இயற்கை உயிரின சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியையும் Shandong மாநிலம் மேலும் வலுப்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் கண்காணிப்பு ஆற்றலை சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரியங்கள் தொடர்ந்து உயர்த்துகின்றன. மேலும் கண்டிப்பான நடவடிக்கைகள் மூலம் சுற்றுச்சூழலின் சட்ட மீறல் நடவடிக்கைகளை Shandong மாநிலம் கட்டுப்படுத்தி வருகிறது. தவிரவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிறப்பு முதலீட்டை அதிகரித்து, மாசுபாடு தடுப்புத் திட்டப்பணியின் கட்டுமானத்தை அம்மாநிலம் பெரிதும் ஆதரித்து வருகிறது. இத்தகைய நடவடிக்கை மூலம், மாநில பொருளாதாரம் தொடர்ந்து அதிகரிப்பதோடு, மாசுபாடு தடுப்பு மற்றும் வெளியேற்றத்தைக் குறைக்கும் பணியில் குறிப்பிடத்தக்க பயன்களை அது பெற்றுள்ளது. முக்கிய ஆற்றுப் பள்ளத்தாக்கு மண்டலத்தின் சுற்றுச்சூழல் தரம் இடைவிடாமல் மேம்படுத்தப்பட்டு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு தெளிவாக வலுப்படுத்தப்பட்டுள்ளது என்று zhangbo தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளில், முதலீடுகளை Shandong மாநிலம் தணிவுப்படுத்தியுள்ளது. அதிகமான எரியாற்றல் செலவு வாய்ந்த தொழில்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, தொழில் துறையின் கட்டமைப்பை மேலும் மேம்படுத்தியது. கடந்த ஆண்டு, மின்சாரம்,
சிமெந்து, நிலக்கரி, உலோகம், இரும்புருக்கு முதலிய அதிகமான எரியாற்றல் செலவு வாய்ந்த தொழில் துறைகளிலான முதலீட்டுத் தொகை 20 விழுக்காடு குறைந்தது. தவிரவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முதலீட்டுத் தொகை ஒரு மடங்கு அதிகரித்தது. தொழில் துறையின் கட்டமைப்பைச் சரிப்படுத்துவது என்பது, பொது மக்களுக்கு மேலும் சிறந்த சுற்றுச்சூழலைக் கொண்டு வருகிறது என்று Shandong மாநிலத்தின் அரசுச் செய்தித் தொடர்பாளர் zhangdekuan தெரிவித்தார். அவர் கூறியதாவது:
Shandong மாநிலத் தொழில் துறையின் கட்டமைப்பு, சில இன்னல்களை எதிர்நோக்க கூடும். எட்டுத்துக்காட்டாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு குறைந்துள்ளது. அதன் வளர்ச்சி வேகம் குறைவது என்பது மிகவும் தேவையானது கூட. பொருளாதாரத்தின் வளர்ச்சியை பொது மக்களை அனுபவிக்க விட வேண்டும். உடை, உணவு, உறைவிடம் முதலியவற்றிலிருந்து வளர்ச்சியின் பயன்களை பகிர்ந்துகொள்ள மக்களை விட வேண்டும் என்பது மேலும் முக்கியமானது என்றார் அவர்.
|