• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-16 10:27:24    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு செய்தி

cri
29வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஆகஸ்ட் 8ம் நாள் பெய்சிங்கில் நடைபெறும். ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் பொது சுகாதார பாதுகாப்பு பிரச்சினை பல்வேறு சமூக வட்டாரங்கள் கவனம் செலுத்தி வருகின்ற பிரச்சினையாகும். பல பொது சுகாதார முன்னெச்சரிக்கை அமைப்பு முறைகள் இடம்பெறும் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைமையை பெய்சிங் உருவாக்கியுள்ளது.

ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் போது, கடும் தொற்று நோய்கள் ஏற்படவில்லை என்பதற்கு பெய்சிங் உத்தரவாதம் அளித்து, பிதிய தொற்று நோய்களைப் பயன்தரும் முறையில் கட்டுப்படுத்தி, குடி நீர் மாசுபாடு ஏற்படாமல் தவிர்த்து, திடீர் பொது சுகாதார நிகழ்ச்சிகளையும் பயங்கரவாதத் தாக்குதலையும் உடனுக்குடன் சமாளித்து, அனைத்து காயமுற்றோர்களும் மருத்துவ மனையில் சேர்க்கப்படுவதற்கு உத்தரவாதம் அளிக்கும். பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் மருத்துவ உத்தரவாத அலுவலகத்தின் தலைவர் Jin Dapeng பெய்சிங்கில், நமது செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது, இவ்வாறு தெரிவித்தார். பெய்சிங், சுகாதார முன்னெச்சரிக்கைத் தலைமையகத்தையும் பொது சுகாதார முன்னெச்சரிக்கை அமைப்பு முறையையும் உருவாக்கியுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் சுகாதார சேவையை உத்தரவாதம் செய்யும் ஆற்றல் குறிப்பிடதக்க அளவில் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, பொது சுகாதார பாதுகாப்பின் மற்றொரு முக்கிய பகுதியாகும். உலக சுகாதார அமைப்புடனும், தியன் சின், ஹெய் பெய், சாங் சிய், உள் மங்கோலியா, லொய் நின், சிய் லின் ஆகிய மாநிலங்கள், தன்னாட்சிப் பிரதேசங்கள் மற்றும் மாநகரங்களுடனும் பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் மருத்துவ உத்தரவாத அலுவலகம் ஒத்துழைத்து, கடும் தொற்று நோய்க்கான கூட்டு கட்டுப்பாட்டு அமைப்பு முறையை உருவாக்கியுள்ளது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் பொது சுகாதார பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், உணவு பொருட்கள், குடி நீர் முதலியவற்றுக்கு கண்காணிப்பை நடத்தி வருகின்றது என்று பெய்சிங் சுகாதார ஆணையத்தின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் தலைவர் Zhao Tao கூறினார்.
2006ம் ஆண்டு முதல், சுவாச தொற்று நோய், தடுமம் உள்ளிட்ட சில சாதாரண தொற்று நோய்களுக்கும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் போது, வெளிநாட்டு வீரர்கள் பெய்சிங்கிற்கு வந்து, ஏற்படுத்தக் கூடும் தொற்று நோய்களுக்கும் பெய்சிங் ஆபதான மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளது என்றார் அவர்.

தவிர, கிருமி தொற்றிய உயிரினங்களைத் துடைத்தொழிப்பது என்பது பொது சுகாதார பாதுகாப்புப் பணிகளிலான முக்கிய பணியாகும். இதைக் கட்டுப்படுத்தும் திட்டங்களை தொடர்பான சுகாதார வாரியங்கள் வகுத்துள்ளன. ஜூன் 20ம் நாள், கிருமி தொற்றிய உயிரினங்களைத் துடைத்தொழிக்கும் நடவடிக்கை ஒன்றை பெய்சிங் நடத்தும் என்று பெய்சிங் நாட்டுப்பற்று சுகாதார நடவடிக்கைக் குழுவின் தலைவர் Liu Zejun விவரித்தார்.
ஜூன் 29ம் நாள் முதல், தொடர்புடைய பணியாளர்கள் 8 குழுக்களில் அனைத்து ஒலிம்பிக் திடல்களும் அரங்குகளும் மீது முதலாவது சுற்று சோதனையை மேற்கொள்வார்கள்.
தவிர, ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் நிகழ கூடும் திடீர் பொது சுகாதார பாதுகாப்பு நிகழ்ச்சி குறித்து பெய்சிங் சுகாதார ஆணையம் ஆயத்தமும் செய்துள்ளது என்று பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் மருத்துவ உத்தரவாத அலுவலகத்தின் தலைவர் Jin Dapeng கூறினார்.