• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-16 18:38:37    
கான் சு மாநிலத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான மறுசீரமைப்பு

cri

மே 12ம் நாள் வென்ச்சுவான் மாவட்டத்தில் நிகழ்ந்த கடும் நிலநடுத்தத்துக்கு பின், சிச்சுவான் மாநிலத்துக்கு அருகிலுள்ள கான் சு மாநிலத்திலான பாதிப்பு அளவு, சிச்சுவானுக்கு அடுத்த இடத்தில் இருக்கினறது. தற்போது, கான் சு மாநிலத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணி சீராக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கான் சு மாநிலத் துணைத் தலைவர் Feng Jianshen தெரிவித்தார்.

மறுசீரமைப்புப் பணியில் ஈடுபட்ட விவசாயி ஒருவர்

இன்று பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், ஜுன் 14ம் நாள் வரை, கான் சு மாநிலத்தில் நிலநடுக்கத்தில் 365 பேர் உயிரிழந்தனர், 10ஆயிரம் பேர் காயமுற்றனர். மொத்தம் 50லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர் என்று அவர் கூறினார். மதிப்பீட்டின் படி, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நேரடி பொருளாதார இழப்பு 4428கோடி யுவான் ஆகும் என்று அவர் தெரிவித்தார்.

ஜுன் 14ம் நாள் வரை, சீன நடுவண் நிதித் துறை ஒதுக்கியநிதி 488கோடியே 40லட்சம் யுவானாகும். பெற்ற நன்கொடைத் தொகை 110கோடி யுவானாகும். கான் சு மாநிலத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான மறுசீரமைப்பு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.