இன்று முற்பகல், பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் மேற்குச் சீனாவின் நகரான Urumqiயில் நடைபெற்றது. இது, சின்கியாங் உயிகூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தின் துவக்கமாகும்.

Urumqiயின் மக்கள் சதுக்கம், ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தின் துவக்க இடமாம்.
முற்பகல் 9:30 மணி அளவில், இத்தொடரோட்டம் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது.
Urumqiயில் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நெறியின் நீளம், சுமார் 12.48 கிலோமீட்டராகும். 208 தீபம் ஏந்தும் நபர்கள், இதில் கலந்து கொண்டனர்.
|