• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-17 12:52:02    
வான் ஷோ கோயில்

cri

வான் ஷோ கோயில், பெய்ஜிங் ஹை தியான் பிரதேசத்திலுள்ள Gaoliang ஆற்றின் Guangyuan அணையின் மேற்கில் உள்ளது. முன்பு, Ju Se கோயில் என அழைக்கப்பட்ட அது, தான் வம்சக்காலத்தில் கட்டியமைக்கப்பட்டது. 1577ம் ஆண்டு, வான் ஷோ கோயில் என்ற பெயராக மாறியது. அங்கு, திருமறை நூல்கள் முக்கியமாக சேகரிக்கப்பட்டுள்ளன. 1894ம் ஆண்டு, வான் ஹோ கோயில் பேரரசர் வெளியே சென்று தங்கியிருக்கும் அரண்மனையாகப் புனரமைக்கப்பட்டது. சிங் வம்சக்காலத்தில், பேரரசர் ச்சியான் லோங் அவருடைய தாயின் பிறந்த நாளுக்கு மூன்று முறையாக இதில் கொண்டாடினார். தற்போது, தா ச்சோங் கோயிலில் இருக்கின்ற யோங் லே பெரிய மணி, முன்பு வான் ஷோ கோயிலில் இருந்தது.

1934ம் ஆண்டுக்குப் பின், வான் ஷோ கோயிலின் முன் பகுதி, வடக்கிழக்குப் பகுதியில் குடியேறும் அகதிகளின் குழந்தைகளுக்கான பள்ளியாகப் பயன்படுத்தப்பட்டது. 1985ம் ஆண்டு முதல், வான் ஷோ கோயில், பெய்ஜிங் கலை அருங்காட்சியகமாகத் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மிங் மற்றும் சிங் வம்சக்காலத்தின் கலைப்பொருட்கள், அதன் தனிச்சிறப்பு வாய்ந்தவை.

அதன் முக்கிய பகுதியில் நுழைந்ததும், ஏழு முற்றங்கள் காணப்படுகின்றன. அவை, தியான் வாங் மண்டபம், தா ச்சியோங் பௌ மண்டபம், வான் ஷோ கே, தா ச்சான் மண்டபம், யூ பெய் விதான மண்டபம், வூ லியாங் ஷோ ஃபோ மண்டபம், வான் ஷோ மாளிகை என்பனவாகும்.

அவற்றில், தீ விபத்தால் நாசமான வான் ஷோ கே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், செப்பணிடப்பட்டது.

வூ லியாங் ஷோ ஃபோ மண்டபத்தின் இரு வாயில்கள், baroque கலை நடையாக இருக்கின்றன. அவை, சிங் வம்சக்காலத்தில் பேரரசர் ச்சியான் லோங் ஆட்சியின் போது கட்டப்பட்டன. இது அரசக் குடும்பத்தின் கோயில்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது.

தா ச்சான் மண்டபத்துக்குப் பின், மூன்று செயற்கை மலைகள் இருக்கின்றன. அவை, பூ த்துவோ, ஏ மெய், ச்சிங் லியாங் மலைகளின் சின்னங்களாகும். செயற்கை மலைகளின் மேலே, குவான் யீன், வென் ஷூ, பூ சியான் மூன்று மண்டபங்கள் இருக்கின்றன. மலைகளுக்குப் பின், அமைந்துள்ள யூ பை விதான மண்டபமாகும். கிழக்குப் பகுதியில், ஃபாங் ச்சாங் மற்றும் தோட்டம் இருக்கின்றன. அங்கு, துறவிகள் வாழ்ந்தனர். மேற்குப் பகுதியில், பேரரசர் ச்சியான் லோங் ஆட்சி காலத்தில், பேரரசர் தங்கியிருக்கும் மண்டபமாகப் புனரமைக்கப்பட்டது.

சிங் வம்சக்காலத்தின் பழங்காலக் கட்டிடமான வான் ஷோ கோயில், 6வது தொகுதியாக சீனாவின் முக்கியத் தொல்பொருள் பாதுகாப்புப் பிரிவில் சேர்ந்ததாக 2006ம் ஆண்டு மே திங்கள் 25ம் நாள், சீன அரசவை தீர்மானித்தது.