• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-17 16:41:59    
சீனாவில் புகழ்பெற்ற Fudan பல்கலைக்கழகம்

cri
Fudan பல்கலைக்கழகம் 1905ம் ஆண்டு நிறுவப்பட்டது. இது 102 ஆண்டுகால வரலாறுடையது. மானுடவியல், சமூகவியல், இயற்கையியல், தொழில் நுட்பியல், நிர்வாகயியல், மருத்துவயியல் முதலிய துறைகளின் ஆய்வுக்கான ஒரு பன்நோக்கு பல்கலைக்கழகம் இதுவாகும்.

Fu dan பல்கலைக்கழகத்தில் பயிலும் காரணம் பற்றி, Hamberg இல் நவீன சீன இயல் கற்றுக்கொண்ட ஜெர்மன் மாணவி He mei ke கூறியதாவது,

சீன மொழி, சீனப் பண்பாடு ஆகியவற்றின் மீது ஆர்வம் கொண்டுள்ளேன். ஆகையால், நடைமுறை நிலைமையைப் பார்க்க இங்கே வந்தேன். வெளிநாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் சீனாவின் உண்மை நிலைமை பற்றி அறிய முடியாது என்றார் அவர்.

ஏன் Fudan பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுப்பதென்ற கேள்விக்கு பதிலளிக்கையில், அவர் உணர்ச்சிவசப்பட்டு விளக்கி கூறியதாவது

Fudan பல்கலைக்கழகம் மிகவும் புகழ்பெற்றது. ஜெர்மனியில் அனைவரும் இது பற்றி அறிந்துள்ளனர். நான் Fudan பல்கலைக்கழகத்தின் மாணவி என்பதை அறிந்த பிறகு, ஓ, நல்ல பல்கலைக்கழகம் என்று அவர்களும் கூறினர் என்றார் அவர்.

தற்போது, Fudan பல்கலைக்கழகத்தில் தத்துவ இயல் கழகம், அந்நிய மொழி கழகம், செய்தி கழகம், சட்டவியல் கழகம் உள்ளிட்ட 17 கழகங்களும் 70 துறைகளும் அடங்கியுள்ளன. பல்கலைக்கழகத்தில் சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் பயில்கின்றனர். அவர்களில் 3500 பேர் முனைவர் பட்ட மாணவர்களாவர். 7500 பேர் முதுகலை பட்ட மாணவர்களாவர். அந்நிய மாணவர்களின் எண்ணிக்கை 3000ஐத் தாண்டியுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அறிவியல் ஆய்வு பணியாளர்களின் எண்ணிக்கை சுமார் 2300 ஆகும். அவர்களில் பேராசிரியர் அல்லது துணை பேராசிரியர்களின் எண்ணிக்கை 1300க்கு மேலாகும்.

அந்நிய மாணவர்கள் சீனா பற்றி அறிந்து கொண்டு, சீனச் சமூகத்துடன் இணைப்பதற்கு வழிக்காட்டுவதில் fu dan பல்கலைக்கழகம் பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, he mei ke ஓய்வு நேரத்தில் அடிக்கடி விவசாய தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்கும் ஒரு துவக்கப் பள்ளிக்குச் சென்று, அவர்களுடன் உரையாடி, அவர்களுக்கு ஆங்கில மொழியைக் கற்பிக்கின்றார். அவர் கூறியதாவது

சீனக் குழந்தைகளுக்கு உதவி செய்ய விரும்புகின்றேன். நாங்கள் சீனாவுக்கு வந்து வாழ்கின்றோம். சீனர்களுடன் பழகுவதில் அவர்கள் எங்களுக்கு அன்பு காட்டுகின்றனர். ஆகையால், சீனச் சமூகத்துக்கும் வறிய மக்களுக்கும் உதவி செய்ய விரும்புகின்றேன் என்றார் அவர்.

அந்நிய மாணவர் விவகாரப் பணியகத்தின் துணைத் தலைவர் yang zeng guo கூறியதாவது

மேலும், எமது அந்நிய மாணவர்கள் குடியிருப்புப் பிரதேச நடவடிக்கைகளிலும் பங்கெடுக்கின்றனர். அவர்கள் சாலைகளில் போக்குவரத்து பாதுகாப்பு பற்றி பிரச்சாரம் செய்கின்றனர். கடந்த வாரம், சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றிய பிரச்சார நடவடிக்கை fu dan பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போது, தென் கொரிய மாணவர்களின் மேள அணி இதில் கலந்து கொண்டது என்றார் அவர்.

சீனாவில் பல்கலைக்கழக மாணவர்கள் பயிற்சிக்காக, ஒதுக்குப்புற கிராமப்புறங்களுக்குச் சென்று, இலவசமாக ஆசிரியராகப் பணி புரிகின்றனர். Fu dan பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு அந்நிய மாணவர் இவர்களில் ஒருவராவார். மலேசியாவிலிருந்து வந்த அவரின் பெயர் li yuan chao. அவர் கூறியதாவது

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இது பற்றி அறிந்து உணர்ச்சி வசப்பட்டேன். என்னைப் பொறுத்த வரை, இது ஒரு நல்ல பயிற்சியாகும். ஆகையால், இதில் பங்கெடுக்க முடிவு செய்தேன் என்றார் அவர்.

ஒரு முகப்படுத்தல் மயமாக்க கோட்பாட்டின் படி fu dan பல்கலைக்கழகம், அந்நிய மாணவர்களை நிர்வகி்க்கின்றது. அதாவது, சீன மாணவர்களை நிர்வகிக்கும் கோரிக்கைக்கிணங்க அந்நிய மாணவர்களை நிர்வகிக்கி்றது. இதேவேளையில், பண்பாடுகளுக்கிடையிலான வேறுபாடு, வேறுபட்ட கல்வி அடிப்படை முதலிய பிரச்சினைகள் குறித்து, சில பகுதி நேர பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றது. அந்நிய மாணவர்களுக்கு கல்வி மற்றும் வாழ்க்கை தகவல் வழங்குகின்றது. இவை எல்லாம், உலகளவிலான பல பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் போன்றவை.

Fudan பல்கலைக்கழகத்தின் உலக மயமாக்கம், பல அந்நிய மாணவர்களை ஈர்க்கும் காரணங்களில் முக்கிய ஒன்றாகும். மலேசிய மாணவர் chen xin quan கூறியதாவது

Fu dan பல்கலைக்கழகம் ஷாங்காய் மாநகரில் அமைந்துள்ளது. ஷாங்காய் நகரம், பல்வேறு துறைகளில் உலகில் முன்னணியில் உள்ளது. சீன மொழியிலும் ஆங்கில மொழியிலும் பயிற்றுவிக்கப்படுகின்றது. பல வெளிநாட்டுப் பேராசிரியர்கள் இங்கே வந்து கற்பிக்கின்றனர். ஸ்வீடன், நார்வே முதலிய நாடுகளுடன் ஒத்துழைத்து, மாணவர்கள் பரிமாற்றம் மேற்கொள்ளப்படுகின்றது. இத் துறையில் fudan மிகவும் சிறப்பாக செயல்படுகின்றது என்றார் அவர்.

தற்போது, fu dan பல்கலைக்கழகம், 30க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 150க்கு மேற்பட்ட ஆய்வு நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு பரிமாற்றத் திட்டப்பணிகளை உருவாக்கியுள்ளது. சீனாவில் 4 சீன மொழி கல்வி தளங்களில் இது ஒன்றாகும். Frankfurt, Auckland முதலிய இடங்களில் 7 கன்புஃயூசியஸ் கழகங்களை இது அமைத்துள்ளது.

Yang guo zeng கூறியதாவது

Fu dan பல்கலைக்கழகம், சுதந்திரமான சிந்தனையுடைய உயர் சர்வதேச மயமாக்க பல்கலைக்கழகமாகும். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் fudan பல்கலைக்கழகத்தில் முழு உலகிற்கும் முழு மனித குலத்துக்கும் நன்மை பயக்கும் சாதனை பெற பாடுபடுவதை வரவேற்கின்றோம் என்றார் அவர்.