• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-17 16:45:38    
சீனாவின் மாபெரும் கண்டுபிடிப்புகள்

cri
மனிதனின் பல்வேறு தேடல்கள் பெரும்பாலும் அவனது தேவைகளின் அடிப்படையிலேயே தோன்றுகின்றன. தேவைகள் தேடுதல்களுக்கு வழிகோல, தேடல்கள் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாகின்றன. மனிதனின் தேடல் இன்றளவும் நின்றபாடில்லை. தேவைகள் இருக்கும் வரை தேடல்களுக்கு முடிவில்லை. அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தேடல்களும், கண்டுபிடிப்புகளும் அதன் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அடையாளப்படுத்துவதோடு, அச்சமூகத்தின் பண்பாட்டில் முக்கிய ஒரு பங்குமாகிவிடுகின்றன.

இன்றை சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் சீனாவின் நான்கு மாபெரும் கண்டுபிடிப்புகளை பற்றி அறிமுகப்படுத்துகிறோம்.

திசைகாட்டி, காகிதம் (தாள்), அச்சு, வெடிமருந்து ஆகியவையே சீனாவின் மாபெரும் கண்டுபிடிப்புகளாக கருதப்படுகின்றன.

திசைகாட்டி

சூரியன் எழும் திசையை பார்த்து கிழக்கை அறிந்தார்கள் பண்டைக்கால மக்கள். ஆனால் எல்லா நேரமும் சூரியனை பார்த்து கணித்துவிட முடியாதல்லவா. திசையை சரியாக தெரிந்துகொள்ள உதவும் திசைகாட்டியை சீனர்கள் கண்டுபிடித்ததுகூட எதேச்சையாகத்தான்.

சீனாவின் வசந்தம் மற்றும் இலையுதிர்கால கட்டமான கிமு 770 முதல் 476ம் ஆண்டுவரையான காலத்தில், நிலத்தினடியில் கிடைத்த உலோகங்களை அகழ்ந்தெடுத்து, செப்பு, இரும்பு ஆகியவற்றை உருக்கி பயன்படுத்தும் நுட்பத்தை அறிந்திருந்தனர். ஒருமுறை எதேச்சையாக காந்தத்தனமை கொண்ட, இரும்போடு ஒட்டிக்கொள்ளக்குடிய தன்மைகொண்ட, வடக்கு நோக்கியே திரும்பிய இயற்கையான ஒரு காந்தப்பொருளை சீனர்கள் கண்டெடுத்தனர்.

இந்த காந்தப்பொருளைக் கொண்டு திசையை அறிந்துகொள்ளலாம் என்ற எண்ணம் சீனர்களுக்கு எழ, அதை ஒரு கருவியாக பயன்படுத்த முற்பட்டனர். கிமு 206 முதல் கிபி 26ம் ஆண்டுவரையான போரிடும் கால கட்டத்தில் தொடர்ச்சியான மேம்படுத்தல்களின் கனியாக திசைகாட்டும் கருவி உருவானது. வெண்கலத்தாலான தட்டு அல்லது சதுர வடிவ தகடு ஒன்றின் மேல் ஒரு கரண்டி போல் அமைந்த காந்தப்பொருள் வைக்கப்பட்டிருந்தது. இந்த கரண்டிபோல் காணப்பட்ட காந்தப்பொருள்தான் திசை காட்டும் முள்.. இந்த திசைகாட்டியின் முள், அதாவது கரண்டியின் அடிப்பாகம் தெற்கை காட்ட, சதுர வடிவிலான தட்டு உலகை, புவியை அடையாளப்படுத்த, நடுவிலான வட்ட வடிவம் விண்ணுலகை குறித்தது. இந்த திசைகாட்டி தெற்கு நோக்கி என்று குறிப்பிடப்பட்டது. இந்த வெண்கலத்தட்டில் வடக்கு வடகிழக்கு, தெற்கு தென்கிழக்கு உள்ளிட்ட முக்கிய எட்டு திசைகளை குறிக்கும், அடையாளப்படுத்தும் சீன எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இந்த திசைகாட்டி அறிவியல்பூர்வமான முறையில் சோதிக்கப்பட்டு, நன்றாகவே வேலை செய்வதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதுதான் வியப்புக்குரிய உண்மை.

காந்தபொருளாலான கரண்டையை ஒவ்வொரு முறையும் இந்த வெண்கலத்தட்டில் வைத்து திசையை கணிக்கும் சிக்கலும், தங் மற்றும் வடக்கு சுங் வம்சகால வாக்கில் நீங்கியது. அதற்குள்ளாக சீனர்கள் இரும்பு ஊசிகள் அல்லது முட்களை காந்தமாக்கும் வித்தைய கற்றிருந்தனர். மாக்னடைட் எனப்படும் ஒரு காந்தத்தன்மைகொண்ட உலோகப்பொருளில் இரும்பு ஊசிகளை தேய்த்து தண்ணீரில் போட்டால் அவை இந்த உராய்வின் வெப்பம் தணிவடைவதோடு, புவியின் அச்சுக்கேற்றபடி வடக்கு தெற்கு திசை அமைவில் மிதந்ததை சீனர்கள் கண்டனர். இதற்கு பின் இந்த காந்தமேறிய இரும்பு ஊசிகள் நீரில் மிதக்கவைக்கப்பட்டோ, கூரான அம்பின் நுனியில் வைக்கப்பட்டோ அல்லது பட்டு நூலில் தொங்க விடப்பட்டோ, திசையை கண்டறிய பயன்படுத்தினர். இந்த ஊசி மிகவும் எளிதாக பயன்படுத்தக்கூடியது என்பதால், பயணம் செல்பவர்களின் திசைகாட்டும் வழித்துணையாக பரவலான பயன்பாட்டுக்கு வந்தது.

கிபி 960 முதல் 1279ம் ஆண்டு வரையான சுங் வம்சக்காலத்தில் சீனர்களின் திசைகாட்டும் கருவியின் உதவியுடன், சவுதி அரேபிய வரை திசை மாறி வழி தவறாமல், வணிகக்கப்பல்கள் சென்று திரும்பின. பின் வட சுங் வம்சக்காலத்தில் சீனர்களின் திசைகாட்டும் கருவிகள் அரேபியர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டன. திசைகாட்டிகளின் ஐரோப்பிவிலான பரவலாக்கம், உலகின் பல கடல் மற்றும் பெருங்கடல் பயணங்களுக்கும், அதன் மூலம் புதிய உலகம் என்றழைக்கப்பட்ட ஐரோப்பா, ஆப்பிரிக்காவை தவிர்த்த மேற்குலகை, வட தென் அமெரிக்காவை கண்டுபிடிப்பதற்கு காரணமானது.

காகிதம் (தாள்)

காகிதம் அல்லது தாளை கண்டறிந்த முதல் நாடு சீனாதான்.

கிமு 206 முதல் கிபி 23ம் ஆண்டு வரையான மேற்கு ஹான் வம்சக்காலத்திலேயே காகிதம் அல்லது தாளின் முதல் மூல வடிவம் சீனாவில் நிலவியது ஆனால் அக்காலத்து காகிதங்கள் மிகவும் அடர்த்தியாக, தடிமனாக காணப்பட்டன. சொர சொரப்பான, கரடுமுரடான பரப்பை கொண்டிருந்த இவை நார்ச்செடிகள் அல்லது சணலை நசுக்கி சிதைத்து அதன் மூலம் செய்யப்பட்டன. கான் சு மாநிலத்தின் ஹான் கல்லறை ஒன்றிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட காகிதம் தான் தற்போது வரை மிகப்பழமையான காகிதமாகும். மேற்கு ஹான் வம்சக்காலத்தின் துவக்க காலத்தைச் சேர்ந்தது இந்த காகிதம் என்று நம்பப்படுகிறது.

கிபி 25ம் ஆண்டு முதல் 220 வரையான கிழக்கு ஹான் வம்சக்காலத்தில் சாய் லுன் என்ற அரண்மனை அதிகாரி மரப்பட்டை, நார்ச்செடிகள், துணிக்கந்தல், மீன்வலை, கோதுமைத்தண்டு முதலிய பொருட்களை கொண்டு புதிய ஒரு காகிதத்தை தயாரித்தார். இது முந்தைய காகிதத்துடன் ஒப்பிடுகையில் மலிவானதாகவும், மெல்லியதாகவும், எடைகுறைவாகவும், நீடித்து உழைக்கக்கூடியதாகவும், தூரிகைகளால் எழுதப்படுவதற்கு ஏதுவானதாகவும் இருந்தததாம்.

சுய் வம்சக்காலத்தின் முடிவிலும் தங் வம்சக்காலத்தின் துவக்கத்திலும் அதாவது ஏறக்குறைய 7ம் நூற்றாண்டு வாக்கில் காகிதத்தயாரிப்புக்கலை கொரியாவுக்கும், ஜப்பானுக்கும் பரவியது. 8ம் நூற்றாண்டில் சீனப் பட்டுபாதையினூடாக காகிதத் தயாரிப்பு அரபு நாடுகளுக்கும் பரவியது. காகிதத் தயாரிப்பு அரபு நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்கு பரவ 400 ஆண்டுகள் ஆனது. 14ம் நூற்றாண்டு வாக்கில் இத்தாலியில் பல காகிதத் தயாரிப்பு ஆலைகள் நிறுவப்பட்டன. அங்கிருந்து ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளுக்கு காகிதத் தயாரிப்பு நுட்பம் பரவியது. இத்தாலியர்கள் காகிதத்தை பெருமளவில் தயாரித்து ஏற்றுமதி செய்து ஐரோப்பிய சந்தைகளில் முக்கிய இடம் பெற்றனர். 16ம் நூற்றாண்டில் ரஷ்யாவுக்கும், ஹாலந்துக்கும் பரவிய காகிதத் தயாரிப்புக்கலையும் நுட்பமும், 17ம் நூற்றாண்டில் பிரிட்டனில் பரவியது.

காகிதம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் எல்லாமே மரப்பலகை, மூங்கில்களில்தான் எழுதப்பட்டன. சீன வரலாற்றின் முதல் பேரரசரான ச்சின் ஷுஹுவாங் கிட்டத்தட்ட 120 கிலோ எடை கொண்ட மூங்கில் மற்றும் மரப்பட்டைகளில் எழுதப்பட்ட ஆவணங்களை தனது ஆட்சியில் சந்திக்க நேர்ந்ததாம். காகிதத்தின் கண்டுபிடிப்பு அறிவின் பரவலாக்கத்தை நனவாக்கியது. மனித குல வரலாற்றில் ஒரு சகாப்தமாக காகிதத்தின் கண்டுபிடிப்பை குறிப்பிடுவது சாலப் பொருந்தும்.