• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-17 18:24:12    
திபெத் பிரதேசத்தின் வரலாறு

cri
சீனா, பல்வேறு தேசிய இனங்களை கொண்ட ஒரு நாடாகும். 13ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், திபெத் பிரதேசம் யுவான் வமிசத்தின் வரைபடத்தில் அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்பட்டது. இதனால், திபெத் பிரதேசம், கடந்த சீன நடுவண் அரசகளின் நிர்வாகத்தில் இருந்து வருகின்றது என்று பொதுவாக கருதப்படுகிறது.

உண்மையிலேயே கி.மு. முதல், திபெத் பிரதேசத்தில் வாழ்ந்த திபெத் இனத்தின் முன்னோடிகள் சீன நடுப் பகுதியில் வாழ்ந்த Han இனத்தவருடன் தொடர்பு கொண்டுள்ளனர். கி.பி 7ம் நூற்றாண்டின் துவக்கத்தில், சீன நடுப் பகுதியில் ஒன்றினைந்த Tang வம்ச ஆட்சி நிறுவப்பட்டது. அதே வேளையில், திபெத் இன வீரர் Songtsan Gambo உம் திபெத் பீடபூமியில் ஒன்றினைந்த ஆட்சியை நனவாக்கி, Tubo அரசை நிறுவினார். Songtsan Gambo முன்முயற்சியுடன் Tang வம்சத்தின் ஆட்சியுடனான நட்புறவை உருவாக்கினார். Wen Cheng என்ற Tang வம்சத்து இளவரசியை Songtsan Gambo மணந்தார். தவிர, Tang வம்சத்தின் முன்னேறிய உற்பத்தித் தொழில் நுட்பத்தையும், அரசியல் மற்றும் பண்பாட்டு வளங்களையும் கற்றுக் கொண்டதோடு, Tang வம்சத்தின் தலைநகரில் கல்வி பெற திபெத் இன பிரபுக்களை அனுப்பினார். நீண்டகாலத்தில், அரசியல், பொருளாதாரம், பண்பாடு முதலிய துறைகளில், திபெத் இனத்தின் Tubo ஆட்சி, Tang வம்சத்தின் ஆட்சியுடன் மிகவும் சிறந்த நட்புறவை நிலைநிறுத்திரிந்தது.

கி.பி. 842ம் ஆண்டு, உள் புற சர்ச்சையால், Tu Bo ஆட்சி பிளவுபட்டது. திபெத் பிரதேசத்தில் பல்வேறு உள்ளூர் சக்திகளுக்கிடையில் உட்பூசள்கள் மீண்டும் தோன்றின. போராட்டங்கள் தொடர்ந்து 400 ஆண்டுக்கு மேல் நீடித்தது. 13ம் நூற்றாண்டின் துவக்கத்தில், மங்கோலிய இனத்தின் தலைவர் செங்கிஸ்கான், சீனாவின் வட பகுதியில் Mongol Khan என்ற நாட்டை நிறுவினார். 13ம் நூற்றாண்டின் 40ம் ஆண்டுகளின் இறுதியில், திபெத் மரபுவழி புத்தமத Sagya பிரிவைச் சேர்ந்த மூத்த மத குருமார் Pandita Kunga Gyaltsen இன் அறிவுரையால், திபெத் பிரதேசத்திலான பல்வேறு உள்ளூர் சக்திகளும், Mongol Khan நாட்டின்

ஆட்சியை ஏற்றுகொண்டன. Sagya என்ற உள்ளூர் ஆட்சி திபெத்தில் நிறுவப்பட்டது.

1271ம் ஆண்டில், Mongol Khan என்ற பெயரை, யுவானாக மாற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்தது. 8 ஆண்டுகளுக்குப் பின், யுவான் அரசனின் கீழ் முழு சீனாவும் ஒன்றிணைக்கப்பட்டது. திபெத்தும், யுவான் அரசின் நேரடியான தலைமையிலான ஒரு நிர்வாக பிரதேசமாக மாறியது. திபெத் விவகாரங்களுக்கு பொறுப்பான நிர்வாக தலைவர், தொடர்புடைய அதிகாரிகள் ஆகியோரை யுவான் அரசு நியமித்தது.

தவிர, திபெத் முதல், யுவான் வம்சத்தின் தலைநகரான பெய்சிங் வரையான போக்குவரத்துக்கு வசதியை வழங்கும் வகையில், அஞ்சல் பரிமாற்ற ஓய்வெடுக்கும் நிலையங்கள் பலவற்றை யுவான் அரசு திபெத்தில் நிறுவியது.