• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-17 09:34:25    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை: . தொடரும் உங்கள் கடித, மின்னஞ்சல் ஆதரவிற்கு நன்றி கூறி நிகழ்ச்சிக்கு செல்கிறோம்.
........சீனாவின் வெச்சுவான் நிலநடுக்கம் ஏற்பட்ட பின் மிகப் பல நேயர்கள் தொலை பேசி அல்லது மின்னஞ்சல் மூலம் ஆறுதல் தெரிவித்துள்ளனர். இன்னும் பல நேயர்கள் அவர்களின் ஆறுதலையும் அனுதாபத்தையும் தொலை பேசி மூலம் வெளிப்படுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இப்போது நிலநடுக்க சோகத்தை மறந்து ஒலிம்பிக் நடத்துமாறு பெரம்பலூர் சு கலைவாணன் ராதிகா வேண்டுகோள் விடுத்துள்ளார். அவருடைய கருத்தை கேளுங்கள்.....
.......அடுத்து விழுப்புரம் எஸ். பாண்டியராஜன் நிலநடுக்கத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அவருடைய ஆறுதலை கேளுங்கள்....
......அடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட பின் விரைந்து சென்ற சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவின் செயல்பாட்டை பாராட்டும் நாகர்கோயில் பிரின்ஸ் ராபர்ட் சிங் தெரிவித்த கருத்தை கேளுங்கள்.
க்ளீட்டஸ்: இலங்கை காத்தான்குடி ஏ. ஆர். தஸ்பீஹா எழுதிய கடிதம். சீன வானொலியில் இடம்பெற்று வரும் சீன உணவு அரங்கம், சீன வரலாற்றுச் சுவடுகள் போன்ற நிகழ்ச்சிகள் சுவையாக அமைந்துள்ளன. குறிப்பாக வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சி இலங்கையில் உள்ள என் போன்ற நேயர்களுக்கு சீனாவின் வரலாற்றை பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது.

கலை...... சேலம் செ. ஜெயகுமார் எழுதிய கடிதம். ஒலிம்பிக் பற்றிய செய்திகளை சீன வானொலியில் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்கிறேன். ஏப்ரல் திங்களில் மீனாட்சிபாளையம் கா. அருணின் நேயர் மன்றத்தினர் தயாரித்து அளித்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிய உரையாடல் மற்றும் பாட்டுக்குப்பாட்டு ஆகிய நிகழ்ச்சிகள் சிறப்பாக இருந்தன. அவரது குழுவினருக்கும், சீன வானொலிக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
க்ளீட்டஸ்: மீனாட்சிபாளையம் கா. அருண் எழுதிய கடிதம். பெய்சிங் ஒலிம்பிக் போட்டி தொடர்பான பொது அறிவுப் போட்டி கட்டுரைகளை கேட்டேன். இவற்றின் மூலம் ஒலிம்பிக் விளையாட்டு அரங்கின் கட்டுமானம், ஒலிம்பிக்கின் துவக்க விழாவும், நிறைவு விழாவும் நடைபெறும் பறவைக்கூடு விளையாட்டரங்கம் ஆகியவை பற்றி விரிவாக அறிந்துகொள்ள முடிந்தது. மேலும், செய்தித்தொகுப்பு நிகழ்ச்சியின் மூலம் ஒலிம்பிக் போட்டிக்காக காற்றுத்தரத்தை சீராக்கி உறுதி செய்ய சீன அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை பற்றி அறிந்தேன். பாராட்டுக்குரிய முயற்சிகள்.
கலை: கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி குறித்து ஊட்டி எஸ். கே. சுரேந்திரன் எழுதிய கடிதம். சீன கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை பற்றியும் அவர்களின் நபர்வாரி வருமானம் பற்றியும் நேயர் தெ. நா. மணிகண்டன் கேட்ட கேள்விக்கு தாங்கள் அளித்த விளக்கம் மிகவும் அருமை. சின்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தில் கழுத்து மற்றும் தலையில் அணிய வண்ணப்பட்டுத் துணிகள், லிங்நான் மாநிலத்தில் துணிப்பைகள் என சீனாவின் பல்வேறு இடங்களிலான கைத்தறி நெசவு பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது.
க்ளீட்டஸ்: ஈரோடு வெ. ராஜேஸ்வரி எழுதிய கடிதம். நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் சீனாவின் புகழ்பெற்ற பூஃதான் பல்கலைக்கழகம் பற்றி கூறக்கேட்டேன். 1905ம் ஆண்டில் தொடங்கிய இந்த பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். இவர்களில் பலர் ஒலிம்பிக் போட்டிக்கு தன்னார்வத் தொண்டர்களாக உதவ உள்ளனர். 30க்கும் அதிகமான நாடுகளும், 150 ஆய்வுக்கூடங்களும் இந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுவது, இதனை சர்வதேச பல்கலைக் கழகம் என்று மாணவர்கள் அழைப்பதற்கு பொருந்துவதாய் உள்ளது.
கலை: சீன தேசிய இனக் குடும்பம் நிகழ்ச்சி பற்றி பெரியகாலாப்பட்டு பெ. சந்திரசேகரன் எழுதிய கடிதம். ஹுவெய் இனத்தின நடன நிகழ்ச்சிகள் மற்றும் அலங்கார ஆடை வடிவமைப்புகள் ஆகிய பல தகவல்களை அறிந்து மகிழ்ந்தேன். ஓர் இனத்தின் பண்பாட்டை அவ்வினத்தின் இசை, நடனம், ஆடை ஆகியவற்றை பார்த்து தெரிந்துகொள்ள முடியும் என்பதை ஹுவெய் இனத்தின் நடனம், அலங்கார ஆடை ஆகியவை பற்றிய தகவல்களின் மூலம் அறிய முடிந்தது.
மின்னஞ்சல் பகுதி
வளவனூர் புதுப்பாளையம், எஸ்.செல்வம்,
சூன் திங்கள் 2 ஆம் நாள் இடம்பெற்ற நிகழ்ச்சிகளைக் கேட்டு மகிழ்ந்தேன். சீன வானொலி தமிழ்ப்பிரிவின் முதல் தலைமுறைப் பணியாளர்களுக்கு தமிழ்மொழி கற்றுத் தந்த முனைவர் சாரதா அம்மையார் அவர்களின் நேர்காணல் நிகழ்ச்சியைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். உண்மையில் எதிர்பாராமல் வந்த இந்த நிகழ்ச்சி, ஓர் இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளை அவர் நினைவுபடுத்திக் கொண்டே கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட விதம் நெஞ்சில் ஆழமாகப் பதிந்தது. அப்போதைக் காலக் கட்டத்தில், தமிழ் மொழியை சீனர்களுக்கு கற்றுத் தருவதில் நிலவிய பிரச்னைகளை யதார்த்தமாக அவர் குறிப்பிட்டபோது, அவரின் பணி எத்தகைய கடினமானதாக இருந்திருக்கும் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. நிகழ்ச்சியின் தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

……முனுகப்பட்டு: பி.கண்ணன்சேகர்……
பெய்ஜிங் நேரப்படி 27ம் நாள் முற்பகல் 11:2 மணிக்கு, சீனாவின் வானிலை முன் அறிவிப்புச் செயற்கைக் கோளான பெங்யென் மூன்று01, சீன ஷான் சி மாநிலத்தின் தை யுவான் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை அறிந்தேன். அது, தற்போது இயக்கத்திலுள்ள பெங்யென் இரண்டு=சி மற்றும் பெங்யென் இரண்டு=டி செயற்கைக் கோள்களுடன், 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான வானிலை சேவைக்கு உதவி செய்யும் என்பதையும் தெரிந்துக் கொண்டேன்.
பாண்டிச்சேரி, ஜி.ராஜகோபால்
மக்கள் சீனம் நிகழ்ச்சியின் மூலமாக, நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத செங்து நகரத்தின் முதலீட்டு சூழல் பற்றி தெரிந்து கொண்டேன். என்னதான் சிச்சுவான் மாநிலத்தில் கடுமையாக நிலநடுக்கம் ஏற்பட்டாலும், இம்மாநிலத்தின் தலைநகரான செங்து சிறிதளவும் பாதிக்கப்படவில்லை என்றால் மிக ஆச்சரியம்தான். இழப்பு ஏற்படாத போதிலும் நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் இந்த வளர்ச்சி மண்டலத்தின் தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தியதால், பல்வேறு வாரியங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தொழில் நிறுவனங்கள் எதிர் நோக்கும் பிரச்னைகளுக்கு, உரிய சேவைகளை பன்முகங்களிலும் வலுப்படுத்தியிருப்பது அருமை. தொழில் துறையின் மாற்றத்தில் மேம்பாடுகளைக் கொண்ட சிச்சுவானுக்கு நிலநடுக்கம் ஓர் தற்காலிக தடைகல்லே. இருந்தாலும் அதைத்தூக்கி எறிந்து விரைவில் சிச்சுவான் எழுந்து நிற்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
ஊட்டி, S.K.சுரேந்திரன்
சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ், கான் சூ மாநிலத்தின் லோங் நான் நகரில் உள்ள ஊழியர்கள் மற்றும் மக்களுடன் இணைந்து, புனரமைப்புப் பணி பற்றி விவாதித்ததை அறிந்தேன். உற்பத்தி மூலம், தற்காப்பு மீட்புதவி மேற்கொண்டு, தாயகத்தைப் புனரமைக்குமாறு மக்களை ஊக்குவித்ததோடு, உற்பத்தி மீட்பு பற்றிய கொள்கைகளை வகுத்து, நில நடுக்கத்தால் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்பட்ட பாதிப்பை இயன்ற அளவில் குறைக்க வேண்டும் என்று கூறியதை அறிந்துகொண்டேன். அவரது முயற்சிகள் வெற்றிபெற எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

........பாண்டிச்சேரி N. பாலகுமார்.......
சீனாவில் இன்பப்பயணம் நிகழ்ச்சியை கேட்டேன். நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஹுவாங் சான் மலை இயற்கை காட்சியை நேரில் கண்டு ரசித்தது போலவே கலைமகள் விரிவாக எடுத்துரைத்தார். எங்களையும் சுற்றுலாவுக்கு வரும்படியான ஆர்வத்தை தூண்டிவிட்டார். ஹுவாங் சான் மலை குரங்கு மனிதன் பற்றி கூறினார். அது ஒரு கற்பனை கலந்த உண்மைக்கதையாக இருந்தாலும், அதன் மூலம் ஒரு படிப்பினையை கற்றுக்கொள்ள முடிந்தது.
வளவனூர், முத்துசிவக்குமரன்
மே திங்கள் 29ம் நாள் ஒலிபரப்பில் நில நடுக்கம் எவ்வாறு ஏற்படுகிறது, எந்தெந்த காரணங்களால் ஏற்படுகிறது என்ற தொகுப்பினைக் கேட்டேன். இந்த தொகுப்பின் மூலம் பல செய்திகளை நான் தெரிந்து கொண்டேன். சிச்சுவான நில நடுக்கத்தில் கிட்டத்தட்ட 68000 பேர் உயிர் இழந்திருக்கின்றனர் என்ற தகவல் இயற்கையின் இந்த கோர சீற்றத்தினை காட்டுகிறது. இது போன்ற பேரிடரினை நாம் முன் கூட்டியே அறிந்து கொள்ள வழிகள் இல்லை என்றாலும், பேரிடர் மீட்புப் பணியில் பங்கு கொண்டு, அனைத்தையும் இழந்தவர்களுக்கு நம்பிக்கையினை அளிப்பது நம் கடமையாகும். அந்த வகையில் சீன அரசு முழு வீச்சீல் மீட்புப் பணிகளை மேற்கொண்டது மற்ற நாடுகளுக்கு நல்ல உதாரணமாகும். அன்றைய அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் மண் வளம் பற்றியும், அதில் கலந்துள்ள ஆர்சனிக் நச்சுப் பொருளை எப்படி பிரிப்பது எனபதும் பற்றிய தகவல் நன்றாக இருந்தது.
பாண்டிச்சேரி, என். வசந்தி
ஜூன் திங்கள் 2ம் நாளன்று இடம்பெற்ற •சீன உணவு அரங்கம்• நிகழ்ச்சியைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். நீங்கள் காய்கறிகளைப் பயன்படுத்தி தயார் செய்த உணவு, தமிழகத்தில் உள்ள ஒருவகை போண்டாவை ஒத்திருந்தது. இந்த வார விடுமுறையில் வீட்டில் இந்த உணவை தயார் செய்து நான் சாப்பிடுவதோடு, என் குடும்பத்தினருக்கும் பரிமாறுவேன். பெண் என்ற முறையில் இந்த நிகழ்ச்சியை வாரம் தவறாமல் நான் கேட்டு வருகிறேன்.