• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-17 16:33:51    
பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் சுகாதார பணி

cri

சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட காயமுற்றோர் மருத்துவ மனைகளில் நல்லபடி சிகிச்சை பெற்றனர். பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலான பெருமளவு மருத்துவ மீட்புப் பணி அடிப்படையில் முடிவடைந்தது என்று சீனச் சுகாதார அமைச்சர் Chen Zhu இன்று பெய்சிங்கில் தெரிவித்தார்.

இது வரை, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட காயமுற்றோரில் 79ஆயிரத்து 8 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனையில் காயங்களுக்காக சிகிச்சை பெற்று வரும் 14ஆயிரத்து 94 பேரில், பெரும்பாண்மையானோரின் நிலைமை சீராக இருக்கிறது என்று Chen Zhu கூறினார்.

ஜுன் 16ம் நாள் வரை, பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மருத்துவ மீட்புதவி மற்றும் தொற்று நோய் தடுப்புப் பணியில் ஈடுபட்ட பணியாளர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. சிகிச்சை பெற்றுள்ள காயமுற்றோர் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கை 16லட்சத்து 40ஆயிரத்துக்கு மேலாகும் என்று அவர் தெரிவித்தார்.

தற்போது, பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தொற்று நோய் நிகழ்நதது பற்றிய அறிக்கையில், கடந்த ஆண்டில் இருந்ததோடு ஒப்பிடுகையில் பெரிதாக மாற்றம் காணப்பட வில்லை. கடும் தொற்று நோய் மற்றும் திடீர் சுகாதார சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை. சுகாதார மற்றும் தொற்று நோய் தடுப்புப் பணி சீராக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று அவர் கூறினார்.