• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Wednesday    Apr 9th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-18 10:54:25    
எல்லையற்ற அன்பு

cri
மே 12ஆம் நாள் வென் ச்சுவான் நிலநடுக்கம் நிகழ்ந்தப் பின், புகழ்பெற்ற சீன திரை நட்சத்திரமான Jackie Chen, அப்போதைய தமது திரைப்படப் பணிகள் அனைத்தையும் ஒத்தி வைத்து விட்டு, உடனடியாக பெய்ஜிங் வந்தடைந்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவிக்கென, அவர் ஹாங்காங் செய்தித் தொடர்புத் துறையைச் சேர்ந்த மூத்த பிரமுகர் Yang Shou Chengகுடன் இணைந்து, ஒரு கோடி யுவானை நன்கொடையாக வழங்கினார். பின்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்குமாறு உலகளவிலுள்ள அனைத்து சீனர்களையும் அணி திரட்டும் பொருட்டு, சிறு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை அவர் உருவாக்கினார்.

மே 16ஆம் நாள், நிலநடுக்க பேரிடர் நீக்கம் தொடர்பான பாடல் ஒன்றை ஒலிப்பதிவு செய்ய, Jackie Chen சீன மத்திய தொலைக்காட்சி நிலையத்துக்குச் சென்றார். சில மணிநேர ஓய்வுக்குப் பின், ஒரு இலட்சம் போத்தல் நீரையும், 10 இலட்சம் யுவான் மதிப்புள்ள உணவு தானியத்தையும் கொண்டு, அவர் தனிப்பட்ட விமானம் மூலம் பெய்ஜிங்கிலிருந்து செங் து நகருக்குச் சென்றார். காயமுற்றோருக்கும் அனாதைக் குழந்தைகளுக்கும் அவர் சிறப்பாக ஆறுதல் தெரிவித்தார்.

கடும் நிலநடுக்கம் நிகழ்ந்ததற்கு பிந்தைய 6வது நாள், அன்பார்ந்த அர்ப்பணம் என்ற தலைப்பிலான நன்கொடை திரட்டும் பெருமளவு நடவடிக்கை, சீனத் தேசிய தொலைக்காட்சி நிலையத்தில் நடைபெற்றது. சீன அரசின் 7 துறைகளின் கூட்டு ஏற்பாட்டில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 500க்கு அதிகமான பிரமுகர்களும், கலை நட்சத்திரங்களும் இந்த அறக்கொடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சீனப் பெருநிலப்பகுதி, ஹாங்காங், மகௌ மற்றும் தைவான் பிரதேசத்தைச் சேர்ந்த கலைஞர்கள் உற்சாகத்துடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பல பெரிய ரக தொழில் நிறுவனங்களும், சமூக அமைப்புகளும் இந்நிகழ்ச்சியில் நன்கொடை வழங்கின. இறுதியில் பாதிக்கப்பட்ட பகுதிக்காக 151 கோடியே 40 இலட்சம் யுவான் திரட்டப்பட்டது. புகழ்பெற்ற இசை அமைப்பாளர் Xu Pei Dong கூறியதாவது—

"பேரிடர் நிகழ்ந்த போது, காலதாமதமின்றி உயிர்களைக் காப்பாற்ற வேண்டும். உயிர் இல்லாவிட்டால் ஏதும் இல்லை. அன்பை வெளிப்படுத்துமாறு சீன மக்கள் அனைவரையும் அணி திரட்டுவது என்பது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். பணம் இருந்தால் நன்கொடை செய்யுங்கள். அனைவரும் அன்பை வெளிப்படுத்தினால், நமது தேசம் தோற்கடிக்கப்படப் போவதில்லை" என்றார் அவர்.

சீன மக்களின் மனதில் மட்டுமல்ல, சீனாவிலுள்ள அந்நிய மாணவர்களின் மனதிலும் இத்தகைய அன்பு நிறைந்து காணப்படுகிறது. வென் ச்சுவான் நிலநடுக்கம் தொடர்பான தகவல் கிடைத்த பின், சீனாவிலுள்ள அந்நிய மாணவர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நன்கொடை வழங்கினர். பெய்ஜிங் மொழி பல்கலைக்கழகத்தில் அந்நிய மாணவர்கள் மிக அதிகமாக உள்ளனர். ஆங்கிலம், பிரெஞ்சு மொழி, ரஷிய மொழி, தாய்லாந்து மொழி, மங்கோலிய மொழி, வியட்நாம் மொழி, இந்தோனேசிய மொழி, தென் கொரிய மொழி ஆகிய 9 மொழிகளில் இந்த மாணவர்கள் எழுதியவற்றைக் கொண்டு, அன்பு என்ற பொருளை வெளிப்படுத்தும் ஒரு சீன எழுத்து உருவாக்கப்பட்டது.

பேரிடர் நிகழ்ந்தால், அனைத்து தரப்புகளும் ஆதரவளிக்கும். இந்த தருணத்தில், மக்கள் அனைவரும் மும்முரமாக நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடை வழங்குகின்றனர்.

புள்ளிவிபரங்களின்படி, உலகம் முழுவதுமிலிருந்து சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை 10 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டும். மேலும் இந்த தொகை தொடர்ந்து அதிகரிக்கும் என்று நம்பப்படுக்கிறது.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040