சுற்றுச்சூழலுக்கு நிலநடுக்கத்தின் பாதிப்பு
cri
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் சுற்றுச்சூழல் தரம் பற்றிய ஒட்டுமொத்த ஆய்வு அறிக்கையை சீன சிச்சுவான் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியகம் அண்மையில் வெளியிட்டது. இந்த நிலநடுக்கம் சிச்சுவானின் சுற்றுச்சூழலைக் கடுமையாகப் பாதிக்கவில்லை என்று நிபுணர்கள் அறிக்கையில் கருத்து தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து 2 இலட்சத்துக்கு மேற்பட்ட கண்காணிப்புத் தரவுகளைத் தொகுத்து ஆராய்ந்த பின், இந்த முடிவு எடுக்கப்பட்டது. அப்பிரதேசங்களின் காற்று மற்றும் குடிநீர் மூலவளம் கடுமையாகப் பாதிக்கப்படவில்லை என்றும் அறிக்கை கூறியது. ஆனால், நிலநடுக்கத்துக்குப் பின் ஏற்படக் கூடிய சீற்றங்கள் சுற்றுச்சூழல் தரத்துக்கு இன்னும் அச்சுறுத்தலாக அமையும் என்று அறிக்கை சுட்டிக்காட்டியது.
|
|