ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை ஏற்று நடத்த விண்ணப்பித்த போது அளித்த வாக்குறுதிக் கிணங்க பசுமைமயமாக்கம் பற்றிய பல்வேறு இலக்குகளை பெய்சிங் எட்டியுள்ளது என்று சீன வனத்தொழில் வாரியத்தின் அதிகாரி ஒருவர் நேற்று பெய்சிங்கில் தெரிவித்தார். 2007ம் ஆண்டு இறுதியில், பெய்சிங் மாநகரின் பசுமைமயமாக்க பரப்பளவு 40விழுக்காட்டை தாண்டியுள்ளது, மலைப் பிரதேசத்தில் காடு வளர்ப்புப் பரவல் நிலப்பரப்பும் 70விழுக்காட்டை தாண்டியுள்ளது. 2007ம் ஆண்டு முழுவதிலும், காற்று தரம் வரையறையை எட்டிய நாட்களின் விகிதம், 70விழுக்காடாகும். பெய்சிங் மாநகரின் உயிரினச்சுற்றுச்சூழல் தெளிவாக மேம்படுத்தப்பட்டது.
ஒலிம்பிக் வனப் பூங்கா
20வது நூற்றாண்டின் 50ம் ஆண்டுகளில், பெய்சிங்கில் காடு வளர்ப்பு பரவல் நிலப்பரப்பும் 1.3விழுக்காடு மட்டும் தான். உயிரினச்சுற்றுச்சூழல் தரம் ஒரளவு தான்வாகவே இருந்தது. கடந்த பல ஆண்டுகளாக, குறிப்பாக 2001ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை நடைபெறும் உரிமையை பெற்றதற்கு பின், பெய்சிங் மாநகரம் ஒரு தொகுதி பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு, உள்ளூர் உயிரினச்சுற்றுச்சூழலை மேம்படுத்தியது.
ஒலிம்பிக் திடல்கள், அரங்குகள், ஒலிம்பிக் விளையாட்டு போட்டியுடன் தொடர்புடைய சாலைகளுக்கு அருகிலுள்ள பிரதேசங்களில், பசுமைமயமாக்கம் பற்றிய நூற்றுக்கு மேலான கட்டுமான திட்டங்களை பெய்சிங் மாநகரம் செயல்படுத்தியுள்ளது. இந்நகரில் செயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய பசுமைமயமாக்கத் தளமான ஒலிம்பிக் வனப் பூங்காவை கட்டியமைப்புப் பணி இதில் இடம்பெறுகின்றது. இப்பூங்காவின் நிலப்பரப்பு 680 ஹெக்டராகும். செயற்கையான ஏரி, சதுப்பு நிலம் ஆகியவை இப்பூங்காவில் இருக்கின்றன. பெய்சிங் நகரில் நிலவுகின்ற வெப்ப மண்டல தீவு விளைவை கட்டுப்படுத்தி, இரைச்சல் மற்றும் கரிமத்தை குறைத்து, நீர்வளத்தை பாதுகாத்து, காற்றுத் தரத்தை உயர்த்துவதற்காக, இது முக்கிய பங்காற்றி வருகின்றது என்று இப்பூங்காவின் பொறுப்பாளர் Tang Tong தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
இப்பூங்காவில் வளர்க்கப்படும் செடிகளின் மொத்த எண்ணிக்கை, 5இலட்சத்து 30ஆயிரத்தை தாண்டியது. தாவர வளர்ப்பு பரவல் நிலப்பரப்பு மிக அதிகமாகும். இது மூலம், இப்பூங்காவுக்கு அருகிலுள்ள பிரதேசங்களின் உயிரினச்சுற்றுச்சூழல் மேம்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும், இப்பூங்காவிலான தாவரங்கள், 7200டன் கரியமில வாயுவையும், 32டன் கந்தக வாயுவையும் உள்வாங்க முடியும். அத்துடன், 5400டன் உயிர்வாயுவை உருவாக்க முடியும் என்றார் அவர்.
நில அமைப்பின் தனித்தன்மைக்கு இணங்க, பசுமைமயமாக்கப் பணியை பெய்சிங் மேற்கொண்டு வருகின்றது. ஆண்டுதோறும், பெய்சிங் மாநகரின் மத்திய பகுதியிலான பல்வேறு பிரதேசங்கள், குறைந்தது 1 அல்லது 2 பெரிய ரக பசுமைமயமாக்கத் தளங்களை கட்டியமைக்க வேண்டும் என்று பெய்சிங் மாநகர அரசு கோரியது. தவிர, புறநகரிலான சமவெளிகளில், 25ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில் கொள்ளும் உயிரினச்சுற்றுச்சூழல் பாதுகாப்பு வனப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. காடு வளர்ப்பு உள்ளிட்ட உயிரினச்சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டப்பணியின் மூலம், பெய்சிங்கின் மலைப் பிரதேசத்தில் 95விழுக்காட்டு வறண்டு கிடந்த மலைகள் பசுமைமயமாக்கப்பட்டுள்ளன என்று பெயசிங் தோட்டக் கலை மற்றும் பசுமைமயமாக்க ஆணையத்தின் தலைவர் Dong Ruilong எடுத்துக்கூறினார்.
தவிரவும், பெய்சிங்கிற்கு அருகிலுள்ள பிரதேசங்களுடன் ஒத்துழைத்து, மணற்காற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்டப்பணியை மேற்கொண்டு, உயிரினச்சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான பல தடுப்புகளை உருவாக்கியது. சீனத் தேசிய வனத்தொழில் ஆணையத்தைச் சேர்ந்த மணற்காற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் துறையின் பொறுப்பாளர் Liu Tuo எடுத்துக்கூறியதாவது:
பெய்சிங்கிற்கு வட பகுதியிலுள்ள உள் மங்கோலிய தன்னாட்சி பிரதேசத்திலான பாலைவன நிலத்தில், பாலைவன மயமாக்கத்தை தடுக்க, புதிய பயனுள்ள நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம் என்றார் அவர். பெய்சிங் மற்றும் அதற்கு அருகிலுள்ள பிரதேசங்களில் தாவர வளர்ப்பு நிலப்பரப்பின் அதிகரிப்பு, பாலைவனமயமாக்க ஊற்று இடங்களின் குறைப்பு ஆகிய காரணங்களால், பெய்சிங்கில் மணல் காற்று வீச்சு நிகழ்வது தெளிவாக குறைந்து வருகின்றது என்று Liu Tuo கூறினார்.
|