சீனாவின் பேரிடர் நீக்க மீட்புதவி பணியை வட கொரிய செய்தி ஊடகங்களும், கனாடா தலைமை ஆளுநரும் அண்மையில் உயர்வாக பாராட்டினர்.
நிலநடுக்கம் நிகழ்ந்த பின், சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசின் தலைமையில், சீன இராணுவ வீரர்களும் மக்களும் பேரிடர் நீக்க மீட்புதவி மற்றும் புனரமைப்பு பணிகளில் ஆக்கப்பூர்வமாக கலந்துகொண்டனர் என்று வட கொரியாவின் மின் ஜு சோ சுன் செய்தியேடு வெளியிட்டது.
நேற்று கனட தலைமை ஆளுநர் மிகேலி ஜுன், கனேடிய அரசின் சார்ப்பில், வென் ச்சுவன் நிலநடுக்கம் ஏற்படுத்திய கடுமையான பாதிப்பு குறித்து, இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு அனுதாபத்தை தெரிவித்தார். சீனாவின் பேரிடர் நீக்க மீட்புதவி பணியை உயர்வாக பாராட்டினார்.
|