ஒன்று.....சீன வானொலி நிலையத்தில் எத்தனை மொழிப் பிரிவுகள் உள்ளன?
மொத்தம் 38 வெளிநாட்டு மொழிப் பிரிவுகள் இருக்கின்றன. தவிரவும் 5 உள்நாட்டு மொழிப் பிரிவுகள் உள்ளன.
இப்போது இணையத்தில் பயன்படுத்தப்படுகின்ற மொழி களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிலே முக்கியமாக கிழக்கு ஐரோப்பாவில் பயன்படுத்தப்படும் உக்ரேன் கிரோவேஷிய மொழிகள் உள்ளன.
இரண்டு......உலகில் சீன வானொலியை சேர்ந்த நேயர்களின் எண்ணிக்கை எத்தனை?
மொத்தம் நேயர்கள் சீனாவின் 43 மொழிகளில் ஒலிபரப்பட்ட நிகழ்ச்சிகளை கேட்டு பயன்பெறுகிறனர். தமிழ்ப் பிரிவுக்கான நேயர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பது மகிழ்ச்சியான விடயமாகும். ஆர்வமுள்ள முன்னணி நேயர்களின் ஆதவும் பங்களிப்புமே இதற்கு முக்கிய காரணம்.
மூன்று......நேயர்களின் அணியான நேயர் மன்றங்களின் எண்ணிக்கை எத்தனை?
2007ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் முடிவுக்கு இணங்க உலகில் இப்போது மொத்தம் 3158 சீன வானொலி நேயர் மன்றங்கள் செயல்படுகின்றன.
நான்கு......ஆண்டுக்கு சீன வானொலி நிலையத்திற்கு எத்தனை கடிதங்கள் வருகின்றன?
ஆண்டுதோறும் 21 இலட்சத்திற்கு மேற்பட்ட கடிதங்கள் சீன வானொலி நிலையத்திற்கு வருகின்றன.
ஐந்து.....ஒரு பிரிவின் நேயர் தொடர்பான பணி அதன் பணியில் எந்த இடத்தில் இருக்கின்றது?
இது மிகவும் முக்கியத்துவம் கொண்ட வினாவாகும். நேயர்கள் தான் எமது பணிக்கு ஆதரவையும் உற்சாகத்தையும் தருவபர்கள். எமது பணியின் நிறைகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டி எமக்கு நல்லயோசனை தருபவர்கள். எனவே நேயர்கள் தொடர்பான பணிதான் சீன வானொலியின் அனைத்து மொழிப் பிரிவுகளுக்கும் தலையாய கடமையாக அதிமுக்கிய பணியாக அமைகின்றது. பொதுவாக ஒரு மொழிப் பிரிவு தனது பணியில் நேயர்களுக்கு சிறப்பாக சேவை புரிந்து அவர்களுக்கு ஊக்கமளித்து கடிதங்களை கையாள்வதில் மிகவும் கவனம் செலுத்தும் போது கண்டிப்பாக நேயர் கடிதங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எடுத்துக்காட்டாக தமிழ்ப் பிரிவுக்கு கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஆண்டுக்கு 5 லட்சம் கடிதங்கள் கிடைத்தன. இந்த எண்ணிக்கை சீனா வானொலி நிலையத்திற்கு வந்த நேயர் கடித எண்ணிக்கையில் ஏறக்குறைய 25 விழுக்காடு வகித்துள்ளது. சிறப்புப் பங்கு ஆற்றியதை பாராட்டும் வகையில் 3 ஆண்டுகளாக தமிழ்ப் பிரிவுக்கு மிக உயர்வான பெருமை வழங்கப்பட்டது.
ஆறு........நேயர்களுக்கான பணி பற்றி எந்த அளவில் கவனம் செலுத்தப்படுகிறது?விளக்கமாக சொல்வீர்களா?
ஒருபானை சோற்றுக்கு ஒரு சோலுபதம் எடுத்துக்காட்டாக தமிழ்ப் பிரிவின் கடிதங்களை கையாளும் பணி பற்றி விளக்கிக் கூறலாம். இதுவரை நாம் 25 ஆண்டுகளாக தொடர்ந்து பின்பற்றியுள்ள பணி வழிமுறையில் ஊன்றி நின்றுள்ளோம். நேயர் கடிதங்களை கையாளுவதற்கு ஆண்டுக்கு ஒருவர் சிறப்பாக நியமிக்கப்படுவர். அந்த ஆண்டில் அவருடைய முக்கிய பணி நேயர்களுக்கு சேவை புரிவதாகும். நேயர்களுடன் தொடர்புடைய பல்வகை விவகாரங்கள் அவரால் கையாளப்படுகின்றன.
ஏழு.......நீங்கள் இந்த பணியில் இவ்வளவு கவனம் செலுத்த காரணம் என்ன?
காரணம் பற்றி குறிப்பிட்ட வேண்டும் என்றால் நேயர்களின் அளப்பறிய உற்சாகம் தான். அவர்களின் பற்றுறுதி கொண்ட அன்பும் ாதரவும் பிடிவாதமாக சீன வானொலி தமிழ் நிகழ்ச்சிகளை கேட்டு கடிதங்கள் எழுதி புதிய நேயர்களை உருவாக்கக் கூட்டும் பேரார்வமும் தான் நாம் அவர்களுக்கு முழுமையாக சேவை புரிவதற்கான உந்தாற்றலாகும்.
எட்டு.......இந்தப் பணியை கையாளும் போது எத்தகைய இன்னல்களை சந்தித்தீர்கள்?
பொதுவாகக் கூறின் இன்னல்கள் எப்போதும் இன்பத்துடன் இணைந்தே வருகின்றன. ஏனென்றால் இன்னல்களை சமாளிக்கும் போது வெற்றி வரும். வெற்றியை பார்க்கும் போது அதற்காக முகங்கொடுத்த அனைத்து இன்னல்களும் அவால்களும் பறந்து போகும். மறைந்து போகும். ஆகவே எமது சளையாத முயற்சி்களுக்கு பாராட்டு கிடைக்கும் போது நாம் இன்பமாக உணர்ந்து மற்றவற்றை மறக்கிறோம்.
ஒன்பது......இந்த பணியில் இன்பம் என்ன? வருத்தம் என்ன?
நேயர்களுடன் பழகி அவர்கள் அனுப்பிய கடிதங்களை கையாளும் போது கடிதங்களில் வெளிப்படும் நேயர்களின் எண்ணங்கள் மற்றும் அன்பை உணரும் போது இன்பமான மன நிலை எழும். இது மற்ற பணியாளர்களுடன் மகிர்ந்து கொள்ள அனைவரும் மகிழ்ச்சியடைவர். எங்கள் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பட்ட பின் நேயர்களிடமிருந்து வெளிப்படும் மனநிறைவு அல்லது குற்றச்சாட்டை நாங்கள் மனமுவந்து ஏற்றுக் கொள்வோம்.
பத்து......நேயர் பணியை கையாளும் போக்கில் சிறந்த பணியாளர் என்ற பெருமை வழங்கப்படுகின்றது. இந்த முறை அது தங்களுக்கு வழங்கப்பட்டது. இதை பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்களா?
தமிழ்ப் பிரிவு சீன வானொலியில் அதிகமான நேயர் கடிதங்களை பெரும் மொழிப் பிரிவாக இருப்பதை பாராட்டும் வகையில் வாணி, லட்சுமி, மலர்விழி, கலையரசி முதலியோர் வானொலி நிலையத்தின் முன்னேறிய பணியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தி. கலையரசியாகிய நான் பல முறை நேயர் பணித் துறையில் முன்னேறிய பணியாளராகவும் சீன வானொலி நிலையத்தின் முன்னேறிய பணியாளராகும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். 2007ம் ஆண்டு மீண்டும் முன்னேறிய பணியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். இது மட்டுமல்ல எனது குடும்பம் சீன வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்பட தயாரிப்பு வட்டாரத்தில் சிறந்த குடும்பம் என்ற பெருமையை வழங்க பெற்றது. இதில் எனக்கு மட்டுமல்ல தமிழ்ப் பிரிவுக்கும் தமிழ்ப் பிரிவின் நேயர்களுக்கும் பெருமை சாரும்.
|