• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-19 21:31:09    
உலக இளைய பேராசிரியர்

cri
உலக இளைய பேராசிரியர்

   

பல்வேறு விதங்களில் உலக சாதனை படைத்திருக்கிறார்கள். விரைவாக ஓடி, செய்வதற்கரிய சாதனைகள் செய்து, அதிக நாட்கள் வாழ்ந்து, உலகில் முதன்முதலில் எதையாவது செய்ய தொடங்கி என சாதனைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பேராசிரியர் ஒருவர் தனது வயதால் கின்னஸ் பதிவு பெற்றுள்ளார். Alia Sabur என்ற பதின்மவயது பெண்மணி தனது 18 வது வயதில் சீயோலில் உள்ள Konkuk பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டதால் உலக பேராசிரியர்களிலேயே இளையவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். 18 வயதிலேயே பேராசிரியர் நிலைக்கு உயர்ந்துள்ள Alia Sabur சிறுவயதிலேயே தன்னிகரற்ற திறமைகளோடு வளர்ந்து வந்துள்ளார். 10 வது வயதில் அமெரிக்க Stony Brook பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்புக்கு சேர்ந்தார். Rockland சிம்பொனி இசைவிருந்தில் கிளார்நெட் இசைக்கருவி வாசித்து பெருமை பெற்றபோது அவருக்கு வயது 11. 14 வது வயதில் இளங்கலை பட்டம் வென்றார். பெப்ரவரி 19 ஆம் தேதி தனது 18 வது வயதில் சியோலில் உள்ள Konkuk பல்கலைக்கழகத்தில் சிறப்பு அணுப்பிணைவு தொழில் நுட்பத்துறையில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். தற்போது 19 வயதாகும் அவருக்கு கெரிய மொழி தெரியாது என்பதால் கற்பித்தல் பணி சவாலுடையதாக இருக்கும் என கூறுகின்ற அவர் கணிதமும், இசையும் பேசும் என்கிறார். இவருக்கு முன்னர் Colin Maclaurin தனது 19 வது வயதில் கணித பேராசிரியராக தேர்ந்தெடுக்கப்ட்டதே இளம் பேராசியர் என்ற சாதனை பதிவாக இருந்தது என்பது குறிப்பிடதக்கது.

பிரிட்டனின் மகிழ்ச்சிக்காக

இவ்வுலகத்தில் நல்ல முறையில், நிறைவாக வழ்ந்தவர்கள் விண்ணில் உள்ள தெய்வத்திற்கு சமமாக பேற்றப்படுவர் என்று தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதியுள்ளர். தங்களின் நாட்டின் எழுச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் காரணமான நபர்களை வரலாறு மறக்காது என்பது உண்மை தானே. பிட்டனின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மகிழ்ச்சிக்கும் பங்களிப்பு செய்த 100 பேரின் பெயர் பட்டியலை பிரிட்டன் செய்திதாள் வெளியிட்டுள்ளது. உலக இணையத்தை கண்டுபிடித்த Tim Berners-Lee, தானியங்கி பணவழங்கி இயந்திரம் கண்டுபிடித்த John Shepherd Barron, செல்லிடபேசி வழியாக குறுந்தகவல் அனுப்புவதை கண்டுபிடித்த Neil Papworth, Harry Potter என்ற குழந்தைகள் புதின புத்தக ஆசிரியர் J K Rowling ஆகியோர் அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு பிரிட்டன், அதன் மூலமாக உலகின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் பங்களித்த அவர்கள் என்றும் நினைவுகூரப்படுவது நிச்சயம். இவர்களின் வாழ்வும் உலகத்திற்கான பங்களிப்புகளும் சமூக மேம்பாட்டிற்கான நமது பங்களிப்புக்கு வழிகாட்டும் பாடங்கள்.