தூ சியாங் யான் என்னும் நீர் சேமிப்பு திட்டப்பணி
cri
மே திங்கள் 12ம் நாள் சீன சிச்சுவான் மாநிலத்தின் வென்ச்சுவான் மாவட்டத்தில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்தால், உள்ளூரின் சில காட்சி தலங்கள் பாதிக்கப்பட்டன. இதில் புகழ்பெற்ற நீர் சேமிப்பு திட்டப்பணியான தூ சியாங் யானும் அடக்கம். ஆனால், 2000 ஆண்டுகால வரலாறுடைய இத்திட்டப்பணி, வடிவமைக்கப்பட்ட போதே, நிலநடுக்கம், கருத்தில் கொண்டு செய்யப்பட்டதால், அதன் முக்கிய வசதிகள் கடுமையாக பாதிக்கப்பட வில்லை. அதற்கு அருகில் அமைந்துள்ள கோயில்களின் சில கட்டிடங்களில் விரிசல்கள் மட்டும் ஏற்பட்டன.
தூ சியாங் யான் என்னும் புகழ்பெற்ற நீர் சேமிப்பு திட்டப்பணி, சிச்சுவான் மாநிலத்தின் தூ சியாங் யான் நகரத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. உலகில் இதுவரை, வரலாற்று மிக்க ஒரேயோரு பெரிய நீர் சேமிப்பு திட்டப்பணி, இதுவாகும். அணைக்கட்டு இல்லாமலே, நீரை எடுத்துச்செல்வதால், தூ சியாங் யான் புகழ்பெற்றது என்று உள்ளூரின் வழிகாட்டி வூ அம்மையார் அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது: அணைக்கட்டு ஏதுமின்றி நீரை எடுத்துச்செல்வது என்ற தலைச்சிறப்பியல்புடைய இயல்பான நீர் சேமிப்பு திட்டப்பணி, இது, உலகில் இது மட்டுமேயாகும் என்றார் அவர். மீன் வாய் என்னும் நீர் பிரிக்கும் வசதி, Fei sha yan என்னும் வெள்ளப்பெருக்கு நீரை வெளியேற்றும் வெறி, பெள பிங் என்னும் நீர் புகும்
நுழைவாய் ஆகியவை, தூ சியாங் யான் நீர் சேமிப்பு திட்டப்பணியின் முக்கிய பகுதிகளாகும். மின் சியாங் ஆற்றின் கரையில் கட்டிமைக்கப்பட்ட சின் யான் கட்டிடத்தில், கீழே பார்த்தால், மின் சியாங் ஆற்றில், ஒரு குறுகிய சிறிய தீவு காணப்படலாம். வண்டல் மண் மற்றும் மணலைப் பயன்படுத்தி உருவாக்கிய இத்தீவு, ஆற்றல் நிறைந்த உயிரின ரக நீர் சேமிப்பு திட்டப்பணியான தூ சியாங் யான் ஆகும், வண்டல் மண் மற்றும் மணலைப் பயன்படுத்தி, மின் சியாங் ஆற்று நீரைப் பிரித்து, ஒரு அழகான இயற்கைக் காட்சியாக, தூ சியாங் யான் நீர் சேமிப்பு திட்டப்பணி காணப்படுகிறது. அதன் முதலாவது நுழைவாயிலில் வழிகாட்டி வூ, பயணிகளிடம் அறிமுகப்படுத்தியதாவது: இப்பொழுது இந்த மீனின் முதுகுபுறத்தில் நிற்பது போல் இருக்கின்றோம். முன்பகுதியில், முதலையின் வாயைப் போன்ற இடம், மீன் வாய் என்பது அழைக்கப்படுகிறது. மின் சியாங் ஆறு, மலையிலிருந்து புறப்பட்ட பெரிய ரக எஸ் வடிவில், வளைந்து நெளிந்து செல்லும் பாதையில், இது கட்டியமைக்கப்பட்டது என்றார் அவர்.
இந்தப் பெரிய மீன் மீது நிற்கும் போது, காற்றின் ஒலியைக் கேட்கலாம். ஆற்று நீரைப் பிரிக்கும் மீன் வாய் என்றும் வசதியைப் பார்க்கலாம். மின் சியாங் ஆறு, இங்கே கடந்த செல்லும் போது, இயற்கையாக இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படும். இதில் ஒன்று வெளி ஆறாக அழைக்கப்பட்டு, நீரை வெளியேற்றியது. மற்றொன்று, உள் ஆறாகும். செங் து சமவெளிக்குச் செல்லும் இந்த உள் ஆறு பாசனத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. வழிகாட்டி வூ கூறியதாவது: வெள்ளப்பெருக்கு காலத்தில், மின் சியாங் ஆற்று நீர், இயற்கை வளைந்து நெளிந்து செல்லும் இந்தப் பாதையைக் கடந்த போது, நீர் நிர்பந்தத்தால், ஆற்றின் அடி அடுக்கையில் வீழ்ந்து, மண்ணலை வெளி ஆற்றுக்குக் கொண்டுச் செல்லும். இது தான், மீன் வாய் என்னும் வசதியின் பயனாகும். இதனால், மணல் மற்றும் கற்கள் வெளி ஆற்றுக்கும், வெள்ளப்பெருக்கு, யாங்சி ஆற்றுக்கும் வெளியேற்றப்பட்டது. அடுத்து, Fei sha yan என்னும் வெள்ளப்பெருக்கு நீரை வெளியேற்றும் வசதி பற்றி, கூறுகின்றோம். இப்பகுதி, தூ சியாங் யான் திட்டப்பணியின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. செங் து சமவெளி, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படாமல் இருப்பதை, உத்தரவாதம் செய்யும் முக்கிய பகுதி, இதுவாகும். மணல் மற்றும் கற்களை நீக்கி, நீரை பயனுள்ளதாக தடை செய்து வெளியேற்றலாம். வழிக்காட்டி வூ கூறியதாவது:
Fei sha yan என்னும் வசதி, வெள்ளப்பெருக்கையும் மணலையும் இரண்டாவது முறையாக நீக்குகிறது. இயற்கையான கட்டுப்பாட்டு தடையாக இது அமைகிறது. நீர் குறைவான காலத்தில், செங் து சமவெளியில் போதியளவிலான நீர் கிடைப்பதை, இது, உத்தரவாதம் செய்கிறது. வெள்ளப்பெருக்கு காலத்தில் அதிகமான நீரை, இது வெளி ஆற்றுக்கு வெளியேறுகிறது என்றார் அவர். Fei sha yanஐப் பார்த்தப் பிறகு, தூ சியாங் யானின் மூன்றாவது பகுதியான பெள பிங் என்னும் நீர் புகும் நுழைவாயைச் சென்றடைந்தோம். இவ்வசதி, செங் தூ புல்வெளியில் நுழைந்த நீர் அளவைக் கண்டிப்பாக கட்டுப்படுத்துகிறது. இதுவரை, தூ சியாங் யான் என்னும் நீர் சேமிப்பு திட்டப்பணியின் மூன்று முக்கிய பகுதிகளை அறிந்துகொண்டுள்ளோம். ஆற்றின் நடுப்பகுதியில் கட்டியமைக்கப்பட்ட மீன் வாய் என்னும் வசதி, மின் சியாங் ஆற்றின் நீரைப் பிரிக்கிறது. Fei sha yan என்னும் பாதை, வெள்ளப்பெருக்கையும் மணலையும் வெளியேற்றி, நீரின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. பெள பிங் என்னும் வசதி, நீர் நுழைவு அளவைக் கட்டுப்படுத்துகிறது. அவை பரஸ்பரம் சார்ந்து, ஒன்றிடம் இல்லாததை. மற்றது நிறைவு செய்து, இணக்கமாக செயலாற்றி, நியாயமான கட்டமைப்பு திட்டப்பணியை உருவாக்கியுள்ளன.
தூ சியாங் யானின் சுற்றுப்புறத்தில், er wang கோயில், fu long தாவ் மதக் கோயில், இரும்பு வடத்தால் ஆன an lan பாலம் உள்ளிட்ட வரலாற்று சிறப்பும் அழகும் வாய்ந்த காட்சித்தலங்கள் உள்ளன. சிச்சுவான் வென்சுவான் நிலநடுக்கத்தில், சில சுற்றுலா காட்சி தலங்கள் பாதிக்கப்பட்டது குறித்து, சிச்சுவான் மாநிலத்தின் தொல் பொருள் ஆணையத்தின் துணைத் தலைவர் வாங் சியொங் அம்மையார் கூறியதாவது: மரபுச் செல்வங்களைச் செப்பனிடும் வேலையி்ல, எமது அடிப்படை வரைபடத் தரவுகள் மிகவும் முக்கியமானவை. முன்பு, பல தொல் பொருள்களின் வரைபடம், சேமிக்கப்பட்டுள்ளது. புனரமைப்புக்கு இது ஆக்கப்பூர்வமாக துணைபுரியும். தொல் பொருள் கிடங்கு உள்ளிட்ட கட்டிடங்களை அறிவியல் ரீதியில் மதிப்பீடு செய்து, கட்டியமைப்பது, நிலவியல் கட்டமைப்பை கருத்தில் கொள்வது முதலியவை, புனரமைப்புப் பணியில் இடம்பெறுகின்றன என்றார் அவர்.
|
|