பாதிக்கப்பட்ட சாலை போக்குவரத்தை மீட்பது
cri
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளைச் செப்பனிட்டு, 3 ஆண்டுகளுக்குள் அவற்றின் தரம் மீட்கப்படும் என்று சீனப் போக்குவரத்து அமைச்சின் செய்தி்த் தொடர்பாளர் he jian zhong இன்று பெய்ஜிங்கில் தெரிவித்தார். சிச்சுவான் , கான் சூ, ஷான் சி முதலிய மாநிலங்களிலுள்ள 53 ஆயிரம் கிலோமீட்டர் நீளமான பல்வகை சாலைகள் இந்த நிலநடுக்கத்தால் நாசமடைந்தன. நேரடி பொருளாதார இழப்பு 6700 கோடி யுவானாகும் என்று தெரிய வருகின்றது. தற்போது, பெரும்பாலான சாலைகளின் போக்குவரத்து மீட்கப்பட்டுள்ளது. ஆனால், அவற்றின் தரம் மீட்கப்படவில்லை என்று he jian zhong கூறினார்.
|
|