2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றுடன், இன்னமும் வெள்ளத் தடுப்பு, நீர் பாசனம் போன்றவற்றில் முக்கிய பங்காற்றி வருகிற dujiangyanக்கு அருகிலான உலக மரபுச் செல்வமான சீனாவின் தாவிச மலையான qingcheng மலையின் பண்டைக்கால கட்டிடங்கள் கடுமையாகச் சீர்குலைக்கப்பட்டு, சில பகுதிகள் இடிபாடுகளாக மாறியுள்ளன.

கடந்த சில நாட்களில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட jiangyou நகரத்திலுள்ள நூற்றுக்கு மேலான qing வம்சத்தின் கட்டிடடங்கள் ஏறக்குறைய வீழ்ந்துள்ளன. இந்நகரத்தின் மிக முக்கிய தொல் பொருளான லீ பை இல்லம் இந்த நிலநடுக்கத்தில் கடுமையாகச் சீர்குலைக்கப்பட்டது.

பூர்வாங்க புள்ளிவிபரங்களின்படி, சிச்சுவான் மாநிலத்தில் ஏறக்குறைய 60 அருங்காட்சியகங்கள், தொல் பொருள் பாதுகாப்பு நிலையங்கள், நினைவகங்கள் மற்றும் தொல் பொருட்களின் கிடங்குகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டன. நிலநடுக்கம் ஏற்பட்ட பின், சிச்சுவான் மாநிலத்தின் தொல் பொருள துறை ஊழியர்கள் தொடர்புடைய பணியில் ஓய்வின்றி ஈடுபட்டு வருகின்றனர். உரிய நேரத்தில் தொல் பொருட்களைப் பாதுகாத்து, வேறு இடங்களுக்கு இடம் மாற்றி வருகின்றனர்.

சிச்சுவான் மாநிலத்தின் பேரிடர் நீக்கப் பணியும், தொல் பொருட்கள் பாதுகாப்புப் பணியும், சீனத் தேசிய தொல் பொருள் ஆணையம் மற்றும் தேசிய தொல் பொருள் அருங்காட்சியகங்களின் ஆதரவைப் பெறுகின்றது. நிலநடுக்கம் ஏற்பட்ட பின், தேசிய தொல் பொருள் ஆணையம் நிபுணர்கள் குழுவை அனுப்பி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் தொல் பொருட்களின் பாதுகாப்பு மற்றும் இடம் மாற்ற பணிகளுக்கு வழிகாட்டினர். தவிரவும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி அவர்கள் மதிப்பிட்டனர்.

நண்பர்களே, சிச்சுவான் மாநிலத்தின் தொல் பொருள் பாதுகாப்பு என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.
|