அண்மையில், tashi lhunpo கோயிலை செப்பனிடும் திட்டப்பணி, அதிகாரப்பூர்வமாக துவங்கியது. இத்திட்டப்பணி, திபெத் 11வது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய தொல் பொருள் பாதுகாப்புத் திட்டப்பணிகளில் பெருமளவு ஒதுக்கீடு செய்யப்படும் தனித் திட்டப்பணியாகும். நடுவண் அரசு, எல்லா நிதியையும் இதற்கென ஒத்துக்கிவைக்கின்றது.

Ta shi lhunpo கோயில், திபெத்தின் ri ka ze நகரின் வடமேற்குப் பகுதியின் ni ma மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. அதன் பரப்பளவு, 2 இலட்சத்து 37 ஆயிரம் சதூர மீட்டர் ஆகும். 1447ம் ஆண்டில், இக்கோயில் கட்டப்பட்டது. 1961ஆம் ஆண்டில், Ta shi lhunpo கோயில், வரலாற்றுச் சிறப்புமிக்க அரிய இடங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டது. ஆனால், நீண்டகால வரலாறுடையை இக்கோயில் பழுது பார்க்கப்படாமல் இருப்பதால் அதன் கட்டிடசுவர்களில் பல அபாயநிலையில் உள்ளன. இச்செப்பனிடுதல் பணி இக்கோயிலுள்ள பல்வேறு மண்டபங்களுக்கான முழுமையான செப்பனிடுதலை மேற்கொள்ளும். அவற்றில், தீ அணைப்பு, பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட துணை திட்டப்பணிகள் அடங்குகின்றன. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தொல்பொருள் துறையின் பண்பாட்டுப் பாதுகாப்பு பிரிவின் தலைவர் liu shizhong கூறியதாவது

Ta shi lhunpo கோயிலைப் பாதுகாத்து, செப்பனிடும் திட்டப்பணியில், சீன அரசு, 12 கோடி யுவானை ஒதுக்கீடு செய்தது. 4வது pan chenனின் கோபுர மண்டபம் உள்ளிட்ட பல மண்டபங்களின் செப்பனிடுதல் பணிகள் இதில் அடங்குகின்றன. அன்றியும், தீ அணைப்பு, பாதுகாப்பு அமைப்பு முதலிய துணை திட்டப்பணிகளும் அடங்குகின்றன என்றார் அவர்.
அதிகமான செப்பனிடும் பணிகள் மற்றும் பெருமளவு ஒதுக்கீடுகளால் 2007ம் ஆண்டின் ஏப்ரல் திங்களில், திட்டப்பணிக்கான ஒருங்கிணைப்பு தலைமைக் குழுவைத் திபெத் தன்னாட்சிப் பிரதேசம், சிறப்பாக நிறுவியுள்ளது. அத்துடன், லாசா, ri kaze, shan nan, a li முதலிய 4 நிர்வாக பிரதேசங்களிலும் நகரங்களிலும் திட்டப்பணித் தலைமையகங்கள் தனித்தனியாக நிறுவப்பட்டுள்ளன. ri kaze நகரின் அதிகாரி xu xueguang கூறியதாவது

பாதுகாப்பை முக்கியமாகக் கொள்ளுதல் மீட்புப் பணிக்கு முதலிடம் வழங்குதல், நியாயமான முறையில் பயன்படுத்துதல், மேலாண்மையை வலுப்படுத்துதல் என்ற தொல்பொருட்கள் பணியின் கோட்பாடுகளில் நாம் ஊன்றி நிற்க வேண்டும். தொல்பொருட்களைப் பழுது பார்த்தபின், பழைய மாதிரிகளை நிலைநிறுத்துவது என்ற தொல்பொருட்களைச் செப்பனிடும் கோட்பாட்டைச் செயல்படுத்த வேண்டும். பாரம்பரியத்துக்கு மதிப்பு அளித்து, அறிவியல் தொழில் நுட்பத்தைச் சார்ந்திருந்து, திபெத்-han ஒன்றிணைப்பு மேற்கொண்டு பரஸ்பரம் மேம்பாட்டை நிரப்ப வேண்டும். இவ்வாறு திட்டப்பணியின் தரத்தை உத்தரவாதம் செய்ய வேண்டும்.
tashi lhunpo கோயிலை செப்பனிடும் திட்டப்பணியின் துவக்கத்தை அக்கோயிலின் துறவிகள் வரவேற்கின்றனர். இதன் நிர்வாகக் குழுவின் துணை இயக்குநர் sa long ping la கூறியதாவது

நடுவண் அரசு, இக்கோயிலுக்கான மட்டற்ற கவனிப்பையும் பெருமளவு உதவியையும் tashi lhunpo கோயிலின் அனைத்து துறவிகளும், ஒருபோதும் மறக்க மாட்டார்கள். நாட்டைப் பாதுகாத்து, மக்களுக்குத் துணையான எழுச்சியை வெளிகொணர்ந்து, பல்வேறு பணிகளைச் செவ்வனே செய்து, நமது கட்சியின் மதக்கொள்கையையும் மத விவகார மேலாண்மை விதிகளையும் உணர்வுபூர்வமாக செயல்படுத்தி, இக்கோயிலின் பல்வேறு மத நடவடிக்கைகள் சட்டங்களுக்கும் விதிகளுக்கும் இணங்க, செயல்பட உத்தரவாதம் செய்ய வேண்டும் என்றார் அவர்.
திபெத், சீனாவில் பல தொல்பொருட்களைக் கொண்ட தன்னாட்சி பிரதேசங்களில் ஒன்றாகும். அதில், பல்லாயிரக்கணக்கான அசையா தொல்பொருட்கள் உள்ளன. அவற்றில் மூன்று, உலக பண்பாட்டு மரபு செல்வங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த நூற்றாண்டின் 50ம் ஆண்டுகளில் திபெத் அமைதி விடுதலை பெற்றது முதல், குறிப்பாக, சீனாவில் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி துவங்கியது முதல், நடுவண் அரசும் திபெத் தன்னாட்சிப் பிரதேசமும், தொல்பொருட்களைப் பாதுகாக்கும் பணியில் உயர்ந்த கவனம் செலுத்தின. மொத்தமாக, 70 கோடி யுவான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போதலா மாளிகையின் முதலாவது இரண்டாவது கட்டத் திட்டப்பணி, norbulingka கோடைகால மாளிகை, sajia கோயில் முதலிய முக்கிய தொல்பொருட்களைப் பாதுகாத்து செப்பனிடும் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளன. அது, திபெத்தின் முக்கிய வரலாற்றுப் பண்பாட்டு மரபுச் செல்வங்களை பயன்தரும் முறையில் பாதுகாத்துள்ளது. tashi lhunpo கோயில் செப்பனிடுதல் பணியை தவிர, the jokhang கோயில் ramoche கோயில் முதலிய கோயில்களைப் பாதுகாத்து செப்பனிடுவதற்கு பெருமளவு நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தொல்பொருள் துறையின் தலைவர் yu dawa கூறுகின்றார்.
போதலா மாளிகை, norbulingka கோடைகால மாளிகை, sajia கோயில் ஆகிய மூன்று முக்கிய தொல்பொருட்களைப் பாதுகாத்து செப்பனிடும் திட்டப்பணி, 2002ம் ஆண்டு ஜூன் திங்கள், அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. நடுவண் அரசு, மொத்தம் 33 கோடி யுவானை ஒதுக்கீடு செய்துள்ளது. இப்போது, இத்திட்டப்பணியின் 134 கிளைத் திட்டப்பணிகள் துவங்கியுள்ளன. பரிசோதனை மூலம், 129 கிளைத் திட்டப்பணிகள், நிறைவேறியுள்ளன. இவ்வாண்டுக்குள் முழுமையான திட்டப்பணி, நிறைவேறறப்படும் என்று yu dawa கூறுகின்றார்.
|