• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-20 09:28:04    
துணிவுடன் முன்னேறும் பியன் ஜியன் சின் அம்மையார்

cri
ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்ட பின், வாழ்க்கை மீதான பல ஊனமுற்றோரின் துணிவு, ஒலிம்பிக்கின் புனித தீபத்தால் ஏற்றப்பட்டுள்ளது. தங்களது மதிப்பை அவர்கள் கண்டுபிடித்ததோடு மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். தியன் ஜின் விளையாட்டு கல்லூரியில் இத்தகைய மகிழ்ச்சியான மக்கள் உள்ளனர். அவர்கள் சீன ஊனமுற்றோர் பளு தூக்கல் அணியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள். பியன் ஜியன் சின் அம்மையார் அவர்களில் மிக உற்சாகத்துடன் கூடிய ஒருவர்.
1993ஆம் ஆண்டு ஒருவரின் அறிமுகம் மூலம், பியன் ஜியன் சின் முதல்முறை பளு தூக்கல் அறையில் நுழைந்தார். பொது மக்களின் நினைவில், பளு தூக்கல் விளையாட்டு வீரர் நல்ல கட்டான உடல் அமைப்பு கொண்டவர். ஆனால், அப்போதைய பியன் ஜியன் சின்னின் எடை 36 கிலோகிராம் மட்டுமே. தம்மிடம் பயிற்சி பெற்ற பியன் ஜியன் சின்னைப் பற்றிய முதல் எண்ணத்தை பற்றி நினைத்து, பயிற்சியாளர் லீ வெய் பூ புன்கையுடன் கூறியதாவது—
"பளுதூக்கலில் பயன்படுத்தப்படும் இரு பக்கம் எடைக்களை தாங்கும் கோல் 20 கிலோகிராம் எடையுடையது. இந்த கோலை அவரால் தூக்க முடியாது என நான் கருதினேன்" என்றார் அவர்.

ஆனால், பியன் ஜியன் சின் 40 கிலோகிராம் எடையைத் தூக்கினார். பயிற்சியாளர் லீ எதிர்பார்த்த வரையறையை இது பெருமளவில் தாண்டியது. வியப்பு மற்றும் மகிழ்ச்சியுடன், பியன் ஜியன் சின்னை தம்மிடம் பயிற்சி பெற அவர் தயக்கமின்றி ஏற்றுக் கொண்டார். அதற்குப் பின்னர், பளு தூக்கல் பாதையில் பியன் ஜியன் சின் நிதானமாக முன்னேறி வருகிறார். உள் நாடு மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்ற பல்வகை ஊனமுற்றோர் பளு தூக்கல் விளையாட்டுப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்றது மட்டுமல்ல, 40 கிலோகிரம் எடைப் பிரிவின் உலகப் பதிவையும் அவர் பல முறை தகர்த்தார்.
தனது வரம்பைத் தாண்ட தொடர்ந்து பாடுபடும் அதே வேளையில், போராட்டத்துக்கான தனது இலக்கு இழந்தது என்று பியன் ஜியன் சின் கண்டறிந்தார். அப்போது, பாராவிம்பிக் எனப்படும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி அரங்கே அவர் நிற்க விரும்பிய அரங்காகும். ஆனால், 1996ஆம் ஆண்டுக்கு முன் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மகளிர் பளு தூக்கல் போட்டி இடம்பெறவில்லை. சற்று பின்னர், பயிற்சியாளர் நற்செய்தியைக் கொண்டு வந்தார்.

மகளிர் பளு தூக்கல் போட்டி, ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் புதிதாக சேர்க்கப்பட்டது என்பதே அந்தச் செய்தி. இதனால் போராட்டத்துக்கான இலக்கை கண்டுபிடித்த பியன் ஜியன் சின், மேலும் கடினமான பயிற்சியில் ஈடுபடத் துவங்கினார்.
உடல் எடையைக் கட்டுப்படுத்தும் வகையில், பல்லாண்டுகளாக வைத்திருந்த தலைமுடியை பியன் ஜியன் சின் வெட்டினார். சிட்னி ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, புதிய உருவத்துடன் அவர் தோற்றம் அளித்தார். சோதனை தூக்கலுக்கான 3 முறையும் புதிய உலக பதிவை உருவாக்கிய அவர், மிக பெரும் மேம்பாட்டுடன் சாம்பியன் பட்டம் பெற்றார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சாம்பியன் பட்டம் பெற்ற பின், அடுத்த இலக்கு என்ன என்பதைக் கருத்தில் கொண்ட பியன் ஜியன் சின் மறுபடியும் குழப்பம் அடைந்தார்.
2001ஆம் ஆண்டு ஜுலை திங்களில், ஒலிம்பிக் விளையட்டுப் போட்டி நடைபெற விண்ணப்பம் செய்யும் பிரதிநிதிக் குழுவில் ஒரேயொரு ஊனமுற்றோர் விளையாட்டு வீரராக பியன் ஜியன் சின் மாறினார். அவரது கருத்தில் இதனால் பெரும் மாற்றம் ஏற்பட்டது. "சீனாவின் விண்ணப்பம் வெற்றி பெற்றது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தாய்நாட்டில் நடைபெறவுள்ளது. எனவே 2008ஆம் ஆண்டிற்கு பாடுபடுவேன். தாய்நாட்டில் ஐந்து நட்சத்திர செங்கொடி பறக்கவிடவும் தேசிய கீதம் இசைக்கப்படவும் செய்ய வேண்டும்" என்றார் பியன் ஜியன் சின் அம்மையார். 1993ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரையான 7 ஆண்டுகளில், ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டி

பியன் ஜியன் சின்னின் போராட்ட இலக்காகும். 2001ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரையான மற்றொரு 7 ஆண்டுகளில், 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி அவருக்கு ஊக்கமளிக்கும் ஆற்றலாகும்.
2005ஆம் ஆண்டு பியன் ஜியன் சின்னுக்கு அழகான குழந்தை பிறந்தது. அவர் விளையாட்டுக் களத்திற்குத் திரும்பப் போவதில்லை என்று அப்போது பலர் கருத்து தெரிவித்தனர். ஆனால், தனது மகன் 4 திங்கள் வயதான போதே, பியன் ஜியன் சின் மீண்டும் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார். கடினமான பயிற்சியில் அவரது இலக்கு மாறவில்லை. ஆனால் அவருக்கு ஊக்கமளிக்கும் ஆற்றலில் புதிய அம்சம் ஒன்று அதிகரித்தது. தனது மகன் தன்னை நினைத்து பெருமைப்படச் செய்ய வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.